Trending Cinemas Now
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

மகளிர் கல்லூரியில் படிக்கும் ஹீரோ: புதுமை படைப்பாக ஹைக்கூ…

ஃபீல்குட் ரொமான்டிக் காமெடி திரைப்படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் தொடர்ந்து வரவேற்பு கிடைத்து வருகிறது. மனதுக்கு நெருக்கமான கதைகள், நகைச்சுவை மற்றும் உணர்வுப்பூர்வமான படங்கள் திரையரங்குகளில் ரசிகர்களை மகிழ்வித்து வருகின்றன. அந்த வரிசையில் ‘ஹைக்கூ’ திரைப்படம் வெளியாக இருக்கிறது.

இளமைத் துள்ளல் நிறைந்த பொழுதுபோக்கு அம்சங்களுடன், உணர்வுப்பூர்வமான இந்த ரொமான்டிக் காமெடி திரைப்படம் ரசிகர்களுக்கு பிடித்த வகையில் உருவாகி உள்ளது. ஏகன், ஸ்ரீதேவி மற்றும் ஃபெமினா ஜார்ஜ் ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் இப்படத்தை யுவராஜ் சின்னசாமி எழுதி இயக்கியுள்ளார். விஷன் சினிமா ஹவுஸ் சார்பில் டாக்டர் டி. அருளானந்து மற்றும் மேத்யூ அருளானந்து ஆகியோர் தயாரித்துள்ளனர். வரும் அக்டோபர் 23ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகவுள்ள ‘ஹைக்கூ’ படத்தின் டிரெய்லர் தற்போது வெளியாகி, ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.

கல்லூரி கலாட்டா, கலர்ஃபுல் விஷூவல்ஸ் மற்றும் காதல் என 145 விநாடிகள் நீளும் டிரெய்லர் கதையின் மையத்தை ரசிகர்களுக்கு அறிமுகப்படுத்துகிறது. பெண்கள் மட்டுமே படிக்கும் கல்லூரியில் ஒரே ஒரு மாணவனாக மனோ வரும்போது நடைபெறும் எதிர்பாராத மற்றும் நகைச்சுவையான சம்பவங்களே இப்படத்தின் கதைக்களம். கதாபாத்திரங்களுக்கு இடையேயான கெமிஸ்ட்ரி, நகைச்சுவை காட்சிகள் மற்றும் கதையின் உணர்வுப்பூர்வமான தருணங்கள் டிரெய்லரில் இடம்பெற்றுள்ளது.

‘கோர்ட்: ஸ்டேட் Vs நோபடி’ திரைப்படத்தின் மூலம் கவனம் ஈர்த்த ஸ்ரீதேவி, இயல்பான நடிப்பாலும் திரை இருப்பாலும் இந்தப் படத்திலும் பார்வையாளர்களைக் கவர்கிறார். அதேபோல் ஃபெமினா ஜார்ஜ், தனது வசீகரமான தோற்றம் மற்றும் நடிப்பால் கதைக்கு கூடுதல் அழகு சேர்க்கிறார். ஏகன், ஸ்ரீதேவி மற்றும் ஃபெமினா ஜார்ஜ் என முன்னணி கதாபாத்திரங்களின் எனர்ஜி படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது.

‘ஹைக்கூ’ குறித்து நடிகர் ஏகன் பகிர்ந்து கொண்டதாவது, “இது ஒரு ஃபீல்குட் ரொமான்டிக் காமெடி திரைப்படம். ஆனால், இதற்குள் ஒரு ஆழமான கருத்தும் இருக்கிறது. ‘டோரதி’ படம் பார்த்த பிறகு மற்றவர்களின் தேர்வுகளையும் தனிப்பட்ட உணர்வுகளையும் மதிக்க வேண்டும் என்ற எண்ணம் பார்வையாளர்கள் பலரது மத்தியில் உருவானது. அதேபோல், ‘ஹைக்கூ’ திரைப்படமும் பெண்களைப் பற்றிய ஆண்களின் பார்வை எப்படி மாற வேண்டும் என்பதையும், பெண்களை மதிப்பதன் முக்கியத்துவத்தையும் எடுத்துச் சொல்கிறது. ஆனால், இந்தப் படம் எந்தக் கருத்தையும் போதிக்கும் வகையில் இருக்காது. கதைக்குள் கருத்தை இயல்பாக இணைத்து, ரசிக்கக்கூடிய பொழுதுபோக்கு படமாக உருவாக்கியிருக்கிறோம். திரையரங்கைவிட்டு வெளியே வரும் ரசிகர்களின் மனதில் இந்தப் படம் நிச்சயம் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று நம்புகிறேன்” என்றார்.

தயாரிப்பாளர் டாக்டர் அருளானந்த் கூறும்போது, “ஜோ கோழிப்பண்ணை செல்லதுரை படத்துக்கு பிறகு  அதிகபட்ஜெட்டில்  தயாரிக்கப்படும் படம் ஹைக்கூ. இது இக்கால இளைஞர்களை மையமாகக் கொண்டு உருவாகி இருக்கும் படம் என்றாலும் அனைத்து தரப்பினையும் கவரும் வகையில் உருவாகி இருக்கிறது.

ஏற்கனவே எங்களது நிறுவனம் அளித்த இரண்டு படங்களுக்கும் ரசிகர்களிடம்  வரவேற்பு கிடைத்த நிலையில் ஹைக்கூ படத்துக்கும் அதே வரவேற்பு கிடைக்கும் என்று எண்ணுகிறோம. வர்த்தக ரீதியில்  இப்படம் பெரிய வரவேற்பு பெற்றிருக்கிறது. நெட்ப்ளிக்ஸ் ஓடிடி தளம்   இப்படத்தை  பெரிய விலை கொடுத்து வாங்கி இருக்கிறது.” என்றார்.

நடிகை ஃபெமினா ஜார்ஜ் கூறும்போது, ” தமிழில் இது எனக்கு முதல் படம். படத்தில் இரண்டு ஹீரோயின்கள் இருக்கிறார்களே என்கிறார்கள். என்னை பொருத்தவரை இரண்டு ஹீரோயின் அல்ல மூன்று ஹீரோயின்கள் இருந்தாலும் எனக்கு ஏற்ற கதாபாத்திரத்தில் நடிக்க நல்ல வாய்ப்பு இருக்கும்போது நான் நடிக்க தயார். இந்தப் படத்திலும் நல்லதொரு கதாபாத்திரம் எனக்கு அமைந்திருப்பதால் உடனே ஒப்புக் கொண்டேன் ” என்றார்

இதில் ஏகன், ஸ்ரீதேவி மற்றும் ஃபெமினா ஜார்ஜ் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்திருக்க அதிர்ச்சி அருண், சுப்ரமணிய சேது, அதியமான், மைம் கோபி, இந்துமதி மணிகண்டன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

படத்திற்கு சித்து குமார் இசையமைத்துள்ளார். ஹரிஹரன் ராம் கூடுதல் திரைக்கதையை எழுதியுள்ளார். பிரியேஷ் குருசாமி ஒளிப்பதிவை மேற்கொள்ள, சக்தி பிரணீஷ்.பி படத்தொகுப்புப் பணிகளை கவனித்துள்ளார். கலை இயக்கத்தை பிரேம் கருந்தமலை மேற்கொண்டுள்ளார். ‘ஹைக்கூ’ திரைப்படத்தை தமிழ்நாடு முழுவதும் சக்தி ஃபிலிம் ஃபேக்டரி சார்பில் பி. சக்திவேலன் வெளியிடுகிறார். இப்படம் வரும் அக்டோபர் 23ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

Related posts

SIIMA popular awards nominations for 2019.

Jai Chandran

நாக சைதன்யா – சாய் பல்லவியின் தண்டேல்

Jai Chandran

Upasana and Ram Charan’s Baby Shower

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend