Trending Cinemas Now
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

புதிய பரிமாணத்தில் காதலை சொல்லும் ” காத்திருந்தேன்”

வளர்ந்துவரும் இளம் நடிகர் இளையா கதாநாயகனாக நடிக்கும் புதிய படத்தின் பெயர் :- ” காத்திருந்தேன் “.

அமராவதி கிரியேஷன்ஸ் சார்பில் ராம்கோவிந்த் தயாரிக்கும் ‘ காத்திருந்தேன்” படத்தில் சுஸ்மிதா நாயகியாக நடிக்கிறார். சுரேஷ் பாரதி, இளங்கோவன், ஆர்.கே. கோபிநாத், இளங்கேஸ்வரன், இராமசாமி, கணேஷ், புதுமுகம் காயத்ரி மற்றும் பலர் நடிக்கும் இந்த படத்திற்கு ரா.முத்துராஜ் ஒளிப்பதிவு செய்கிறார் – எஸ்.பி.விஜய் இசையமைக்கிறார்.

நாயகன்களில் ஒருவராக நடித்துக் கொண்டே இப்படத்தின் கதை, திரைக் கதை, வசனம் எழுதி தமது 2வது படமாக இயக்கும் சுரேஷ் பாரதி கதையை பற்றி கூறியதாவது, ”
முறையான காதல், கள்ளக்காதல், நல்ல காதல், என காதலில் பலவகை உண்டு. முற்றிலும் மாறுபட்ட முழுவதும் வேறுபட்ட காதலை சொல்ல உள்ளேன். இதுவரை தமிழ் சினிமா வரலாற்றில் சொல்லப் படாத காதல் கதை இது – காதலிக்கும் இருவரும் சேர்ந்து வாழக்கூடாது என்று இந்த சமுதாயம் நினைக்கிறது. தடைக்கு காரணம் சாதி, மதம், பணம், அரசியல் எதுவும் இல்லை. வேறு எதற்காக இவர்கள் கேரக்கூடாது என்பதை சஸ்பென்சாக இதுவரை யாரும் சொல்லப்படாத புதிய பரிணாமத்தோடு சொல்வதற்கு திரைக்கதையை வடிவமைத்துள்ளேன். நிச்சயம் மக்கள் வரவேற்பு அளிப்பார்கள் என்று நம்பிக்கையோடு கோவை, சேலம், கடலூர், காட்டுமன்னார்கோவில் பகுதிகளில் படமாக்குகிறேன்” என்று இயக்குனர் சுரேஷ் பாரதி கூறுகிறார்.

விஜயமுரளி
PRO

Related posts

Studio9 Productions Next Production Announcement on Jan 14t

Jai Chandran

பா ஜ விலிருந்து நடிகை குட்டி பத்மினி விலகல்

Jai Chandran

பிருந்தா மாஸ்டர் இயக்கத்தில் தயாராகும் ‘ தக்ஸ்’

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend