Trending Cinemas Now
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

அதிகரிக்கும் திரையரங்குகள் .. மகிழ்ச்சியில் சாயம் படக்குழு

சாயம் திரைப்படம் கடந்த பிப்ரவரி 4 அன்று தமிழகமெங்கும் 90 திரையரங்கு களில் வெளியானது. படம் வெளியா வதற்கு முன்பே தென் மாவட்டங்களில் இருந்து இயக்குனருக்கு மிரட்டல்கள் வந்தவண்ணம் இருந்தது. அத்தனை எதிர்ப்புகளையும் மீறி பல திரையரங்கு களில் படம் வெளியாகி வெற்றிநடை போட்டுக் கொண்டிருக்கிறது சாயம் திரைப்படம்.

தென்மாவட்டங்களில் நடக்கும் நிகழ்வு களை பிரதிபலிக்கும் வண்ணம் படத்தில் காட்சிகள் இருப்பதால் மக்கள் கூட்டம் கூட்டமாக சென்று படத்தை பார்த்து வருகின்றனர். இதனால் பல தியேட்டர் களில் காட்சிககள் அதிகரிக்கப்பட் டுள்ளன.

மேலும் ரிலீஸ் அன்று திரையிடப்படாத பல தென் மாவட்ட தியேட்டர்கள் கடந்த திங்கள் முதல் படத்தை திரையிட துவங்கியுள்ளனர். படத்தின் வெற்றியை உணர்ந்த மதுரை சண்முகா (மாப்பிள்ளை விநாயகர் ), வத்தலகுண்டு சீனியப்பா, திருநெல்வேலி, சுரண்டல் மற்றும் கடையம் ஆகிய இடங்களில் ஒரு தியேட்டர் என தியேட்டர் உரிமையாளர் களே தாமாக முன்வந்து கடந்த ஞாயிறு முதல் சாயம் படத்தை தனது தியேட்டரில் வெளியிட்டு வருவதே இந்த வெற்றிக்கு உதாரணம்.

இது போல தமிழகத்தில் பல காட்சிகள் அதிகரிக்கப்பட்டு வருகிறது. இதனால் சாயம் படக்குழுவினர் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர்.

Related posts

போயபத்தி ஸ்ரீனு, ஹீரோ ராம் பொத்தினேனிஇணையும் பட அப்டேட் அக் 5ல்

Jai Chandran

ஒடிசா கோரமண்டல் ரயில் விபத்து: சரத்குமார் அறிக்கை

Jai Chandran

மதன் கார்க்கியின் தமிழ் ’பயில்’ திட்டம்.. எந்த நாடு என்ற கேள்வி இல்லை..

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend