Trending Cinemas Now
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

’தலைவி’க்காக எம்ஜிஆர் ஜெயலலிதாவாக மாறிய ஜோடி..

எம் ஜி ஆரின் 104 வது பிறந்த நாளையொட்டி “தலைவி” படக்குழுவினர் மறைந்த முதல்வர் ஜெயலலி தாவின் வாழ்வின் பெரும் தூணாக விளங்கிய, வரலாற்று நாயகனை போற்றும் பொருட்டு, கங்கனா ரனாவத், அரவிந்த் சாமி நடிப்பில், “தலைவி” படத்தின் சிறு துணுக்கை வெளியிட்டு கௌரவுத்துள்ளது.
கங்கனா ரனாவத், அரவிந்த் சாமி நடிப்பில் உருவாகும் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்று திரைப்படமான “தலைவி” இவ்வாண்டின் மிக முக்கியமான ஒரு திரைப்பட மாக விளங்குகிறது.
புரட்சி தலைவர் எம் ஜி ஆரின் 104 பிறந்த நாளை முன்னிட்டு “தலைவி” படக்குழுவினர் சிறப்பு செய்துள்ளனர். தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கும், முன்னேற்றத்திற்கு காரணமாக இருந்தவர். மேலும் தலைவி ஜெயலலிதாவின் வாழ்விலும் வளர்ச்சியிலும் மிகப்பெரும் உந்துசக்தியாக இருந்தவர். தற்போது வெளியிடப்பட் டிருக்கும் வீடியோ எம் ஜி ஆரின் வாழ்வின் மிக முக்கிய தருணங்களை, தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கும், முனேற்றத் திற்கும் அவர் செய்திருக்கும் பெரும்பங்கினை எடுத்துக் காட்டுவதாக அழகாக அமைந் திருக்கிறது.
படக்குழுவினர் முதல் முறை யாக கங்கனா ரனாவத், அரவிந்த்சாமி ஆகிய இருவரும் இணைந்திருக்கும் புகைப்படத்தை, புதிய தோற் றத்துடன் வெளியிட்டுள்ளனர். விஷுவல்கள் எம் ஜி ஆர், ஜெயலலிதா இருவரும் திரையுலகில் சூப்பர்ஸ்டார் களாக, ரசிகர்களின் விருப்ப நாயகர்களாக, கோலோச்சிய காலத்தை மீண்டும் மீளுரு வாக்கம் செய்யும் வகை யில் அமைந்துள்ளது. கங்கனா ரனாவத், அரவிந்த் சாமி இருவரின் கெமிஸ்ட்ரியும் பெரும் எதிர்பார்ப்பை உருவாக்குவதாக உள்ளது.
“தலைவி” பன்மொழிகளில் உருவாகும் வாழ்க்கை வரலாற்று திரைப்படம். தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் உருவா கும் இப்படத்தினை இயக்கு நர் விஜய் இயக்குகிறார். விஷ்ணு வர்தன் இந்தூரி, சய்லேஷ் ஆர் சிங் விபிரி மீடியா (Vibri Media) நிறுவனம் மற்றும் கர்மா மீடியா (Karma Media) நிறுவனம் சார்பில் கோதிக் எண்டர்டெயின்மெண்ட் (Gothic Entertainment) மற்றும் ஸ்பிரிண்ட் பிலிம்ஸ் (Sprint Films) உடன் இணைந்து தயாரித்துள்ளனர். இதன் கதையை விஜயேந்திர பிரசாத் எழுத, கங்கனா ரனாவத், அரவிந்த் சாமி, சமுத்திர கனி,நாசர் நடித்துள்ளனர். கிரியேட்டிவ் புரடியூசர் பிருந்தா பிரசாத், இணை தயாரிப்பு ஹிதேஷ் தக்கர், திருமால் ரெட்டி.

Related posts

ChellammaVideoSong from #Doctor is out now

Jai Chandran

மாயன் படத்தின் மோஷன் போஸ்டர் வெளியீடு

Jai Chandran

RedGiant Coproducer Shenbagamoorthy Met CM MK.Stalin and Udhaystalin

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend