படம்: செஞ்சி
நடிப்பு: கணேஷ் சந்திரசேகர், க்ஷேன்யா பான்பெரோவா (மாஸ்கோ), யோகிராம்
ஸ்ரீ ரம்யா, சுஹைஜு கள்ளரா, Dr. சுஜாதா டொரைமணிக்கம்,
மாஸ்டர் சாய் ஸ்ரீனிவாசன்
மாஸ்டர் தர்சன் குமார்
மாஸ்டர் விதேஷ் ஆனந்த்
மாஸ்டர் சஞ்சய்
பேபி தீக்ஷன்யா
தயாரிப்பு: சந்திரசேகரன். ஜி
இசை: எல் வீ முத்து கணேஷ்
ஒளிப்பதிவு : ஹரிஷ் ஜிண்டே
இயக்கம்: ஜி.சி
பி. ஆர். ஒ: சக்தி சரவணன்
பிரான்சிலிருந்து புதுச்சேரியில் உள்ள தனது மூதாதையர் பங்களா வுக்கு வருகிறார் ஷோபியா (க்ஷேன்யா) அங்குள்ள ரகசிய அறையில் புராதன கலைப் பொருட்கள் ஏராளமாக இருக்கின் றன. ஏதோ ஒரு அமானுஷ்ய சக்தி பயமுறுத்துகிறது. . அங்கு ஒரு ஓலைச்சுவடி கிடைக்க அதை தொல் பொருள் ஆராய்ச்சியாளர் ஜாக் ஆண்டர்சனிடம் (கணேஷ் சந்திர சேகர்) தருகிறார். அதில் தங்க புதையலுக்கான ரகசிய குறியீடுகள் தெரிகிறது. புதை யலை தேடி ஷோபியாவுடன் ஜாக் புறப்படுகிறார். அந்தப் புதையலை அவர்கள் கண்டுபிடித்தார்களா என்பதுதான் செஞ்சி பட கிளை மாக்ஸ்.
நம்மூர்க்காரராக இருந்தாலும் வெளிநாட்டில் சென்று செட்டிலான கணேஷ் சந்திரசேகர் இப்படத்தை எழுதி இயக்கி ஹீரோவாக நடித்திருப்பதுடன் அம்புலிமாமா கதையில் வருவதுபோல் கதைப் பிரியர்களை கவரும் வகையில் காட்சிகள் அமைத்திருக்கிறார்.
செஞ்சி கோட்டையில் புதையல் ஆராய்ச்சியை தொடங்கும் கணேஷ் சந்திரசேகர் அங்கு கிடைக்கும் ஆதாரத்தை கொண்டு அடுத்தடுத்து மதுரை, ராஜபா ளையம், தென்காசி, கல்லார் ஆகிய இடங்களுக்கு சென்று புதையல் குகைக்கான ரகசிய சாவியை தேடி கண்டு பிடிப்பது சுவாரஸ்யம்.
செஞ்சி, கல்மலை இயற்கை சூழல்களை போகிற போக்கில் படமாக்கியிருப்பது கண்களுக்கு விருந்து.
புதையல் தேடும் படலம் மட்டுமல்லாமல் கிராமத்தில் சேட்டை செய்யும் 5 சிறுவர்கள் மற்றும் காட்டில் தலை மறைவாக திரியும் தீவிரவாதிகளை அதிரடிப் படை தேடுதல் வேட்டை நடத்துவது என கூடுதல் அமசங்களை இணைத்து கதையை விறுவிறுப் பாக்கியிருக் கிறார்கள்.
தொல்பொருள் ஆராய்ச்சியாளராக நடித்திருக்கும் கணேஷ் சந்திர. சேகர் தனது வயதுக்கேற்ற மெச்சூர் டான வேடம் ஏற்றிருப்பது நலம்.
தானே இயக்குனர், தானே ஹீரோ என்பதால் அதிரடி ஆக்ஷன் காட்டுவது, காதல் காட்சிகளில் நடிப்பதென்றில்லாமல் அடக்கி வாசித்திருப்பதன் மூலம் அவரது கதாபாத்திரத்தின் கண்ணியம் காக்கப்பட்டிருக்கிறது.
வழிதெடுத்த வெண்ணைபோல் பளீரென வருகிறார் ரஷ்ய நடிகை கெசன்யா. பொம்மை போல் இருந்தாலும் நடிப்பில் பொம்மை யாகி விடாமால் தேவையான இடங்களில் இயல்பாக நடித்துள்ளார்.
மாஸ்டர் சாய் ஸ்ரீனிவாசன், மாஸ்டர் தர்சன் குமார்,
மாஸ்டர் விதேஷ் ஆனந்த், மாஸ்டர் சஞ்சய், பேபி தீக்ஷன்யா வயதுக் கேற்ப சுட்டித்தனமாக நடித்துள்ளனர் .
குகைக்குள் செல்லும் சிறுவர்கள் அங்கிருக்கும் தங்கம், வைரம், வைடூரிய புதையலை கண்டு மலைப்பதும், அவற்றை அள்ளி பைகளுக்குள் திணித்துக் கொண்டு புறப்பட தயாராக போகும்போது திரும்பி போவதற்கு வழியில்லை என்று தெரிந்ததும் பயத்தில் அழுவதை பார்க்கும் போது ஐயோ பாவம் என சொல்ல வைக்கின்றனர்.
காட்டுக்குள் தீவிரவாதிகள் எதற்காக வருகி றார்கள் என்பது புரிய வில்லை. அவர்களை கமாண்டோ படை பின்தொடர் வதை நீட்டி முழக்கும்போது அலுப்பு தட்டுகிறது.
சந்திரசேகரன். ஜி தயாரித்திருக் கிறார்.
யாரிடமும் உதவியா ளராக இல்லாமல் குழந்தைகளை கவரும் வகையில் படத்தை இயக்கியிருக் கிறார் ஜி.சி.
பள்ளிகளில் குழந்தைகளுக்கு போட்டுக் காட்டும் திட்டத்தின் கீழ் இப்படத்தையும் சேர்த்துக்கொள்ள லாம். சரித்திரத்தை அறிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வத்துடன், பண்டைய தமிழ் எழுத்துக்களின் தோற்றம் பற்றிய புரிதலும் இளைஞர்களுக்கு கிடைக்கும்.
எல் வீ முத்து கணேஷ் இசையில் பாடல்கள் ஒ கே. பின்னணி இசையில் கூடுதல் கவனம் செலுத் தியிருப்பதால் சில காட்சிகளில் அமானுஷ்ய இசை மூலம் இதயத்தில் திக் திக் பரவச்செய்கி றார்.
ஒளிப்பதிவாளர் ஹரிஷ் ஜிண்டே செஞ்சியையும், கல்மலையையும் அழகாக படம்பிடித்து எப்படியாவது இந்த இடங்களை நேரில் சென்று ஒருமுறையாவது பார்க்க வேண் டும் என்ற ஏக்கத்தை உருவாக்கு கிறார்.
செஞ்சி – வரலாற்று பின்ணணியில் தங்க புதையல் வேட்டை.
.