Trending Cinemas Now
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

En 6 Vayhtjiyaar Kaalpanthatta kuzhu” movie will release on 15 September

பி எஸ் எஸ் (Pss) புரோடக்ஷன்ஸ்_ மற்றும்  உத்ரா புரொடக்ஷன்ஸ்_ இணைந்து தயாரித்துள்ள திரைப்படம் “எண் .6 வாத்தியார் கால்பந்தாட்ட குழு”  திரைப்படம் வரும் செப்டம்பர் 15ஆம் தேதி முதல் உலகம் எங்கும் திரையரங் குகளில் வெளியாகிறது .

மேலும் இத்திரைப்படத்தினை தெரு நாய்கள், படித்தவுடன் கிழித்து விடவும், கல்தா, வில்வித்தை, ஆகிய படங்களை தயாரித்து இயக்கிய இயக்குனர்
செ.ஹரி உத்ரா எழுதி இயக்கி தயாரிப்பாளராகவும் உடன் இணைந்து எஸ். பிரீத்தி சங்கர் தயாரித்துள்ளார்.

கிராமங்களில் இருந்து இந்திய அளவிலும் ,சர்வதேச அளவிலும் கால்பந்து விளையாட்டில் முத்திரை பதிக்க துடிக்கும் கூலித் தொழிலாளர்களின் குடும்பங் களைச் சேர்ந்த இளைஞர்கள் எவ்வாறு கால்பந்து விளையாட்டில் தங்களுக்கான இடங்களை திறமையின் மூலம் பிடிக்க முயல்கின்றனர்  என்பதை பின்னணியாக வைத்து அதற்கு பின்னால் உள்ள அரசியலை இத்திரைப்படம் பேசுகிறது.
மேலும் இத்திரைப்படத்தில் அதிகாரவர்க்கம் ,ஒடுக்கப்பட்டவர் களை எவ்வாறு அவர்களுடைய திறமைகளை ஒடுக்கி அவர்களை தங்களுடைய மேல் நிலையை அடைய முடியாமல் தவிக்கும் போக்கை மேற்கொண்டு மேற் கொள்கின்றனர் என்பதை படத்தின் மையக்கருவாக ஆழமாக இயக்குனர் பதிவு செய்துள்ளார் ,மேலும் இத்திரைப்படத்தில்
சரத் அறிமுக கதாநாயகனாகவும் அயிரா  கதாநாயகியாகவும் கஞ்சா கருப்பு, அருவி மதன் மற்றும் சோனா ஹைடன் ,நரேன் ,
இளையா, எஸ் .எம். டி கருணாநிதி மற்றும் பலர் திரைப்படத்தின் நடித்துள்ளனர். ஒளிப்பதிவு வினோத் ராஜா. இவர் வேல்ராஜ் ஒளிப்பதிவாளரின் உதவியாள ராக இருந்துள்ளார் …
இசை  ஏ  ஜே.அழிமிற்சாக் (AJ Alimirzaq , எடிட்டிங் கிஷோர்.  பாடல்கள் வித்யாசாகர் ( குவைத் )மற்றும் பா. இனியவன், செ. ஹரி உத்ரா ஆகியோர் எழுதியுள்ளனர்.

இத்திரைப்படம் பரமக்குடி, மதுரை ,ராம்நாடு பகுதிகளை சுற்றியுள்ள பகுதிகளில் சுமார் 300-க்கும் மேற் பட்ட நிஜ கால்பந்து விளையாட்டு வீரர்களை உருவாக்கி படப்பிடிப் பினை மேற்கொண்டுள்ளனர் பட குழுவினர்.
இத்திரைப்படத்தில் இரவு நேர காட்சிகள் சுமார் ஒரு 30 நாட்க ளுக்கும் மேலாக பரமக்குடியை சுற்றி உள்ள கிராமப்புறங்களில் நடத்தியுள்ளனர். படத்தின் சண்டைக் காட்சிகளும் ,பாடல் காட்சிகளும் பிரமாண்டமாக உருவாக்கப்பட்டுள்ளது.

Related posts

நிதி பற்றாக்குறையால் அரசு செலவுகள் குறைப்பு

Jai Chandran

ஒன்ஸ் அபான் ஏ டைம் இன் மெட்ராஸ் (பட விமர்சனம்)

Jai Chandran

வைபவ்-அனகா நடிக்கும் ஆக்‌ஷன் த்ரில்லர் ‘பஃபூன்’

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend