Trending Cinemas Now
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

டிராகன் நடிகர் வி ஜே சித்து இயக்குநராக அறிமுகமாகும் ‘டயங்கரம்’

வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் சார்பில் டாக்டர் ஐசரி கே கணேஷ் தயாரிப்பில் டிஜிட்டல் திரை நட்சத்திரமும், ‘டிராகன்’ படத்தின் மூலம் ரசிகர்களிடம் பிரபலமானவருமான வி ஜே சித்து கதையின் நாயகனாக நடித்து இயக்கும் ‘டயங்கரம்’ எனும் திரைப்படத்தின் தொடக்க விழா சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள எல் ஏ ஸ்டுடியோவில் சிறப்பாக நடைபெற்றது.

நடிகரும், அறிமுக இயக்குநருமான வி ஜே சித்து இயக்கத்தில் உருவாகும்’ டயங்கரம்’ எனும் திரைப்படத்தில் வி ஜே சித்து, நட்டி நட்ராஜ், காளி வெங்கட், இளவரசு, நிதின் சத்யா, ஹர்ஷத்கான் , ‘ஆதித்யா’ கதிர் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள். பி. தினேஷ் கிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்யும் இந்த திரைப்படத்திற்கு சித்து குமார் இசையமைக்கிறார். படத்தொகுப்பு பணிகளை பிரதீப் ஈ. ராகவ் கவனிக்க, ஏ. கீர்த்தி வாசன் ஆடை வடிவமைப்பாளராகவும், அஸார் நடன இயக்குநராகவும் பணியாற்றுகிறார்கள். சமகால இளைய தலைமுறையினரின் வாழ்வியலை மையப்படுத்திய இந்த நகைச்சுவை கலந்த பொழுதுபோக்கு திரைப்படத்தை வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் சார்பில் பிரபல தயாரிப்பாளர் டாக்டர் ஐசரி கே. கணேஷ் தயாரிக்கிறார்.

இந்த திரைப்படத்தை வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் வழங்குகிறது. அத்துடன் படத்தின் இசையை வேல்ஸ் மியூசிக் இன்டர்நேஷனல் நிறுவனம் வெளியிடுகிறது.

இந்தத் திரைப்படம் இன்றைய இளைஞர்களின் துடிப்பான ஆற்றலை மையப்படுத்திய படமாக இருக்கும் என்றும், காமெடி, எமோசன் மற்றும் சுய அடையாளத்தை கண்டுபிடித்தல் உள்ளிட்ட இளைஞர்களை ஈர்க்கும் பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்த படைப்பாக ‘டயங்கரம் ‘ இருக்கும் என்றும் படக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.‌

இப்படத்தின் தொடக்க விழாவில் படக்குழுவினர் கலந்து கொண்டனர். தமிழ் திரையுலகத்தை சார்ந்த ஏராளமான பிரபலங்கள் நேரில் வருகை தந்து படக் குழுவினரை வாழ்த்தினர்.‌

படத்தின் படப்பிடிப்பு பணிகள் மற்றும் வெளியீடு குறித்த அப்டேட் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என படக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.

இதனிடையே வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் – தயாரிப்பாளர் ஐசரி கே கணேஷ் – வி‌ ஜே சித்து- இளவரசு கூட்டணியில் வெளியான இப்படம் குறித்த அதிகாரப்பூர்வ வீடியோ – இணையத்தில் வெளியாகி மூன்று மில்லியனுக்கும் மேற்பட்ட பார்வையாளர்களால் பார்வையிடப்பட்டு சாதனை படைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

75வது சுதந்திரதின கொண்டாட்டத்தில் வ. உ. சி “பெருங்காற்று” பாடல்: ராஜசேகர் இயக்குகிறார்

Jai Chandran

கட்ஸ் ( பட விமர்சனம்)

Jai Chandran

Valimai Grand Gala Show Organised by Malaysia Thala Ajith Fan Club

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend