’காதல் தேவதையா? கனவு வடிவமா? மிருணா..
தேசிய விருது வென்ற பாரம் படத்தின் எழுத்தாளர் ராகவ் மிர்தாத். இவர்
மிருணா படத்தை எழுதி தயாரித்து இயக்குகிறார் ராகவ் மிர்தாத். இதில் அருண்குமார், ஷரண்யா துராடி, வெற்றி, ஆதிரா, அனுபமாகுமார். கேரவேன் அருணாசலம். கோதை ஆகியோர் நடித்துள்ளனர். இதன் ஒளிப்பதிவை சி.வி.குரு செய்ய, பிரின்ஸ் முல்லா இசை அமைத்துள் ளார்.
தேசிய விருது வென்ற பாரம் படத்தின் எழுத்தாளர் ராகவ் மிர்தாத், மிருணா கதை பற்றி விளக்கினார்.
ஓர் அதிகாலை நேரம் ஜாக்கிங் செல்லும் போது அழகான பெண்ணை பார்க்கிறான் ஜீவா. இனம்புரியாத வாசனை மற்றும் ரம்மியமான கடல் அலைகளின் நடுவே பாறையின் மேல் நின்று அவள் தந்த பார்வை அவனை தடுமாற வைக் கிறது. அவ்வப்போது ஜீவா வாழ்வில் அந்த மர்மப் பெண்ணை வந்து மறைகிறாள். அவனால் அவளை கண்டுபிடிக்க முடிய வில்லை. நண்பன் பைத்தியமாகி விட்டா னோ என்று ஜீவாவை மனநல மருத்துவ ரிடம் அழைத்துச் செல்கிறான் அவனது தேடலுக்கு பதில் கிடைக்கிறதா?மிருணா என்பது உண்மையில் ஒரு பெண் தானா? இல்லை, தேவதையா, அல்லது ஜீவாவின் கற்பனையா ? இதற்கு மிருணா விடை அளிக்கிறது’ என்றார் இயக்குனர்.
மிருணா சிறப்பு பிரிமியர் காட்சி ரிகல் டாக்கிசில் வரும் 8ம்தேதி இரவு 8 மணிக்கு வெளியாகிறது.
