Trending Cinemas Now
சினிமா செய்திகள் விமர்சனம்

என் காதலே ( பட விமர்சனம்)

படம்: என் காதலே

நடிப்பு: லிங்கேஷ், திவ்யா தாமஸ், லெயா, காட்பாடி ராஜன், மாறன், கஞ்சா கருப்பு, மதுசூதனன், தர்ஷன்

தயாரிப்பு: ஜெயலட்சுமி

இசை: சாண்டி சாண்டல்லோ

ஒளிப்பதிவு:டோனி சான்,
வெங்கடேஷ்

இயக்கம்: ஜெயலட்சுமி

பி ஆர் ஓ: வேலு

கடல் சார்ந்த மீனவ குடியிருப்பில் வசிக்கும் லிங்கேஷை, அத்தை மகள் திவ்யா சிறுவயது முதல் காதலிக்கிறார். இந்நிலையில் தமிழ் கலாச்சாரத்தை கற்க வருகிறார் வெளிநாட்டு வெள்ளைக்காரப் பெண் லெயா. அவருக்கு உடனிருந்து உதவுகிறார் லிங்கேஷ். நட்பாக பழகும் இவர்களுக்குள் காதல் மலர்கிறது. ஒரு கட்டத்தில் இவர்கள் காதல் விவகாரம் திவ்யாவுக்கு தெரியவர அதிர்ச்சியாகிறார். அடுத்து எதிர்பாராத திருப்பங்கள் நிகழ்கிறது. இதன் முடிவு என்ன என்பது கிளைமாக்ஸ்.

ஹீரோ லிங்கேஷ் சராசரி மீனவ குப்ப வாலிபனாக எதார்த்தமான நடிப்பில் கவர்கிறார். அதேபோல் அவரை மாமா மாமா என்று அழைத்துக் கொண்டு அவர் நல்லாயிருக்க வேண்டும் என்று அவரையே திவ்யா சுற்றிச் சுற்றி வருவது அவர் வைத்திருக்கும் காதலை வெளிப்படுத்துகிறது. லிங்கேஷின் வெள்ளைக்கார காதலியாக நடித்திருக்கும் லெயா சேலை கட்டிக் கொண்டு தமிழ் பெண்ணாக தன்னை காட்டிக் கொள்ள முயல்வது அழகு.. அதுமட்டுமல்ல அவரும் அழகோ அழகு. காதல் பறிபோய் விடுமோ என்ற பதற்றம் அவரது நடிப்பில் வெளிப்படுவது அருமை.

மாறன், கஞ்சா கருப்பு இருவரும் சேர்ந்து காமெடி செய்து கலகலக்க வைக்கின்றனர். உன்னால என் மனைவிக்கு குழந்தை பிறந்தது நன்றி என்று மாறனிடம் கஞ்சா கருப்பு சொல்லி அவர் மனைவியிடம் சிக்கவிடுவது கலகல.

மீனவ குப்ப கதையாக இருந்தாலும் அதை முக்கோண காதல் கதையாக உருவாக்கி  திருப்பங்கள் சேர்த்து ரசிக்கும் விதமாக படஇயக்கியிருக்கிறார் ஜெயலட்சுமி.

சாண்டி சாண்டல்லோ இசை, டோனி சான்,
வெங்கடேஷ் ஒளிப்பதிவு கதைக்கு கைகொடுக்கிறது.

என் காதலே –
காதல் விடுகதை.

Related posts

சூர்யாவுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பாராட்டு கடிதம்..

Jai Chandran

வி 3 (பட விமர்சனம்)

Jai Chandran

ThalliPogadhey Censored with U/A

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend