படம்: கருப்பு பல்சர்
நடிப்பு: தினேஷ், ரேஷ்மா வெங்கடேஷ், மதுநிகா, மன்சூர் அலிகான், சரவண சுப்பையா, கலையரசன் கண்ணுசாமி , பிராங்க் ராகுல்
தயாரிப்பு: முரளி கிருஷ்ணன்
இசை: இன்பா
ஒளிப்பதிவு: பாஸ்கர் ஆறுமுகம்
இயக்கம்: முரளி கிரஷ். எஸ்
பிஆர்ஓ: பி.தியாகராஜன், ஆர்.மணி மதன்
ஆர் ஓ பியூரிஃயர் வாட்டர் விற்கும் தினேஷ் மேட்ரிமோனியில் வரும் அழைப்பை ஏற்று ரேஷ்மாவை சந்திக்கிறார். இருவரும் காதலித்து திருமணம் செய்ய முடிவு செய்கின்றனர். ரேஷ்மாவிடம் பேசும்போது தன்னிடம் கருப்பு பல்சர் பைக் இருப்பதாக பொய் சொல்கிறார் தினேஷ். அதில் தன்னை அழைத்துச் செல்லும்படி ரேஷ்மா கூறியதும் வேறுவழியில் லாமல் பழைய செக்கண்ட்ஸ் கருப்பு பல்சர் பைக் ஒன்றை வாங்குகிறார். அதை வாங்கியதிலிருந்து தினேஷுக்கு ஏடாகூடமான சம்பவங்கள் நடக்கின்றன. ஒரு கட்டத்தில் அந்த பைக்கில் ஜல்லிக்கட்டு காளை ஒன்றின் ஆவி புகுந்திருப்பது தெரியவர அதிர்ச்சி ஆகிறார்.
பைக்கிற்குள் காளை ஆவி புகுந்தது எப்படி ? எதற்காக அந்த பைக் தினேஷிடம் வந்து சேர்ந்தது போன்ற மர்மமான கேள்விகளுக்கு கிளைமாக்ஸ் பதில் அளிக்கிறது.
படத்தின் தொடக்கம் தண்ணீர் ஃபேக்டரி நடத்தும் மன்சூர் அலிகானுக்கும், வாட்டர் பியூரிஃபையர் விற்கும் தினேஷுக்கும் இடையே நடக்கும் மோதலாக இந்த கதை செல்லப்போகிறது என்று எதிர்பார்த்தால் திடீரென்று கருப்பு பல்சர் பைக்கில் காளை மாட்டு ஆவி இருக்கிறது என்பது தெரியும்போது அதிர்ச்சி ஏற்படுகிறது.
பைக்கிற்குள் இருக்கும் ஆவி யாரைப் பழி வாங்கப் போகிறது என்பதை சஸ்பென்சாக வைத்திருப்பது பரபரப்பை அதிகரிக்கிறது.

ஜல்லிக்கட்டு காளையை தினேஷ் அடக்கும் காட்சிகள் சிலிர்ப்பு. அனேகமாக இது AI காட்சிகளாக இருக்காது.. நிஜத்திலேயே தினேஷ் ஜல்லிக்கட்டு களத்தில் இறங்கி இருந்தால் அது பெரிய துணிச்சலான சம்பவம்தான்.
ஹீரோயின் ரேஷ்மா வெங்கடேஷ் அழகு. அலட்டல் இல்லாமல் நடித்து கவர்கிறார்.
மன்சூரலிகான் காமெடி வில்லனாக நடித்திருக்கிறார். பிராங்க் ராகுல் சிரிக்க வைக்கிறார்.
முரளி கிருஷ்ணன் தயாரித்திருக்கிறார்.
புதுமுக இசையமைப் பாளர் இன்பா இசையும், பாஸ்கர் ஆறுமுகம் காமிராவும் பிளஸ்.
இயக்குனர் எம்.ராஜேஷிடம்.உதவி இயக்குனராக இருந்த
முரளிகிரிஷ் எஸ் தனது குருவின் பாணியில் முதல் பாதியை கலகலப்பாக இயக்கி ரிலாக்ஸ் செய்ய வைத்து கடைசி 30 நிமிடம் ஆக்ஷன், அமானுஷ்யம் என்று ஈடுகட்டியிருக்கிறார்.
கருப்பு பல்சர் – ஆக்சன், அமானுஷ்ய பிரியர்களுக்கு..

Review By
K.Jayachandhiran
Trending cinemas now.com
