Trending Cinemas Now
சினிமா செய்திகள் விமர்சனம்

டான் (பட விமர்சனம்)

படம்: டான்

நடிப்பு: சிவகார்த்திகேயன், பிரியங்கா மோகன், எஸ்.ஜே.சூர்யா, சமுத்திரக்கனி, சூரி, பால சரவணன், ஆர்.ஜெ.விஜய், ஷிவானி, ஆதிரா, சிங்கம் புலி, முனிஸ் காந்த், காளி வெங்கட், ராஜூ, ஷாரிக் ஹாசன், மனோபாலா, கவுதம் வாசுதேவ் மேனன், ஸ்லாத் சரத், டத்தோ ராதாரவி, செல்லா, ஸ்வேதா வெங்கட்,

தயாரிப்பு: சுபாஷ்கரன், சிவகார்த்திகேயன்,

இசை: அனிருத்

ஒளிப்பதிவு: கே.எம்.பாஸ்கரன்

இயக்கம்: சிபி சக்ரவர்த்தி

பி.ஆர் ஒ: சுரேஷ் சந்திரா

எனிஜியரிங் படிக்கும் சக்ரவர்த்தி (சிவகார்த்திகேயன்) கல்லூரியில் மாணவர்களின் டானாக வலம் வருகி றான். கல்லூரி பிரின்சிபல் பூமிநாத னுடன் (எஸ்.ஜே.சூர்யா) எந்நேரமும் மோதிக்கொண்டிருக்கிறார். இருவருக்கும் நடக்கும் உச்சகட்ட மோதலில் பிரின்சிபல் தலையில் அடிபட்டு மருத்துவமனையில் சேர்கிறார். பெரும் கோபக்காரரான சக்ரவர்த்தியின் தந்தை சரியாக படிக்காத மகனை அடித்து விரட்டுகிறார். ஆனால் தனக்குள் இருக்கும் திறமையை கண்டு பிடிக்கும் சக்ரவர்த்தி சினிமா டைரக்டராக முயல்கி றான் அவனுக்கு காதலியும், நண்பர் களும் உதவுகின்றனர். இறுதியில் சக்ரவர்த்தியின் படிப்பு என்னவானது? அவனால் இயக்குனராக சாதிக்க முடிந்ததா?  என்பதற்கு உருக்கமான பதிலலளிக்கிறது கிளைமாக்ஸ்.

ஒரு படத்தில் மூன்று இடத்திலாவது மனதை தொடும் காட்சிகள் இருந்தால் போதும் அது ரசிகர்களை கவரும் படைப் பாக மாறிவிடும் அந்த தருணம் டான் படத்தில் பொருத்தமாகாவே அமைந்தி ருக்கிறது.

கல்லூரியில் டான் ஆக உலா வரும் சிவகார்த்திகேயன் செய்யும் சேட்டைகள் கல்லூரி வாழ்க்கையை கண்முன் நிறுத்துகிறது. அவருக்கும் எஸ்.ஜே. சூர்யாவுக்கும் நடக்கும் மோதல் படுவிறுவிறுப்பு .

லாஸ்ட் பெஞ்ச் ஸ்டுடன்ட் படிக்க ஆரம்பித் தால் என்ன ஆகும் என்பதை புரியவைக்க எல்லா மாணவர்களையும் புரியாத பாடத்திலிருந்து ஆசிரியர்களிடம் சந்தேகம் கேட்கும்படி உசுப்பி விட மாணவர்கள் அனைவரும் ஆசிரியர்களை சந்தேகம் கேட்டே துரத்துவது செம காமெடி.

தன் மகன் தன்னை ஏமாற்றிவிட்டான் என்பதற்காக மாணவர்கள் முன்னிலை யில் சிவாவை சமுத்திரக்கனி கன்னத்தில் பளார் பளார் என அறையும்போது அரங்கு அமைதி யாகிறது.

“கடைசி பெஞ்ச் ஸ்டுடன்ட் என்ன செய்வான்னு நீ காடிட்டே, கடைசி பெஞ்ச் ஸ்டுடன்ட் பிரின்சிபலானால் என்ன செய்வான் என்பதை நான் காட்டுகிறேன் என எஸ்.ஜே.சூர்யா சவால்விட்டு சிவாவை வறுத்தெடுப்பது சரியான போட்டி என சபாஷ் போட வைக்கிறது.

தன்னை வளர்ப்பதற்காக தந்தை சமுத்திரக்கனி எப்படியெல்லாம் உழைத்திருக்கிறார் என்பதை தாய் சொல்லக் கேட்டு சிவகார்த்திகேயன் கலங்குவதும் பின்னர் அவர் இறந்த பிறகு கால்களை பிடித்துக் கொண்டு சிவா கதறுவதும் கண்கலங்க வைக்கி றது.

படத்தில் சிவா, பிரியங்கா மோகன் காதல் ஊடல் ருசிகரமாக காட்சிகளை நகர்த்து கிறது. எந்த காட்சியும் தர்மசங்கடத்தை ஏற்படுத்த விடாமல் குடும்பத்தினரை ஒன்றாக அமர வைத்து நெளியாமல், குழையாமல் படம் பார்க்க வைத்திருக்கும் சிவகார்த்திகேயனுக்கும், இயக்குனர் சிபி சக்ரவர்த்திக்கும் ஸ்பெஷல் பாராட்டுக்கள்.

படத்தை தாங்கிப்பிடிக்கும் மூன்று தூண்கள் சிவகார்த்திகேயன், எஸ்.ஜே. சூர்யா, சமுத்திரக்கனி ஆகியோர்தான். டத்தோ ராதரவி கல்லூரி அதிபராக வந்து நிறைவு செய்கிறார். இவர்களுடன் பெரிய நட்சத்திர பட்டாளமே படத்தை நிரப்புகிறது.

லைகா சுபாஷ்கரன், சிவகார்த்திகேயன் இணைந்து தயாரித்திருக்கின்றனர்.

பெற்றோர்களை அவர்கள் இருக்கும் போதே கொண்டாடுங்கள் என்ற கருத்தை வாழைப் பழத்தில் ஊசி ஏற்றுவதுபோல் அழுத்தமாகவும் உருக்கமாகவும் பதிய வைத்திருக்கிறார் இயக்குனர் சிபி சக்ரவர்த்தி.

அனிருத் இசையில் சிவகார்த்திகேயன் படம் என்றாலே பாடல்கள் ஹிட்தான்.

கே.எம்.பாஸ்கரன் ஒளிப்பதிவு தெளிவு.

பட நீளத்தை சில நிமிடங்கள் குறைத்தால் இன்னும் ஸ்கிரிப்பாக இருக்கும்.

டான் – அனைவரின் மனதை கவர்வான்

Related posts

Fredrick not directing Andhagan: Official Satatement

Jai Chandran

சிம்பு, ஹன்சிகா படத்துக்கு கோர்ட் தடையா? பட நிறுவனம் விளக்கம்

Jai Chandran

ராஜ்குமார்- ஸ்ரீபிரியா மகள் சினேகா திருமணம்

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend