Trending Cinemas Now
சினிமா செய்திகள் விமர்சனம்

மெட்ராஸ் மேட்னி (பட விமர்சனம்)

படம்: மெட்ராஸ் மேட்னி

நடிப்பு: சத்யராஜ், காளி வெங்கட், ரோஷினி ஹரிப்பிரியன், ஷெல்லி கிஷோர், கீதா கைலாசம்

தயாரிப்பு: மெட்ராஸ் மோஷன் பிக்சர்ஸ்

இசை: கே.சி.பால சாரங்கன்

ஒளிப்பதிவு: ஆனந்த் ஜி கே.

இயக்கம்: கார்த்திகேயன் மணி

பி ஆர் ஓ: யுவராஜ்

குப்பை அள்ளும் தொழில் செய்து பின்னர் ஆட்டோ டிரைவர் வேலை பார்க்கும் கண்ணன் தன் மகன் மற்றும் மூத்த மகளை நன்கு படிக்க வைக்கிறார். ஐ டி கம்பெனியில் வேலை பார்க்கும் மகளுக்கு திருமணம் செய்து வைக்க முயல்கிறார் அதேசமயம் தன் மகனின் மேற்படிப்புக்கு வங்கியில் கடன் வாங்க முயல்கிறார். இதெல்லாம் ஒரு போராட்டமாகவே அவருக்கு மாறுகிறது. இதன் முடிவு என்னவாகிறது என்பது கிளைமாக்ஸ்.

சென்னை புறநகரில் வசிக்கும் ஒரு ஆட்டோ ஓட்டுனர் குடும்பம் எப்படி வாழ்கிறது என்பதை தத்ரூபமாக கண்முன் நிறுத்தியிருக்கிறார் இயக்குனர். இயக்குனரின் ஆட்டோ ஓட்டுநர் கண்ணன் கதாபாத்திரத்துக்கு உயிர் கொடுத்திருக்கிறார் காளி வெங்கட். இதுபோன்ற கதாபாத்திரம் என்றால் அதில் ஊறிப்போய் நடிப்பதை ஏற்கனவே சில படங்களில் காளியிடம் பார்த்திருக்கிறோம். அதற்கு சற்றும் குறையாமல் இதில் ஈடுபாடு காட்டியிருக்கும் காளி வெங்கட் நல்லதொரு குணசித்திர நடிகராக மனதில் இடம்
பிடிக்கிறார்.

காளி வெங்கட்டின் மனைவி, மகன், மகளாக நடித்திருப்பவர்களும் நிஜபாத்திரங்களாக வாழ்ந்திருக்கிறார்கள்.

எதிர்பாராத ஷாக் தருபவர் பச்சோந்தி பிரேமாவாக வரும் கீதா கைலாசம். மெட்ராஸ் பாஷையில் திருக்குறள் சொல்வது முதல் பஞ்சாயத்து பேசும் அரசியல்வாதி வரை வெளுத்து கட்டுகிறார்.

படத்தில் கதை சொல்லியாக வந்து காளி வெங்கட் கதையை ஒரு நாவலைப்போல் சத்யராஜ் கதையாக சொல்லச்
சொல்ல திரையில் காட்சிகள் நகர்வது வித்தியாச அனுபவம்.
ஊறுகாய்க்காரர் சாம்ஸ் வித்தியாசம் காட்டுகிறார்.

மெட்ராஸ் மோஷன் பிக்சர்ஸ் தயாரித்திருக்கிறது

கே.சி.பால சாரங்கன் கதையை ஓவர் டேக் செய்யாமல் காட்சிகளோடு ஒட்டும் இசையுடன் 70 காலக்கட்டத்தை ஞாபகப்படுத்துகிறார்

ஆனந்த் ஜி கே.ஒளிப்பதிவு ஓகே ரகம்.

இயக்குனர் கார்த்திகேயன் மணி நடுத்தர குடும்பம் ஒன்றின் அட்வெஞ்சரை நம்பிக்கையூட்டும் விதமாக இயக்கி உள்ளார். ஆனால் சில இடங்களில் காட்சிகள் டல்லடித்து தொய்வை ஏற்படுத்துகிறது.

மெட்ராஸ் மேட்னி – ஒரு குடும்பத்தின் கதையை அருகிருந்து பார்த்த உணர்வு.

 

Related posts

“தி சபர்மதி ரிப்போர்ட்ஸ்” படம் ZEE5 ல் ஸ்ட்ரீமாகவுள்ளது

Jai Chandran

‘மர்தானி’ 10-ஆம் ஆண்டு கொண்டாட்டம்; 3ம் பாகம் வெளியீடு

Jai Chandran

விஜயகாந்துக்கு மதுரையில் சிலை: அரசுக்கு டி எம் ஜே ஏ கோரிக்கை

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend