Trending Cinemas Now
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

புது இயக்குனர் இயக்கத்தில் கிரண் அப்பாவரம்..

ஜீ ஸ்டுடியோஸ் மற்றும் பிரேர்ணா அரோராவின் அடுத்த பான் இந்தியா திரைப்படம் அக்டோபரில் தொடங்குகிறது… கதாநாயகனாக கிரண் அப்பாவரம் நடிக்க, இயக்குநராக ஸ்ரீகாந்த் புப்பாலா அறிமுகமாகிறார்!*

ஜீ ஸ்டுடியோஸ் மற்றும் தயாரிப்பாளர் பிரேர்ணா அரோரா இணைந்து தயாரிக்கும் அடுத்த பிரம்மாண்டமான பான் இந்தியா திரைப்படத்தில், இளம் முன்னணி நடிகர் கிரண் அப்பாவரம் கதாநாயகனாக நடிக்கிறார். தற்காலிகமாக ‘KA16’ எனத் தலைப்பிடப்பட்டுள்ள இந்தப் படத்தின் படப்பிடிப்பு அக்டோபர் மாதத்தில் தொடங்குகிறது.

 

ஜீ ஸ்டுடியோஸ், பிரேர்ணா அரோரா மற்றும் கிரண் அப்பாவரம் ஆகியோர் இணையும் இந்தத் திரைப்படத்தை அறிமுக இயக்குநர் ஸ்ரீகாந்த் புப்பாலா இயக்குகிறார்.

மொழி மற்றும் எல்லைகளைக் கடந்து பலதரப்பட்ட ரசிகர்களையும் சென்றடையும் நோக்கில் உருவாகும் இந்தப் படம் வலுவான தொழில்நுட்பக்குழுவினர் மற்றும் திறமையான நடிகர்களையும் கொண்டுள்ளது.

வித்தியாசமான மற்றும் ஈர்க்கக்கூடிய கதைகளுக்கு தொடர்ந்து ஆதரவு அளித்து வரும் ஜீ ஸ்டுடியோஸ், இந்திய திரைப்படத் துறையில் தனது இடத்தை மேலும் வலுப்படுத்தி வருகிறது. அதேபோல், பிரம்மாண்டமான திரைப்படங்களை தயாரித்த அனுபவம் கொண்ட பிரேர்ணா அரோரா, இந்தத் திரைப்படத்தையும் பிரம்மாண்டமாக தயாரிக்கிறது.

கிரண் அப்பாவரம் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கும் இந்தப் படத்தை அறிமுக இயக்குநர் ஸ்ரீகாந்த் புப்பாலா இயக்குகிறார். நிச்சயமாக இந்தப் படம் ரசிகர்களுக்கு மறக்க முடியாத திரையனுபவத்தை வழங்கும் என படக்குழு நம்பிக்கை தெரிவித்துள்ளது.

படத்தின் தலைப்பு, நடிகர்கள், தொழில்நுட்பக்குழு குறித்தான விவரங்கள்
மற்றும் அடுத்தடுத்த அப்டேட் விரைவில் வெளியாகும்.

 

Related posts

G.V.Prakash Kumar in Disney Hot Star – Kavithalaya Movie

Jai Chandran

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்ஸிஜன் தயாரிக்க அனுமதி.. அனைத்து கட்சி கூட்டத்தில் முடிவு

Jai Chandran

Team HeySinamika Whishes Dulquer Salmaan

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend