படம்: பணி
நடிப்பு: ஜோஜு ஜார்ஜ், அபிநயா, சாகர் சூர்யா, ஜூனைஸ் பாபி குரியன்,
தயாரிப்பு: எம் ரியாஸ் ஆடம், சிஜோ வடக்கன் ,
இசை: விஷ்ணு விஜய், சாம் சி.எஸ்.
இயக்கம்: ஜோஜு ஜார்ஜ்
பிஆர் ஓ: யுவராஜ்
ஜோஜு ஜார்ஜ் கட்டிடம் கட்டும் நிறுவனம் நடத்துகிறார். அவரது மனைவி அபிநயா. அதே ஊரில் மெக்கானிக்குகளாக இருப்பவர்கள் சாகர் , ஜூனைஸ். மெக்கானிக் வேலையில் பணம் சம்பாதிக்க முடியாததால் கூலிப்படை ஆகிறார்கள். ஒரு கட்டத்தில் சாகர், ஜூனைஸ் மற்றும் , ஜோஜு ஜார்ஜுக்கும் மோதல் ஏற்படுகிறது. சாகர், ஜுனைஸ் இருவரும். ஜோஜு: குடும்பத்தினரை ஒவ்வொருவரையாக கொல்கின்றனர். இந்த மோதலுக்கு என்ன காரணம் இதன் முடிவு என்ன என்பதற்கு பணி கிளைமாக்ஸ் பதில் அளிக்கிறது.
சமீப காலமாக மலையாளத்தில் உருவாகி வரும் படங்களுக்கு ஒரு மவுசு இருக்கத்தான் செய்கிறது. அந்த பட்டியலில் இந்தப் படம் இடம் பிடிக்கும் என்று எதிர்பார்க்கலாம்.
நடிகராக வலம் வரும் ஜோஜு ஜார்ஜ் முதல் முறையாக இப்படத்தை இயக்கியிருக்கிறார். கிரைம் த்ரில்லர் கதைக்குண்டான ஸ்கிரீன் ப்ளே நன்றாக ஒர்க் அவுட் ஆகி இருக்கிறது..
மெக்கானிக்காக வரும் இளைஞர்கள் சாகர், ஜூனைஸ் கொடூரமான கூலிப்படை ஆட்களாக இருப்பார்கள் என்பதை யூகிக்க முடியவில்லை. குடையை மறைத்துக் கொண்டு செய்யும் முதல் சம்பவத்திலேயே திடுக்கிட வைக்கிறார்கள்.
ஜோஜு ஜார்ஜுக்கும், சாகர், ஜுனைனஸ் கூலிப்படை இளைஞர்களுக்கும் இடையே நடக்கும் மோதல்தான் படத்தின் முழுநேர கதையாக நீடிப்பது அலுப்புதட்டுகிறது. ஆஜானபாகு தோற்றம் கொண்ட ஜோஜு ஜார்ஜ் சாகர் கோஷ்டியிடம் அடுத்தடுத்து தோற்பது ஏமாற்றம்
கதை எங்கெங்கோ செல்லப் போகிறது என்று எதிர்பார்த்தால் ஜோஜு ஜார்ஜ் – சாகர் இடையே மோதலாக குறுகிய வட்டத்துக்குள் முடங்கிவிடுகிறது
நீண்ட நாட்களுக்கு பிறகு அபிநயா தமிழில் தலைகாட்டி இருக்கிறார். ஜோஜுவின் மனைவியாக இயல்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்.
எம் ரியாஸ் ஆடம், சிஜோ வடக்கன் தயாரித்திருக்கின்றனர்.
நடிகரான ஜோஜு ஜார்ஜ் ஒரு ஆக்ஷ்ன் படத்தை த்ரில்லாக தந்திருக்கிறார். இயக்குனராக. முதல் படத்திலேயே வெற்றி பெற்றிருக்கிறார்.
கேரளா பசுமையான அமைதியான இடம் என்பார்கள் ஆனால் அது எவ்வளவு பரபரப்பாக இயங்குகிறது என்பதை கேமராமேன் கச்சித்தமாக படமாக்கி இருக்கிறார்.
பணி – பழிக்கு பழி..