Trending Cinemas Now
சினிமா செய்திகள் விமர்சனம்

கிஸ் (பட விமர்சனம்)

படம்: கிஸ்

நடிப்பு: கவின், ப்ரீத்தி அஸ்ராணி, பிரபு, வி டிவி கணேஷ், ஆர் ஜே விஜய், ராவ் ரமேஷ், தேவயானி, கௌசல்யா

தயாரிப்பு: ராகுல்

இசை: ஜென் மார்ட்டின்

ஒளிப்பதிவு: ஹரிஷ் கண்ணன்

இயக்கம்: சதீஷ்

பிஆர்ஓ: சுரேஷ் சந்திரா (D ‘One), அப்துல் ஏ நாசர்

நெல்சனுக்கு ( கவின்) யாராவது லிப் டு லிப் கிஸ் கொடுப்பதை பார்த்தால் அவர்களுக்கு அடுத்து என்ன நடக்கப் போகிறது என்ற காட்சிகள் தெரிகிறது. அந்த சம்பவங்கள் அப்படியே நடக்கின்றன. ஒரு கட்டத்தில் நெல்சனுக்கு சாரா (ப்ரீத்தி அஸ்ராணி) மீது காதல் வருகிறது. திடீரென்று சாரா நெல்சனுக்கு முத்தம் தரும்போது ஒரு அதிர்ச்சி காட்சி தெரிகிறது.  பயந்து போன நெல்சன் அவரை விட்டு விலகுகிறார். பிரிந்த இருவரும் ஒன்று சேர்ந்தார்களா? நெல்சனுக்கு இதுபோன்ற காட்சிகள் தெரிவது ஏன் ? என்ற கேள்விகளுக்கு படம் பதிலளிக்கிறது.

காதல் கலந்த ஃபேண்டசி படத்தை இயக்கியிருக்கிறார் சதீஷ். நடன இயக்குனரன இவர் இப்படம் மூலம் இயக்குநராக அறிமுகமாகியிருக்கிறார். தத்துவமான கதை சொல்கிறேன் என்று ஏடாகூடமாக எதையும் செய்யாமல் இளைஞர்களை கவரும் வகையில் கமர்சியல் காதல் கதையை தந்திருக்கிறார்.

கவின், காதலுக்கு எதிரி என்பது போல் காட்டுவதற்கு படத்தின் தொடக்கத்தில் ஒரு காரணம் சொல்லப்படுகிறது. அந்தக் காட்சியை தவறவிட்டால் அடுத்து கதை புரியாது.

ஏற்ற கதாபாத்திரத்தில் ஓவர் ஆக்டிங் இல்லாமல் செய்து முடிப்பது கவின் இயல்பு. இந்த படத்திலும் அதைத்தான் செய்திருக்கிறார். ஆனால் பல காட்சிகளில் முகத்தை வெறுமனே வைத்துக்கொண்டு பார்ப்பதெல்லாம் ஏன் இப்படி இருக்கிறார் ஏதாவது ரியாக்ஷன் கொடுத்திருக்கலாமே என்று எண்ண வைக்கிறார்.

கவினும் சரி, இயக்குனர் சதீஷும் சரி, கதாநாயகி ப்ரீத்தியம் சரி நடனம் ஆடுவதில் கில்லாடிகள். அதை இயக்குனர் சதீஷ் அளவோடுதான் பயன்படுத்தியிருக்கிறார். போட்டி நடன காட்சிகள் வைத்து படத்திற்கு ஒரு ஹைலைட்டை அமைத்திருக்கலாம்.

அயோத்தி படத்தில் நடித்த ப்ரீத்தி அஸ்ராணியா இந்த படத்தில் நடித்திருக்கும் ப்ரீத்தி என்று கேட்கும் அளவுக்கு ரொம்பவே கிளாமராக வருகிறார்.

கவின் நண்பராக வரும் விஜே விஜய் அவ்வப்போது காமெடி செய்கிறார். வி டிவி கணேஷ் காமெடி என்ற பெயரில் பிளேடு போடுகிறார். சில இடங்களில் இரட்டை அர்த்தத்தில் வசனங்கள் பேசி குமட்ட வைக்கிறார்.

பிரபு, தேவயானி, கௌசல்யா, ராவ் ரமேஷ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

ராகுல் படத்தை தயாரித்திருக்கிறார்.

ஜென்மார்ட்டின் இசையும், ஹரிஷ் கண்ணன் ஒளிப்பதிவும் படத்திற்கு பிளஸ்.

இயக்குனர் சதீஷின் முதல் முயற்சி சோடை இல்லை. ஆனால் இது போதாது…

கிஸ் – ஓ கே ரகம்.

Review By

K.Jayachandhiran

Trendingcinemasnow.com

Related posts

தி லிப் பாம் நிறுவனம் முதல் பிறந்தநாளில் நயன்தாரா

Jai Chandran

‘Yourbackers play’ இலவச OTT தொடக்க விழா- திரையுலகினர் வாழ்த்து..

Jai Chandran

New Trailer & Poster for James Gunn’s #TheSuicideSquad,

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend