படம்: ஜெய் விஜயம்
நடிப்பு: ஜெய் ஆகாஷ், அக்ஷயா கொண்டமுத்து, அட்சயாராய், ஏ சி பி ராஜேந்திரன் மற்றும் பலர்.
தயாரிப்பு: ஜெய் ஆகாஷ்
இசை: சதீஷ்குமார்
ஒளிப்பதிவு: பால்பாண்டி
இயக்கம்: ஜெய் சதீஷன் நாகேஸ்வரன்
பி ஆர் ஒ: வேலு
தலையில் அடிபட்ட காயத்துடன் தந்தை, மனைவி, தங்கையுடன் புது வீட்டுக்கு குடியேறுகிறார் ஜெய் ஆகாஷ். அடிக்கடி அவருக்கு ஒரு கெட்ட கனவு வருகிறது. உங்களுக்கு ஞாபக மறதி இருப்பதால் இதுபோல் ஆகிறது எனவே நீங்கள் மாத்திரையை எடுத்துக் கொள்ளுங்கள் என்று மனைவி அக்ஷயா அவருக்கு அவ்வப்போது மாத்திரைகள் தருகிறார். இந்த நிலையில் ஜெய் ஆகாஷை சுற்றி பல்வேறு விஷயங்கள் நடக்கின்றன அதெல்லாம் ஜெய் ஆகாஷுக்கு சந்தேகத்தை ஏற்படுத்துகிறது தன்னை வைத்து தன் குடும்பத் தினர் ஏதோ பிளான் போடுகி றார்கள் என்று பயந்து ஓடிச் சென்று போலீஸ் நிலையத்தில் புகார் தருகிறார். ஒரு கட்டத்தில் ஜெய் ஆகாஷ் மீது கொலைப்பழி விழுகிறது . தாய் மற்றும் மகனை கொன்றது நீதான் என்று போலீஸ் விசாரிக்க ஜெய் ஆகாஷ் திரு திருவென விழிக்கிறார். நான் கொலை செய்யவில்லை என்று எவ்வளவோ சொல்லியும் போலீஸ் நம்ப மறுக்கிறது. ஜெய் ஆகாஷ் யாரை கொலை செய்தார் , அவரது மனைவி மற்றும் தங்கை, தந்தை ஏன் அவரை சுற்றி சதி செய்கி றார்கள் என்ற பல கேள்விகளுக்கு ஜெய் விஜயம் சஸ்பென்ஸ் உடைத்து பதில் அளிக்கிறது.
ஜெய் ஆகாஷ் ஏற்கனவே ராம கிருஷ்ணா உள்ளிட்ட பல்வேறு படங்களில் தமிழில் நடித்திருக் கிறார். இது தவிர, ” நீதானே என் பொன் வசந்தம் ” என்ற டிவி சீரியலிலும் நடித்திருக்கிறார். சினிமா ரசிகர்கள் ஒரு பக்கம், டிவி ரசிகர்கள் இன்னொரு பக்கம் என அவருக்கு இன்றும் ஏகப்பட்ட ரசிகர்கள் கூட்டம் இருக்கிறது. அவர்களை நம்பி இன்றும் ஜெய் ஆகாஷ் கதாநாயகனாக நடித்த வருகிறார்.
ஜெய் ஆகாஷ் நடிப்பில் வந்திருக்கும் ஜெய் விஜயம் படம் உண்மையிலேயே அவருக்கு முற்றிலும் மாறுபட்ட கதை அம்சம் கொண்ட சஸ்பென்ஸ் திரில்லர் என்று தான் கூற வேண்டும். கடைசி காட்சி வரை எதற்காக அவர் மீது கொலைப் பழி விழுகிறது, அவர் கொலை செய்தாரா இல்லையா? என்ற பரபரப்பு சீனுக்கு சீன் அதிகரித்துக் கொண்டே இருக் கிறது.
தான் நிஜத்தில் காண்பதைக் கூட தன் மனைவி அக்ஷயா, நீங்கள் கனவில் பார்த்திருப்பீர்கள் அ.து உண்மை இல்லை. உங்களுக்கு hallucination அதாவது இல்லாதது இருப்பது போல் தோன்றும் ஒரு மாயத் தோற்ற நோய் இருக்கிறது என்று கூறி ஜெய் ஆகாஷை குழப்புகிறார் பலமுறை இதுபோல் குழம்பி குழம்பி ஜெய் ஆகாஷ் என்ன செய்வது என்று தெரியாமல் விழிக்கிறார்.
ஒரு கட்டத்தில் தன் மனைவி கடத்தப்பட்டார் என்பதை கேட்டு அதிர்கிறார் திடீரென்று கடத்தப் பட்ட மனைவி வீடு திரும்புகிறார் காலில் அடிபட்டு விட்டதாக கூறி நொண்டி நொண்டி நடக்கிறார் ஆனால் காலை மாற்றி மாற்றி இந்த காலில் அடிபட்டுவிட்டது அந்த காலில் அடிபட்டுவிட்டது என்று சொல்லும்போது மீண்டும் ஜெய் ஆகாஷ் குழப்ப நிலைக்கு செல்கிறார். அவரை அவர்கள் குழப்பம் போது ரசிகர்களுக்கும் மண்டைக்குள் ஒரு குழப்பம் ஏற்பட்டு சுழற்றி அடிக்கிறது.
பிளாஷ்பேக் காட்சியில் ஜெய் ஆகாஷ் தன் தங்கையையும், மனைவியையும் காப்பாற்றும்படி டாக்டரிடம் கண்ணீர் விட்டு கெஞ்சி கதறி அழும்போது உண்மையி லேயே நெஞ்சை நெகிழ வைக்கி றார். கிளிசரின் எதுவும் போடாமல் அவரது கண்ணில் கண்ணீர் வரும் அளவுக்கு அழுது நடித்திருப்பது இதுவே முதல்முறை என்று கூட தோன்றுகிறது. அந்த அளவுக்கு காட்சியில் உலுக்கி எடுக்கிறார் ஜெய் ஆகாஷ்.
ஜெய் ஆகாஷ் கொலை செய்தாரா, இல்லையா என்ற சஸ்பென்சை இப்போதே உடைத்து விட்டால் படம் பார்க்கும்போது சுவாரஸ்யம் இருக்காது எனவே அந்த சஸ்பென்ஸ் அப்படியே இங்கு நீடிக்கட்டும்.
கதாநாயகியாக நடித்திருக்கும் அக்ஷயா கொண்டமுத்து இயல் பான நடிப்பில் கவர்கிறார். உண்மையிலே ஜெய் ஆகாசுக்கு அவர் மனைவியா இல்லையா என்று ஒரு கட்டத்தில் சந்தேகம் வந்தாலும் அந்த சந்தேகத்தை உடனடியாக நிவர்த்தி செய்து கொள்ள முடியாத அளவுக்கு காட்சிகள் ட்விஸ்ட் ஆவது படத்தின் சுவாரஸ்யத்தை கூட்டுகிறது.
இப்படத்தை ஏ கியூப் மூவிஸ் ஆப் சார்பில் ஜெய் ஆகாஷ் தயாரித்தி ருப்பதுடன் ஜெய சதீசன் நாகேஸ் வரன் என்ற தனது நிஜப் பெயரில் படத்தை இயக்கியும் இருக்கிறார். அத்துடன் சண்டைக் காட்சி, நடன காட்சியையும் அவரே அமைத்தி ருப்பது சிறப்பு.
ஜேசிபி ராஜேந்திரன் அசல் போலீஸ்காரராகவே மாறி இருக்கிறார். ஏனென்றால் அவர் நிஜத்திலும் ஒரு போலீஸ் என்ப தால் அவரது பாடி லேங்குவேஜ் மற்றும் முறைப்பு மிரட்டல் எல்லாமே ஒரிஜினல் ஆக இருக்கிறது
படத்தில் இன்னும் ஏராளமான நடிகர் நடிகைகள் நடித்திருக்கின் றனர். எல்லோருமே தங்கள் பங்கை சிறப்பாகவே செய்திருக் கிறார்கள்
படத்தின் தொடக்கம் முதல் இறுதி வரை பல காட்சிகளில் புகை புகையாக வருகிறது எப்போதுமே காட்சிகளை தெளிவாக பதிவு செய்வார்கள் இதில் புகை மூட்டத்துடன் பதிவு செய்திருப்பது ஏன் என்று டைட்டில் காட்சியை தவற விடுபவர்களுக்கு புரிவது கடினம். ஆனால் அந்த புகை மூட்டம் ஒரு ஆன்மா என்று படத்தில் சித்தரிக்கப்படுகிறது. கிளைமாக்ஸ் காட்சியில் அதற் கான விளக்கமும் தரப்படுகிறது
நல்லவேளை ஆன்மா புகை மூட்டம் என்றெல்லாம் இருந் தாலும் இது ஒரு பேய் கதையாக இல்லாமல் ஒரு சமூக கதையாக குடும்ப பின்னணியில் உருவாகி இருப்பது முற்றிலுமே வித்தியாச மான கோணம்.
ஒளிப்பதிவாளர் பால் பாண்டி காட்சிகளை தேவைக்கேற்ப படமாக்கி இருக்கிறார்
சதீஷ்குமார் இசை, எம் ஜி மணிகண்டன் எடிட்டிங் எல்லாமே பர்ஃபெக்டாக உள்ளதால் காட்சியை கூட்ட வேண்டும் குறைக்க வேண்டும் என்ற எந்த பேச்சுக்கும் இடமில்லை. கச்சித மாக காட்சிகள் செதுக்கப்பட்டு இருக்கின்றன. இதேபோல் இன்னும் இரண்டு படங்கள் ஜெய் ஆகாஷுக்கு வந்தால் அவர் திரையுலகில் திரும்பி பார்க்க வைக்கும் ஒரு இடத்தை நிச்சயம் பிடிப்பார்.
ஜெய் விஜயம் – ஜெய் ஆகாஷு நல்ல ரீ என்ட்ரி.