Trending Cinemas Now
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

டாக்டர் பிரகபல் இயக்கிய ஜாக்கி பட டீஸர் வெளியீடு..

பிகே7 ஸ்டுடியோஸ் தயாரிப்பில் டாக்டர் பிரகபல் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ஜாக்கி’ திரைப்படத்தின் டீசர் வெளியீடு.

யுவான் கிருஷ்ணா, ரிதான் கிருஷ்ணாஸ், அம்மு அபிராமி முதன்மை வேடங்களில் நடித்துள்ள ‘ஜாக்கி’, மதுரையில் நடக்கும் பாரம்பரிய கலாச்சார விளையாட்டான கெடா சண்டையை மையமாக கொண்டுள்ளது.

மழைக்காடுகளில் நடத்தப்படும் சவாலான மட் (Mud) ரேஸ் பந்தயத்தை மையமாக வைத்து இந்தியாவில் முதல் முறையாக உருவான ‘மட்டி’ திரைப்படத்தை வெற்றிகரமாக இயக்கி பாராட்டுகளைப் பெற்ற டாக்டர் பிரகபல் இயக்கத்தில் அடுத்து உருவாகியுள்ள திரைப்படம் ‘ஜாக்கி’.

பிகே7 ஸ்டுடியோஸ் தயாரித்து வழங்கும் ‘ஜாக்கி’, மதுரையை களமாகக் கொண்டு நடக்கும் பாரம்பரிய கலாச்சார விளையாட்டான கெடா சண்டையை மையமாக கொண்டு மண் மணத்துடனும் மண்ணின் மைந்தர்களின் குணத்துடனும் உருவாகியுள்ளது.

‘ஜாக்கி’ திரைப்படத்தில் இயக்குநர் டாக்டர் பிரகபல்லின் முதல் படமான ‘மட்டி’ திரைப்படத்தில் நடித்த யுவான் கிருஷ்ணா மற்றும் ரிதான் கிருஷ்ணாஸ் கதை நாயகர்களாக நடிக்க, அம்மு அபிராமி கதை நாயகியாக நடித்துள்ளார். திரைப் பிரபலங்கள் முக்கிய வேடங்களை ஏற்றுள்ளனர்.

‘ஜாக்கி’ திரைப்படத்தின் விறுவிறுப்பான டீசர் சென்னை முகப்பேர் கிழக்கு வேலம்மாள் மேல்நிலைப்பள்ளியில் சனிக்கிழமை (ஜனவரி 3) மாலை நடைபெற்ற 13ம் ஆண்டு வீதி விருது விழாவில் வெளியிடப்பட்டது. டீசரை கண்ட பார்வையாளர்கள் படக்குழுவினருக்கு வாழ்த்துகளை தெரிவித்தனர்.

இத்திரைப்படத்திற்கு சக்தி பாலாஜி இசையமைக்க, உதயகுமார் ஒளிப்பதிவு செய்ய, படத்தொகுப்பை ஸ்ரீகாந்த் மேற்கொண்டுள்ளார். கிரியேட்டிவ் ப்ரொடியூசராக ஆர்.பி. பாலா பணிபுரிந்துள்ளார். புரொடக்ஷன் கன்ட்ரோலர்: எஸ். சிவகுமார், கலை இயக்குநர்: சி. உதயக்குமார், ஆடியோகிராபி: எம்.ஆர். ராஜாகிருஷ்ணன், சண்டை பயிற்சி: ஜாக்கி பிரபு, உடைகள்: ஜோசுவா மேக்ஸ்வெல் ஜே, ஒப்பனை: பாண்டியராஜன், கலரிஸ்ட்: ரங்கா.

பிகே7 ஸ்டுடியோஸ் தயாரிப்பில் டாக்டர் பிரகபல் இயக்கத்தில் யுவான் கிருஷ்ணா, ரிதான் கிருஷ்ணாஸ், அம்மு அபிராமி முதன்மை வேடங்களில் நடித்துள்ள ‘ஜாக்கி’ விரைவில் திரையரங்குகளில் வெளியாகிறது

Related posts

வெற்றியும்-திருப்தியும் தந்த படம் பி டி சார்: ஹிப் ஹாப் ஆதி நெகிழ்ச்சி

Jai Chandran

துருவ் விக்ரம் நடிக்கும், “பைசன் காளமாடன்” தீபாவளி ரிலீஸ்

Jai Chandran

நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் ( பட விமர்சனம்)

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend