Trending Cinemas Now
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

வலிமையில் அஜீத்துடன் நிறைய காட்சிகளில் நடித்த ஹூமா அனுபவம் என்ன?

நடிகை ஹூமா குரேஷி, அஜித் குமாருடன் இணைந்து நடித்துள்ள ‘வலிமை’ திரைப்படம் வெளியாவதில் மிகுந்த உற்சாகத்தில் இருக்கிறார். பிப்ரவரி 24, 2022 அன்று உலகம் முழுவதும் இத்திரைப்படம் திரையரங்குகளில் வெளிவரத் தயாராக உள்ள நிலையில், இந்தப் படத்தில் பணிபுரிந்த தனது அற்புதமான அனுபவத்தைப் பகிர்ந்துள்ளார். இது குறித்து ஹூமா குரேஷி கூறும்போது, “வலிமை எனது சினிமா கேரியரில் மிகவும் சிறப்பானதொரு படம், எனது திறமையை பரிசோதித்து கொள்ள இதன் மூலம்  எனக்கு ஒரு அற்புதமான வாய்ப்பு கிடைத்துள்ளது. இயக்குனர் வினோத் சார் என்னுடைய கேரக்டரை நேர்மையான போலீஸ் அதிகாரியாக, நிறைய ஆக்சன் காட்சிகளைக் கொண்ட பாத்திரமாக உருவாக்கியுள்ளார். ஒவ்வொரு முறையும், நாங்கள் ஆக்சன் பிளாக்குகள் என்றாலே, நான் உற்சாகமாக இருப்பேன். பொதுவாக, ஒரு ஆக்‌ஷன்-த்ரில்லர் திரைப்படத்தில் ஆண் கதாப்பாத்திரங்களுக்கு மட்டுமே அதில் நடிக்கும் வாய்ப்புகள் இருக்கும், ஆனால் வினோத் சார் பெண் கதாபாத்திரங்களைத் கணம் மிகுந்த  பாத்திரமாக உருவாக்கி திரைத்துறைக்கு  முன்னுதாரணமாக திகழ்கிறார். குறிப்பாக, எனது பாத்திரம் திரையில் நிறைய இடத்தைப் பெற்றிருப்பதைக் காண மிக மகிழ்ச்சியாக  உள்ளது. நடிகர் அஜித் குமார் பற்றி அவர் மேலும் கூறுகையில், முன்னதாக “பில்லா 2 படத்தில் நாங்கள் இருவரும் இணைந்து பணியாற்ற வேண்டியது, ஆனால் சில காரணங்களால் அது நடக்கவில்லை. வலிமை படத்திற்கான அழைப்பு வந்தபோது, நான் இந்தியத் திரையுலகின் மிகப் பெரிய நடிகர்களில் ஒருவருடன் திரையைப் பகிரப் போகிறேன் என்பது, எனக்கு மிகப்பெரும் உற்சாகத்தை தந்தது. வலிமை படத்தில் அஜித்குமார் சாருடன் இணைந்து நான்  நிறைய காட்சிகளில் வருகிறேன், எங்கள் காட்சிகளை ரசிகர்கள் கண்டிப்பாக கொண்டாடுவார்கள் என்றார்.

வலிமை படத்தினை  இயக்குநர் H.வினோத் எழுதி இயக்கியுள்ளார், Bayview Project LLP சார்பில் தயாரிப்பாளர் போனி கபூர் இப்படத்தை தயாரித்துள்ளார். இந்த வருடத்திற்கான தமிழ் திரைப்பட பட்டியலில் ரசிகர்களின் பேராதரவை பெற்று, எதிர்பார்ப்பில் நம்பர் 1 இடத்தைப் பிடித்துள்ள நிலையில், இப்படம் தெலுங்கு, கன்னடம், இந்தி உள்ளிட்ட பல்வேறு பிராந்திய மொழிகளிலும் பிரம்மாண்டமாக வெளியாகவுள்ளது. யுவன் ஷங்கர் ராஜாவின் பாடல்கள் ஏற்கனவே ரசிகர்களின் தரவரிசையில் முதலிடத்தைப் பிடித்துள்ளன, மேலும் நீரவ் ஷாவின் ஒளிப்பதிவில் காட்சிகள் மற்றும் விஷுவல் ப்ரோமோக்களில் மனதைக் கவரும் அதிரடி காட்சிகள் வலிமை மீதான எதிர்பார்ப்பை மென்மேலும் அதிகரிக்கச் செய்துள்ளன.

 

Related posts

அஞ்சாமை படத்துக்கு இயக்குனர்கள் பாராட்டு

Jai Chandran

முதல்வருக்கு தயாரிப்பாளர்கள் சங்கம் நன்றி

Jai Chandran

An Associate of Director Pa. Ranjith debuts

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend