ஜோக்கர் போன்ற மாறுபட்ட படங்களை இயக்கிய ராஜு முருகன் வழங்கும் புதிய படம் பராரி.
இப்படத்தை ராஜு முருகனிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்த எழில் பெரியவேதி இயக்குகிறார். இவர் இயக்கும் முதல் படம் இது.
இதில் ஹரிசங்கர் கதாநாயகனாக நடிக்க , சங்கீதா கல்யாண் கதாநாயகியாக நடிக்கிறார். இவர்களுடன் 40க்கும் மேற்பட்ட புதுமுக நடிகர் நடிகைகள் நடிக்கிறார்கள்.
இப்படத்தை ஸ்ரீதர் ஒளிப்பதிவு செய்கிறார். ஷான் ரோல்டன் ஜி. முத்துக்கனி இசை அமைக்கி றார்கள். சாம் ஆர் டி எக்ஸ் எடிட்டிங் கவனிக்கிறார். பயர் கார்த்தி ஸ்டண்ட் பயிற்சி அளிக்கிறார். அபிநயா, கார்த்திக் நடனம் அமைக்கின்றனர். ஏ ஆர் சுகுமாரன் அரங்கம் நிர்மாணிக். கிறார். சவுண்ட் டிசைன் அழகிய கூத்தன் மற்றும் சுரேன் ஜி. சவுண்ட் மிக்சிங் சுரேன் ஜி. பி ஆர் ஓ சுரேஷ் சந்திரா, அப்துல் ஏ நாசர்.
இப்படம் பற்றி இயக்குனர் எழில் பெரியவேதி கூறியதாவது:
70, 80 வருடமாக, வட தமிழ்நாட்டில் உள்ள தொழிலாளர்கள் வேலைக் காக புலம் பெயர்ந்து பெங்களூர் பகுதிக்கு செல்வார்கள். அங்கு மாம்பழ சீசன் காலத்தில் அவர்களுக்கு வேலை கிடைக்கும். அவர்கள் தமிழ்நாட்டில் இருக்கும் போது ஒரு வகையாகவும் அங்கு சென்ற பிறகு வேறு மாதிரியாக வும் செயல்படுவார்கள். இந்த உண்மைச் சம்பவங்களை மையமாக வைத்துத்தான் பராரி கதையை உருவாக்கினேன்.
இந்த கதையை பல தயாரிப்பாளர் களிடம் கூறினேன். அவர்கள் கதையை கேட்டுவிட்டு நன்றாக இருப்பதாக கூறினார்கள். படத்தின் கிளைமாக்சை கேட்ட வுடன் இப்படிப்பட்ட கிளைமாக்சில் எந்த நடிகர் நடிப்பார் என்று கேள்வி எழுப்பி படம் தயாரிக்க மறுத்து விடுவார்கள். இதனால் விரக்தி அடைந்து ஊருக்கு திரும்பி சென்று விடலாம் என்று முடிவு செய்தேன். என் எண்ணத்தை இயக்குனர் ராஜு முருகனிடம் நான் சொன்னபோது அவர் பதறிப்போனார். நீ ஒன்றும் கவலைப்பட வேண்டாம் நானே படத்தை தயாரிக்கிறேன் என்று முன்வந்தார். அதன் பிறகு படத்திற்கான வேலைகள் வேகமாக தொடங்கின.
இப்படத்தில் ஹீரோவாக நடிக்க ஹரி சங்கரை பார்த்தபோது அவர் 100 கிலோ எடை இருந்தார். ஆனால் இந்த கதாபாத்திரத்திற்கு அவர் இன்னும் ஒல்லியாக இருக்க வேண்டும். இது பற்றி அவரிடம் கூறியபோது எப்படியாவது கஷ்டப்பட்டு உடல் எடையை குறைக்கிறேன் என்றார். அதற்கான அவகாசம் கொடுத் தேன். அவர் 100 கிலோ எடையில் இருந்து 42 கிலோ எடைக்கு உடலை குறைத்து ஒல்லியானார். இது எனக்கு பெரிய ஆச்சரியத்தை அளித்தது. கதையை கூறிய போது அதை முழுவதுமாக உள்வாங்கிக் கொண்டு அந்த கதாபாத்திர மாகவே அவர் மாறி நின்றார் அத்துடன் இப்படத்தின் தயாரிப்பா ளராகவும் அவர் இணைந்தார்.
படத்தில் கதாநாயகியாக நடிப்பதற் காக பல புது முகங்களை தேடினேன் 200க்கும் மேற்பட்டவர் களை ஆடிஷன் செய்த பிறகும் பொருத்தமான முகம் கிடைக்க வில்லை. தமிழ் தெரிந்த, தமிழ் முகமாக இருக்க வேண்டும் என்பதற்காக தேடுதல் தொடர்ந்த போது அதற்கேற்ற முகமாக சங்கீதா கல்யாண் கிடைத்தார். அவரும் இந்த கதைக்கு அவ்வளவு பொருத்தமாக அமைந்துவிட்டார்.

வட தமிழ்நாட்டில் இருக்கும் இரண்டு விளிம்பு நிலை சமுதாயத்தைச் சேர்ந்த மக்களை மையப்படுத்தி கதை உருவாக். கப்பட்டிருக்கிறது. இரண்டு சமூகமாக இருக்கிறார்கள் கூலி வேலை தான் செய்கிறார்கள். ஒரே குலசாமியை கும்பிடுபவர்கள். ஒரே அளவு சம்பாத்தியம் கொண்டவர்கள், ஒரே அளவு பொருளாதார சூழல் உடைய வர்கள் . ஆனாலும் இவர்களுக்குள் நீ உயர்ந்தவன் நீ தாழ்ந்தவன் என்ற பேதம் மட்டும் மாறாமல் இருக்கிறது. அதற்குள் ஒரு பெரிய அரசியல் இருக்கிறது. இரண்டு சமூகமும் ஒன்று சேர்ந்து விடாமல் இருப்பதற்காக ஒரு சிலர் அரசியல் செய்து இவர்களை பிரித்து வைக்கிறார்கள். இந்த அரசியல் காலம் காலமாக தொடர்ந்து கொண்டிருக்கிறது. ஆனால் இதுவரை இந்த அரசியலில் யாரும் பேசவில்லை. இது ஜாதி அரசியல் கிடையாது. ஒரு ஜாதியை மட்டும் உயர்த்தி இன்னொரு சாதியை தாழ்த்தி சொல்லும் கதையும் கிடையாது. இது சமுதாயத்தை சீர்திருத்தம் கதையாக உருவாக்கப்பட்டிருக் கிறது. இந்த கதை வந்த பிறகு ஜாதியைப் பற்றி படம் எடுப்ப. வர்கள் ஓய்ந்து போவார்கள்.
இது தவிர இதில் திராவிட நாடு பற்றி பேசியிருக்கிறேன். திராவிட நாடு என்றால் திராவிட அரசியல் கிடையாது. ஆனால் தமிழ்நாட்டி லிருந்து ஆந்திரா கர்நாடகா ஒடிசா வரை இந்த திராவிட கிளை செல்கிறது. தமிழ்நாட்டிலிருந்து தான் மற்ற மாநிலங்களுக்கும் இந்த திராவிட நாடு பிரிந்து சென்றிருக்கிறது ஆனால் அவர்கள் மாநிலம் என்று வரும் போது அவர்களுக்குள் ஒரு சுயநலம் வந்துவிடுகிறது.
நீ எந்த ஜாதி, எந்த மதமாவாவது இரு ஆனால் வேறு மொழி பேசும் ஆள்தான் என்ற ஒரு எண்ணம் வந்துவிடும். இதில் ஒரு விஷயம் என்னவென்றால் அஙகிருக்கும் மக்களும் சரி, இங்கு இருக்கும் மக்களும் சரி அன்பாகத்தான் இருப்பார்கள். யாரோ ஒரு சில பெரிய புள்ளிகள் இவர்களுக்குள் வேறுபாட்டை விதைத்துக் கொண்டே இருப்பான். அரசியலாக வோ, மதமாக்கவோ ஜாதியாக வோ இந்த வேறுபாட்டை அந்த பெரும்புள்ளிகள் புகை போட்டு வளர்த்துக் கொண்டே இருப். பார்கள். அவர்களைப் பிரித்து வைப்பார்கள் அல்லது சந்தர்ப்ப சூழல் பார்த்து மோதி சண்டை செய்து கொள்ள வைப்பார்கள். இப்படிப்பட்ட பூசல்கள் எல்லாம் மக்களிடம் ஒரு கட்டத்தில் காலாவதி ஆகிவிடும். இதைத் தான் இந்த படத்தில் சொலவிருக் கிறேன். இப்படத்தின் கிளைமாக்ஸ் 20 நிமிடம் இடம்பெறு கிறது. இதுவரை வராத ஒரு கிளைமாக்ஸ் ஆக இது இருக்கும்.
ஒரு விஷயம் மட்டும் உறுதியாக கூறிக் கொள்கிறேன் இப்படத்தை பார்ப்பவருக்கு பத்து நிமிடமாவது அல்லது ஒரு நாளாவது அவர்கள் மனதில் தங்கி ஒரு புரிதலையோ கேள்வியையோ எழுப்பாவிட்டால் இந்த கதையை தூக்கி குப்பைத் தொட்டியில் போட்டு விடுங்கள். இந்த படத்தின் டிரைலரில் காதல் இருப்பது போல் தெரியும் ஆனால் படத்தில் காதல் இருக்காது. அதைவிட முக்கியமாக மனிதம் பற்றி இப்படம் பேசுகிறது.
திருவண்ணாமலையை மையமாக வைத்து இக்கதையை உருவாக்கி இருக்கிறேன். இது முழுக்க கமர்சியல் படமாக தான் இருக்கும் நான்கு பாடல்கள், சண்டைக்காட்சி எல்லாம் இதில் உள்ளது அதில் தான் ஒரு நீண்ட அரசியல் பேசப்பட்டிருக்கிறது.
இந்த படத்தில் 40 புதுகங்கள் நடித்திருக்கிறார்கள். அவர்கள் எல்லோருமே phd படித்தவர்கள் . பல்வேறு பல்கலைக்கழகங்களில் பிஹெச்டி பட்டம் பெற்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் படத்தில் பார்த்தால் அவர்கள் phd படித்தது போலவே தெரியாது அப்படி பாத்திரங்களோடு ஒன்றிவிட்டார்கள்.
இவ்வாறு இயக்குனர் கூறினார்.
படத்தின் ஒளிப்பதிவாளர் ஸ்ரீதர் கூறும்போது,”பரியேறும் பெருமாள் படத்திற்கு பிறகு பராரி படத்தில் பணியாற்றுகிறேன். அந்தப் படத்தை விட பராரி படம் இன்னும் பெரிய விஷயங்களை பேசுகிறது. முக்கியமாக மனிதம் பற்றி பேசுகிறது. இப்படத்தில் நடித்தி ருக்கும் பெரும்பாலானவர்கள் புது முகங்கள் ஆனால் எல்லோருமே நாடக பின்னணி கொண்டவர்கள், படித்தவர்கள் அதனால் அவர்கள் எல்லோருக்கும் இந்த படம் என்ன அரசியலை பேசுகிறது என்பது தெரியும். முழு படத்தையும் அவர்கள் எந்த நேரத்தில் கேட்டாலும் ரிகர்சல் செய்து காட்ட தயாராக இருந்தார்கள் அதை பார்த்து நான் வியந்துவிட்டேன். இப்படி ஒரு படகுழுவை நான் இதுவரை பார்த்ததில்லை.
ஸ்கிரிப்டில் முதல் காட்சிமுதல் இறுதி காட்சிவரை இதில் நடித்த வர்கள் அனைவருக்கும் தெரியும். யார் வேண்டுமானாலும் எந்த பாத்திரத்திலும் நடிக்கச் சொன் னால் நடிப்பார்கள் இந்த அளவுக்கு அவர்கள் ஸ்கிரிப்ட்டை முழுமை யாக படித்து தயாராக இருந் தார்கள் என்பது ஆச்சரியப் பட வைத்தது
பராரி படம் நீண்ட அரசியலை பேசி இருக்கிறது. அது என்ன என்பது படம் வெளியாகும் போது. தெரியவரும்.
பட ஹீரோ ஹரிசங்கர் கூறும் போது,” என் உடல் எடை 100 கிலோவாக இருந்து அதை 42 கிலோவாக குறைத்தது உண்மை தான். அதற்காக நான் கடுமை யான உடற்பயிற்சிகள் செய்த துடன் கரும்பு வெட்டுவது முதல் பல்வேறு பணிகளை இந்த படத்திற்காக செய்வதற்காக நான் பயிற்சிகளை மேற்கொண்டேன் அந்த பயிற்சி ஒரு நாளைக்கு 8 மணி நேரமாவது நடக்கும். இப்படித்தான் என் உடல் எடையை நான் குறைத்தேன். இப்படத்தின் கதை எனக்கு மிகவும் பிடித்தி ருந்தது இப்படிப்பட்ட கதையில் நடிக்க வேண்டும் என்ற எண்ணம் இருந்த நிலையில் அதை தயாரிக் கவும் நான் ஒப்புக்கொண்டேன்.
பராரி படம் வட தமிழ்நாட்டின் ஒரு முக்கிய அரசியலை பேசும் படம் என்பதில் சந்தேகம் இல்லை” என்றார்
