படம்: குமார சம்பவம்
நடிப்பு: குமரன் தியாகராஜன், பாயல், ஜி எம் குமார், குமரவேல, பால சரவணன், வினோத் சாகர், லிவிங்ஸ்டன், வினோத் முன்னா சிவா அரவிந்த்
தயாரிப்பு: கே ஜி கணேஷ்
இசை: அச்சு ராஜாமணி
ஒளிப்பதிவு: ஜெகதீஷ்
இயக்கம்: பாலாஜி வேணுகோபால்
பிஆர்ஓ: நிகில் முருகன்
ஜமீன் வீட்டு பிள்ளையாக இருந்தாலும் சினிமாவில் இயக்குனராகி ஜெயிக்க வேண்டும் என்பது குமரன் (குமரன் தியாகராஜன்) எண்ணம் அதற்காக பல்வேறு இடங்களில் முயற்சி செய்கிறார். இந்நிலையில் குமரனது வீட்டில் குடியிருந்த சமூக சேவகர் குமரவேல் (வரதராஜன்) மர்மமான முறையில் கொலை செய்யப்படுகிறார் . இந்த விவகாரம் குமரன் வாழ்க்கையை புரட்டி போடுகிறது. வரதனை கொன்றது யார் என்று போலீஸ் விசாரிக்கிறது. இந்த விசாரணையில் குமரன் உள்ளிட்ட பல நபர்கள் விசாரணைக்கு உள்ளாகிறார்கள். வரதனை கொன்றது யார் என்று கண்டுபிடிக்க குமரனே தனிப்பட்ட முறையில் துப்பறியும் வேலையில் ஈடுபடுகிறார். இறுதியில் நடப்பது என்ன என்பதற்கு கிளைமாக்ஸ் பதில் சொல்கிறது..
மர்மக் கொலை என்றதும் ரொம்பவும் சீரியஸான கதையாக இருக்குமோ என்று எண்ண வேண்டாம் இதை கிரேசி மோகன் பாணியில் ஒரு காமெடி கலந்த க்ரைம் ஸ்டோரியாக இயக்கியிருக்கிறார் பாலாஜி வேணுகோபால்.
புதுமுக ஹீரோவாக குமரன் தியாகராஜன் அறிமுகமாகியுள்ளார் ஆக்சன் அதிரடி காட்டி தனது திறமையை நிரூபிக்க வேண்டும் என்ற அவசியம் எல்லாம் இவருக்கு ஏற்படவில்லை ஏனென்றால் கதை காமெடி களத்தை சுற்றி அமைக்கப்பட்டிருப்பதால் அதற்கெல்லாம் வாய்பில்லை ராஜா…
முடிந்தவரை கதாபாத்திரத்தோடுஒன்றி நடித்திருக்கிறார் குமரன். ஒரு கட்டத்தில் தனது நண்பன் குமரவேலை கொன்றது யார் என்ற கேள்விக்கு பதில் அறிய மூன்று வில்லன்களிடம் உண்மையை கண்டறிய வினோத் சாகரை சிபிஐ ஆபீஸராக நடிக்க அனுப்பி வைப்பதும், அவர் வில்லன்களைப் பார்த்து நடுங்கியபடி கேள்வி கேட்பதும் குலுங்க வைக்கும் காமெடி.
குமரன் காதலியாக பாயல் நடித்திருக்கிறார். தெலுங்கு வரவான பாயலுக்கு அதிக வேலை இல்லை.
ஜமீன்தராக ஜி எம் குமார் நடித்துள்ளார். சமூக சேவகராக வரும் குமரவேல் கதையின் மையப் புள்ளியாக நடித்திருப்பதுடன் அவரை வைத்து இயக்குனர் ஒரு சில டிவிஸ்டுகளையும் வைத்திருக்கிறார் அதையெல்லாம் படம் பார்க்கும்போது தெரிந்து கொள்ளுங்கள்.
காமெடி படம் என்பதால் இன்னும் கூட பல காட்சிகளை ஆக்சன் காமெடிகளாக வைத்து முழு நீள காமெடி கதையாக இயக்குனர் மாற்றியிருக்கலாம்.சில பல காமெடி நடிகர்களையும் நடிக்க வைத்திருக்கலாம்.
சிவகார்த்திகேயன் நடித்த டாக்டர் படத்தில் கிளி போல் பேசி காமெடி செய்த சிவா அரவிந்த் இந்த படத்தில் காமெடியை மூட்டை கட்டி வைத்துவிட்டு போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆக நடித்திருக்கிறார். இதற்கு அவர் காமெடியனாகவே நடித்திருக்கலாம். எது ஒர்க்கவுட்டாகிறதோ அதை கெட்டியாக பிடித்துக் கொள்வதுதான் புத்திசாலித்தனம்.
கே ஜி கணேஷ் படத்தை தயாரித்து இருக்கிறார்.
அச்சு ராஜாமணி இசை, ஜெகதீஷ் ஒளிப்பதிவு செய்கூலி உண்டு சேதாரம் இல்லை
குமார சம்பவம் – காமெடி களம்.
Review By:
Jayachandhiran k
Trendingcinemasnow.com