Trending Cinemas Now
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

காதல் காமெடியுடன் புதிய படம் “மிஸ்டர் பாரத்” : ஹீரோ, இயக்குனர் பேட்டி..

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், சத்யராஜ் நடித்த மிஸ்டர் பாரத் படம் 1980 களில் வெளியானது. ஏற்கனவே ரஜினி நடித்த பில்லா, முரட்டுக்காளை போன்ற டைட்டில்களில் வேறு நடிகர்கள் நடித்த படங்கள் வெளியாகி இருக்கின்றன. இந்த நிலையில் தற்போது மிஸ்டர் பாரத் என்ற பெயரில் புதிய படம் உருவாகி இருக்கிறது.

மிஸ்டர் பாரத் பெயரில் உருவாகும் புதிய படத்தில் பாரத் என்ற இளைஞர் புதுமுக கதாநாயகனாக அறிமுகமாகிறார். அவருக்கு ஜோடியாக சம்யுக்தா விஸ்வநாதன் நடிக்கிறார். இவர்களுடன் பால சரவணன், ஆர் சுந்தர்ராஜன், நிதி பிரதீப், லிங்கா, ஆதித்யா கதிர் ஆகியோர் நடிக்கிறார்கள்

பேஷன் ஸ்டுடியோஸ், ஜி ஸ்குவாட் மற்றும் தி ரூட் பட நிறுவனம் சார்பில் சுதன் சுந்தரம், லோகேஷ் கனகராஜ், ஜெகதீசன் பழனிச்சாமி இணைந்து தயாரிக்கிறார்கள். பிரணவ் முனிராஜ் இசையமைக்கிறார். திவாகர் டென்னிஸ் எடிட்டிங் செய்கிறார். பாவனா கோவர்தன் அரங்கம் அமைக்கிறார். ஓம் நாராயன் ஒளிப்பதிவு செய்கிறார். நிரஞ்சன் டைரக்ட் செய்கிறார். பிஆர்ஓ சுரேஷ் சந்திரா.

இப்படம் பற்றி இயக்குனர் நிரஞ்சன் கூறும்போது,’ மிஸ்டர் பாரத் படத்தை பொறுத்தவரை இது முழுக்க முழுக்க நகைச்சுவை கலந்த காதல் கதையாக உருவாகிறது. பொம்மைகள் உருவாக்கும் நிறுவனத்தில் பணிபுரியும் ஹீரோ காதலித்துத்தான் திருமணம் செய்ய வேண்டும் என்று எண்ணம் கொண்டவர். ஆனால் எந்த பெண்ணிடமும் காதல் சொல்ல அவருக்கு பயம். அதே போல் பெண்கள் யாராவது காதல் சொல்ல வந்தால் அதற்கு பதில் சொல்லவும் தெரியாமல் தவிக்கும் கூச்ச மனோபாவம் கொண்டவர். இவருக்கு காதல் வருகிறது. அது நிறைவேறியதா? இல்லையா? என்பதை காமெடி கலந்து இப்படம் கூறுகிறது.

இது வழக்கமான காதல் படமாக இல்லாமல் எந்த ஆபாச கலப்பும், மது குடிப்பது போன்ற காட்சிகள் இல்லாத ஒரு கிளீனான குடும்பத்துடன் அமர்ந்து பார்க்கக்கூடிய படமாக உருவாகி இருக்கிறது தணிக்கையிலும் படத்துக்கு யூ சான்றிதழ் தரப்பட்டுள்ளது.
இந்த கதை உண்மை சம்பவத்தை மையமாக கொண்டதா என்கிறார்கள். இந்த படத்தில் நடிக்கும் ஹீரோவின் குணாதசியம் நிஜத்தில் என்னுடைய குணாதசியம் போன்றது. என்னைப் போன்ற ஒரு கதாபாத்திரத்தை மையமாகக் கொண்டு படம் எடுத்தால் எப்படி இருக்கும் என்ற கற்பனை கலந்த பேண்டஸி காமெடி படம்தான் இது” என்றார்.

பட ஹீரோ பாரத் கூறும்போது, ” இயக்குனர் சொன்னபடி அவரது குணாதிசயத்தை மையமாக வைத்து தான் இந்த கதாபாத்திரம் உருவாக்கப்பட்டது. கதாபாத்திரத்திற்கு என்ன தேவையோ அந்த நடிப்பை என்னிடம் இயக்குனர் வாங்கி இருக்கிறார். இது நான் அறிமுகமாகும் முதல் படம் என்றாலும் என்னை சந்திப்பவர்கள் நீங்கள் சக மனிதர்களில் ஒருவர் போல் இருக்கிறீர்கள். அதனால் உங்கள் நடிப்பும் யதார்த்தமாகத்தான் இருக்கும் என்று நம்பிக்கை தெரிவிக்கிறார்கள். அதை எனக்கு கிடைத்த பாராட்டாக நான் பார்க்கிறேன். படத்தைப் பார்த்து ரசிகர்கள் ஆதரவு தர வேண்டும் ‘ என்றார்.

தயாரிப்பாளர் சுதன் சுந்தரம் கூறும் போது, “மிஸ்டர் பாரத் படத்தை நான் சிலருக்கு போட்டுக் காட்டினேன் அவர்கள் படத்தை பார்த்துவிட்டு நன்றாக வந்திருப்பதாகவும் குடும்பத்துடன் அமர்ந்து கவலை மறந்து சிரித்து ரசித்து பார்க்கலாம் அந்த அளவுக்கு இயல்பாக இந்த படம் இருக்கிறது என்று கூறினார்கள். விரைவில் இப்படத்தை திரையிட எண்ணி உள்ளோம்” என்றார்.

By

Jayachandhiran. K.

Trending cinemas now cokm

Related posts

அந்தகன் படம் புதிய அனுபவத்தை தரும்: பிரசாந்த் பேச்சு

Jai Chandran

கேன்சர் குழந்தைகளுடன் வரலட்சுமி பிறந்தநாள்

Jai Chandran

இயக்குநர் போயபத்தி ஸ்ரீனு, ராம் பொத்தினேனி இணையும் படம்

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend