Trending Cinemas Now
சினிமா செய்திகள் விமர்சனம்

எப்போதும் ராஜா (பட விமர்சனம்)

படம்: எப்போதும் ராஜா

நடிப்பு: வின்ஸ்டார் விஜய் , ஜோ மல்லூரி, பி சோமசுந்தரம்,  லயன் குமார் , பிரியா, டெப்ளினா  , கும்தாஜ்  பத்திரிகையாளர்கள் கே .எஸ் .கே .செல்வா, மனோஜ், கார்த்திக்

தயாரிப்பு: வின் ஸ்டார் விஜய்

இயக்கம்: வின்ஸ்டார் விஜய்

போலீஸ் இன்ஸ்பெக்டர் தேசிங்கு ராஜா ( வின் ஸ்டார் விஜய்) அவரது தம்பி வாலிபால் வீரர் ராஜா (வின்ஸ்டார் விஜய்) இருவரும் தங்கள் பணியில் கடமை தவறாமல் இருக்கிறார்கள்.. . இந்திய அளவில் சாம்பியன் ஆக வேண்டும் என்பது வாலிபால் ராஜாவின் கனவாக இருக்கிறது. அதற்காக அவர் தீவிரமாக கைப்பந்து போட்டியில் ஆர்வம் காட்டி விளையாடுகிறார். இன்ஸ்பெக்டர் தேசிங்குராஜா குற்றங்களை தடுப்பதில் தீவிரம் காட்டுகிறார். வாலிபால் ராஜாவுக்கு எதிர் கோஷ்டி ஒன்று செயல்படுகிறது. அந்த கோஷ்டி வாலிபால் ராஜா. விளையாடினால் தங்கள் அணி வெற்றி பெறாது என்பதால் அவரைத் தாக்கி அழிக்க வில்லி கோஷ்டி திட்டமிடுகிறது. டெல்லியில் நடக்கும் இறுதி போட்டியில் வாலிபர் ராஜா கலந்து கொண்டு ஆடாமல் இருப்பதற்காக அவரது கையை முறிக்கின்றனர். ஆனாலும் அதில் தேறி விளையாட தயாராகிறார் ராஜா. அவர் போட்டியில் பங்கேற்க டெல்லி செல்கிறார் . மீண்டும் வில்லி கோஷ்டி அங்கு சுற்றி வளைகிறது. அதன் பிறகு நடந்தது என்ன ? வாலிபால் ராஜாவால் போட்டியில் விளையாட முடிந்ததா? இன்ஸ்பெக்டர் தேசிங்குராஜா எடுக்கும் நடவடிக்கை என்ன? என்பதற்கு எப்போதும் ராஜா படம் கமர்சியலாக பதில் அளிக்கிறது.

தேசிங்கு ராஜா வாலிபால் ராஜா என்ற இரட்டை வேடத்தில் வின்ஸ்டார் விஜய் முருகன் நடித்திருக்கிறார். முதல் படத்திலேயே இரட்டை வேடம் என்பது கொஞ்சம் கடினமான காரியம் தான் ஆனால் அதை துணிச்சலாக  ஏற்றதற்கு  அவருக்கு பாராட்டு தெரிவிக்கலாம்.

முதல் படம் என்பதால் நடிப்பிலும் வசன உச்சரிப்பிலும் ஆங்காங்கே தடுமாற்றம் இருந்தாலும் அதை யெல்லாம் சமாளித்து நடித்து முடித்திருக்கிறார் விஜய்.
இவர் எம்ஜிஆர் ரசிகராக இருப்பார் போல தெரிகிறது.  அவர் பாணி யிலேயே தனது படத்தின் கதையை அமைத்திருக்கிறார். படத்தின் இயக்குனர், தயாரிப்பாளர் ஆகவும் வினஸ்டார் விஜய்யே பொறுப்பு ஏற்றிருக்கிறார்.

எம்ஜிஆர் படங்களில் சண்டைக் காட்சி, பாடல் காட்சி, அம்மா சென்டி மென்ட், காதல் காட்சி நல்ல வசனங்கள் போன்றவை இடம்பெறும் அந்த பார்முலாவை எப்போதும் ராஜா படத்தில் விஜய் முருகன் அப்ளை செய்திருக்கிறார் என்று தான் சொல்ல வேண்டும்.
வசனங்களில் நல்ல கருத்துக் களை பல இடங்களில் வெளிப் படுத்துவதோடு குழந்தைகளுடன் அன்பாக பழகுதல் அம்மாவிடம் பாசமாக இருப்பது சண்டைக். காட்சிகளில் அதிரடி காட்டுவது என்று எல்லா வேலைகளையும் நல்லபடியாக செய்திருக்கிறார்.. ஆனால் எப்போது பார்த்தாலும் வாயில் சிகரெட்டை வைத்துக் கொண்டு புகைத்து தள்ளுவது  ஒரு ¹ ஸ்டைலுக்காகவா அல்லது கதாபாத்திரத்தை ரவுடித்தனமாக காட்டவா என்று தான் புரியவில்லை. அதை தவிர்த்தி ருக்கலாம்

சென்னை பாண்டிச்சேரி கோவா என்று பல இடங்களில் இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று இருக்கிறது.
வசன உச்சரிப்பில் ஏற்ற இறக்கங்கள்  மீட்டர் குறைந்திருந்தாலும் சண்டைக்காட்சி, காதல் காட்சிகளில் நன்றாகவே செய்திருக்கிறார் வின்ஸ்டார் விஜய். நடன காட்சியில் ஆட அவர் தன்னை தயார் படுத்திக் கொள்ள வேண்டும்.

வாலிபால் ராஜாவுக்கு ஜோடியாக வரும் டெப்ளினா, இன்ஸ்பெக்டர் ராஜாவுக்கு ஜோடியாக வரும் பிரியா இருவருமே அழகான தேர்வு. அவர்கள் தங்கள் பங்களிப்பை எதார்த்தமாகவும் எந்த தடுமாற்றமும் இல்லாமல் செய்திருக்கிறார்கள்.

கவர்ச்சியான வில்லி கதாபாத்திரத்தில் கும்தாஜ் நடித்திருக்கிறார். அவர் விரிக்கும் வலையில் வின்ஸ்டார் விஜய் சிக்காத நிலையில் தானே களத்தில் இறங்கி அவரை போட்டுத்தள்ள முடிவு செய்கிறார்.
கும்தாஜ். அதற்காக அவர் தங்கி இருக்கும் ஓட்டல் அறைக்கு வந்து தனது கவர்ச்சியை காட்டி அவரை மயக்குவதெல்லாம் இளவட்டங் களுக்கு கவர்ச்சி விருந்து.
இப்படத்தில் மேலும் ஜோ மல்லூரி பி. சோமசுந்தரம், லயன் குமார் , பத்திரிகையாளர்கள் கே. எஸ். கே. செல்வா, மனோஜ், கார்த்திக் ஆகியோரும் நடித்திருக்கிறார்கள்.

ஒரு படத்தை எடுத்து முடித்து அதை திரைக்கு கொண்டு வருவது என்பது இப்போது கடினமான விஷயம் என்பது திரையுலகின ருக்கு தெரியும். இப்படத்தை கச்சிதமாக முடித்து தற்போது தியேட்டர் களிலும் வெளியிட்டிருக் கிறார் வின்ஸ்டார் விஜய். அதற் காகவே ஒரு பாராட்டு தெரிவிக் கலாம்.
நான்குக்கும் மேற்பட்ட சண்டைக் காட்சிகள், ஐந்து பாடல்கள் என்று படம் கலகலப்பாக செல்கிறது.

முதல் படம் என்பதற்காக அடலன்ஸ் ஒன்லியாக ஏதோ கவர்ச்சியை காட்டினோம்  வசூலை அள்ளினோம் என்ற நோக்கமில் லாமல்  நல்ல கருத்தை  சொல்ல வேண்டும் என்ற எண்ணத்தில் இப்படத்தை இயக்கி தயாரித்து இரட்டை வேடத்தில் நடித்திருக்கும் வின்சஸ்டார்  விஜயின் முயற்சியை கைகுலுக்கி பாராட்டத்தான் தோன்றுகிறது.
ஒளிப்பதிவில் போதிய தரம் இல்லை என்றாலும் காட்சிகளை பார்க்கும் அளவுக்கு படமாக்கி இருப்பது நலம்.

பாடல் காட்சிகள் பாடல் வரிகள்  டியூன் எல்லாமே அற்புதமாக இருக்கிறது.

எப்போதும் ராஜா-  பொழுது போக்கும்.

 

Related posts

சத்யராஜின் ’வெப்பன்’ படத்தைப் பாராட்டிய வடிவேலு

Jai Chandran

Radhe Shyam unveils latest poster on Janamashtami

Jai Chandran

டைட்டில் பட பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிட்ட முதல்வர்

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend