Trending Cinemas Now
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

ஈகை: சட்ட கல்லூரி மாணவியின் தீவிர போராட்டம்

ஒரு சட்ட கல்லூரி மாணவியின் தீர்க்கமான போராட்டம் ஈகை  திரைப்படமாக உருவாக்கியிருக்கிறது

இப்படம் பற்றி  இயக்குனர் அசோக் வேலாயுதம் கூறியதாவது:

பிற மொழி படத்தில் உதவி இயக்குனராக பணியாற்றியுள்ளேன்.

மும்பை , ஹைதராபாத் , சென்னை போன்ற பல்வேறு இடங்களில் 33 நாட்கள் ஈகை படத்தின் படப்பிடிப்பு முடிந்த நிலையில் , இறுதி கட்ட படப்பிடிப்பு இப்பொழுது துவங்கி உள்ளது .

இந்த இறுதி கட்ட படப்பிடிப்பில் பிளாஷ் பேக் மற்றும் கிளைமாக்ஸ் இயக்கியதுடன் படப்பிடிப்பு நடக்கிறது. .

இதில் மார்க் எனும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில்  ரோஷன் கனகராஜ் அறிமுகமாகிறார். இந்த மார்க்  பாத்திரம் – புஷ்பா பட வில்லன் சுனிலுடன் சார்ந்த கதையில் ஒரு முக்கியமான கதாபாத்திரமாய் திருப்பு முனையாய்  இருக்கும்.

மேலும்   அருவி பாலா-, ரூபினி மற்றும் 25 புதிய முகங்களை  முக்கிய கதாபாத்திரங்களில் அறிமுகமாகிறார்கள்

நாயகி அஞ்சலி நடிக்கிறார். சந்தோஷ் பிரதாப் , சுனில், அர்ஜய்,  பொன்வன்னன், ஹரிஷ் பேரடி ,  அபிராமி ,  தீபா ,  புகழ் போன்ற முன்னணி நடிகர்களும் நடிக்கிறார்கள் .

இப்படத்தின்  ஒளிப்பதிவாளர் ஸ்ரீதர் ஏற்கனவே முன் மயக்கம் என்ன ,  பரியேறும் பெருமாள் போன்ற படங்களில் ஒளிப் பதிவாளராக  பணியாற்றி உள்ளார்

விடாமுயற்சி , சரோஜா , ஆரண்யா காண்டம் போன்ற  படங்களில் பணியாற்றிய,   தேசிய விருது பெற்ற  என் பி. ஸ்ரீகாந்த்  எடிட்டிங் கவனிக்கிறார்.

காலா , கபாலி , சார்பாட்ட பரம்பரை, கேப்டன் மில்லர்  போன்ற படங்களின் ஆர்ட் டைரக்டர் ராமலிங்கம் இப்படத்தில் ஆர்ட்  டைரக்டராக பணியாற்றியுள்ளார் வசனம்: பரதன்.

இசை : தரன் குமார் – ஸ்டண்ட் மாஸ்டர்: சிறுத்தை கணேஷ் – பாடல் வரிகள் : கார்த்திக்.

தயாரிப்பு :கிருஷ்ணமச்சாரிய ராமபத்திரன், பிருந்தா கிருஷ்ணா க்ரியேஷன்ஸ்

சமுக நீதி – அரசியல் பகுத்தறிவு,  பொருளாதாரம் இந்த மூன்றும்தான் ஒரு மனிதனை மேன்மைபடுத்தும்  அதை ஈகை பேசுகிறது.

Related posts

பிடி சார் வேடத்தில் ஹிப் ஹாப் ஆதி

Jai Chandran

பிரசாந்த் – ஹரி இணையும் அதிரடி புதுப்படம்

Jai Chandran

‘Parking’ script in the Library of Academy of Motion Pictures library

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend