Trending Cinemas Now
சினிமா செய்திகள் விமர்சனம்

பன்னிக்குட்டி ( பட விமர்சனம்)

படம்: பன்னிக்குட்டி
நடிப்பு: கருணாகரன், யோகிபாபு, சிங்கம்புலி, ராமர், தங்கதுரை, டி.பி.கஜேந்திரன், லட்சுமிப்ரியா, ஷாதிகா
இவர்களுடன் வெள்ளை பன்னிக்குட்டி வராகி

தயாரிப்பு: லைகா புரடக்‌ஷன் வழங்க சூப்பர்டாக்கிஸ்

இசை: கே

ஒளிப்பதிவு : சதீஷ் முருகன்

இயக்கம்: அனுசரண்

பி ஆர் ஒ: நிகில் முருகன்

தந்தை தாய், தங்கையுடன் வசிக்கிறார் கருணாகரன். குடும்பத்தில் உள்ள சிறு சிறு கஷ்டங்களை சமாளிக்க முடியாமல்ட தூக்குபோட்டு சாக முயல்கிறார். அவரை நண்பர்கள் ராமர், தங்கதுரை காப்பாற்றி மலை உச்சி  குகையிலிருக்கும் கோடங்கி லியோனியிடம் அழைத்துச் சென்று கஷ்டங்கள் தீர பரிகாரம் கேட்கின்றனர். அவரும் ஒரு வண்டியை திருடி அதில் மாலை வரை வலம் வரச் சொல்கிறார். வண்டியை திருடும் கருணாகரன் அதை பன்னிக்குட்டி மீது மோதிவிடுகிறார். அதற்கு கோடங்கியிடம் பரிகாரம் கேட்க அதே பன்னிக்குட்டி மீது மீண்டும் வண்டியை மோதும்படி கூறுகிறார். ஊரெல்லாம் பன்னிக்குட்டியை தேடி அலைகின்றனர். அதை யோகிபாபு வளர்ப்பது தெரிகிறது. அவரிடமிருந்து பன்னிக்குட்டியை கடத்தி வண்டியை கருணகரன் மோதுகிறாரா? இல்லையா?என்பதை கலகலப்புடன் சொல்கிறது கிளைமாக்ஸ்.

சில மூட நம்பிக்கைகள் மக்களிடம் ஊறிபோயிருக்கிறது. பன்றி மீது டூ வீலர் மோதிவிட்டால் அந்த வண்டியை விற்றுவிட வேண்டும் அல்லது அதே பன்றி மீது மோத வேண்டும் என்ற சென்டிமெட்டை மையமாக வைத்து இப்படத்தை இயக்கி இருக்கிறார் அனுசரண்.

எளிமையான கதையை கலகலப்புடன் இயக்கும் வகையில் நட்சத்திர தேர்வும் அமைந்துள்ளது. .கருணாகரன், யோகிபாபு, ராமர், தங்கதுரை, சிங்கம்புலி என எல்லாமே காமெடி பட்டாளம் இவர்களுடன் கோடங்கியாக திண்டுக்கல் ஐ.லியோனி நடித்துள்ளனர்.

அபச குண சென்டிமென்ட் ஒருபுறம் காமெடி டிராக் மறுபுறம் என கதை பறக்கிறது.

கருணாகரன் தூக்குமாட்டி சாக, கயிறுடன் புறப்படுவதும் ஒவ்வொரு முறையும் யாராவது அவரை காப்பாற்றுவதும் சகஜமாகி விடுகிறது.

குறிப்பிட்ட கூட்டுவரிசை எண்ணுள்ள டூவீலரை அந்த வண்டியின் ஓனர் முன்னிலையில் திருடுவதும் அதே வண்டியில் பன்னிக்குட்டி மீது மோதிவிட்டு கருணாகரன், ராமர், தங்கதுரை படும் அவதியும் அரங்கை சிரிப்பில் ஆழ்த்துகிறது.

திருமண சீதனமாக தரப்படும் வெள்ளைபன்னிக்குட்டியை யோகிபாபு, காரட், பீட்ருட், கோஸ் போன்ற காய்கறிகள் கொடுத்து தங்கமாக பார்த்துக்கொள் வதும் அந்த பன்னிக்குட்டி மீது வண்டியை மோத வேண்டும் என்று கருணாகரன் கேட்டதும் கோபம் அடைந்து அந்த கோஷ்டியை நய்ய புடைப்பதும் ஜோர்.

கோடங்கி ஐ.லியோனி பரிகாரம் சொல்ல அதை செய்த அடுத்த நொடியே கருணாகரனுக்கு நல்லது நடப்பதுபோல் நிஜத்தில் மற்றவர்களுக்கும் நடந்தால் எல்லோரும் கோடங்கியே கதி என்றிருப்பார்கள். சினிமாவில் பரிகாரத்துக்கு உடனே பலன் கிடைத்து விடுகிறது என்ன செய்ய..?

கிளைமாக்ஸில் பன்னிக்குட்டி மீது கருணாகரன் வண்டியை மோத பறப்பதும் மறுபக்கம் பன்னிக்குட்டியை காப்பாற்ற யோகிபாபு பறப்பதும் ஒரே பரபரப்பு.

காட்டுக்கோயில் பூசாரியாக வரும் சிங்கம்புலி அடிக்கடி பன்னிக்குட்டியை பிடிக்க செல்வதும் அதற்கு காரணத்தை மாற்றி போர்டில் எழுதி கோயிலில் மாட்டுவதும் ஸ்பெஷல் காமெடி.

லைகா புரடக்‌ஷன் வழங்க சூப்பர்டாக்கிஸ் தயாரித்துள்ளது.
இயக்குனர் அனுசரண் மூட நம்பிக்கை பற்றி சொல்லியிருந்தாலும் அதை வலியுறுத்தியிருப்பது கொஞ்சம் தடுமாற்றம் என்றாலும் இன்றைக்கும் அந்த முட நம்பிக்கையை நம்புபவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள் என்பதை மறுப்பதற்கில்லை.

இடையிடையே கருணாகரன், யோகிபாபு காதலிகளுடன் செய்யும் ரொமான்ஸ் ரிலாக்ஸ்.

இசை அமைப்பாளர் கே, ஒளிப்பதிவாளர் சதீஷ் முருகன் நியாயம் செய்திருக்கின் றனர்.

பன்னிக்குட்டி – பி அண்ட் சியில் ரசிகர்களுக்கு மெல்ல கிடைத்த அவல்.

 

 

Related posts

எஸ். டி ஆர்- கவுதம் கார்த்திக் இணையும் பத்து தல

Jai Chandran

தேசிய சிறந்த பட சிறப்பு விருது பெற்ற ‘ஒத்த செருப்பு’ பற்றி பார்த்திபன் கருத்து

Jai Chandran

“ஏஜென்ட் கண்ணாயிரம்” நாயகியாக ரியா சுமன் !

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend