Trending Cinemas Now
சினிமா செய்திகள் விமர்சனம்

பபூன் (பட விமர்சனம்)

படம்: பபூன்

நடிப்பு: வைபவ்
அனகா , அந்தகுடி இளையராஜா , ஜோஜு ஜார்ஜ் , ஆடுகளம் நரேன்,
தமிழரசன், ஆடுகளம் ஜெயபாலன், மூணார் ரமேஷ் , விஸ்வநாதன் –
ராஜ்குமார், குமார் கங்கப்பன், கஜராஜ், சிந்தர் , சங்கலிசக்தி,
சிவபாண்டி, சௌதர்யா,
உமா மகேஸ்வரி , சரண்யா ரவிச்சந்திரன், தங்கம் , சுபாஷ் பழனி வேலுசாமி

தயாரிப்பு: கார்த்திகேயன் சந்தானம், சுதன் சுந்தரம், ஜெயராமன் , கார்த்திக் சுப்பராஜ்

இசை: சந்தோஷ் நாராயணன்

ஒளிப்பதிவு: தினேஷ் புருஷோத்தமன்

இயக்கம்: அசோக் வீரப்பன்

பி ஆர் ஒ: நிகில் முருகன்

மதுரை பக்கத்தில் உள்ள கிராமத்தில் வாழும் குமரன் (வைபவ் ), அவனது நாடகத்தில் பபூன் வேடம்போடுபவன். சரியான வருமானமில் லாததால் வெளி நாடு சென்று சம்பாதிக்க எண்ணு கிறான் குமரன். அதற்கு ஒரு லடசம் பணம் தேவைப்படுகிறது. பணம் சம்பாதிக்க லாரி ஓட்டு கிறான் அந்த லாரியில் போதை பொருள் இருப்பதாக போலீஸார் மடக்கிப் பிடித்து குமரன் அவனது நண்பன் இருவரையும்  கைது செய்கின்றனர். இந்த விவகாரத் தில் அரசியல் தலையீடு இருப் பதை அறிந்து குமரன் நண்ப னுடன் தப்பிக்கிறான். இருவரும் கள்ள பட.கில் ஆஸ்த்ரேலியா செல்ல முயல்கின்றனர் அங்கும் அதிகாரிகள் நடத்தும் சோதனை அறிந்து இருவரும் கடலில் குதித்து தப்பிக்கின்றனர். இந்த சிக்கலி ருந்து விடுபட மீண்டும் கடத்தல் கூட்டத்தின் உதவியை நாடுகி றான். அவர்களுடன் ஏற்படும் மோதலில் குமரனும் நண்பனும் தப்பினார்களா? இல்லையா? என்பதற்கு பதில் சொல்கிறது கிளைமாக்ஸ்.

படத்தின் டைட்டில் பபூன் என்றதும் தொடக்கம் முதல் இறுதிவரை சிரித்து சிரித்து வயிறு வலித்து விடும் என்ற எண்ணத்தில் அமர்ந் தால் தொடக்க காட்சி சிரிப்போடு ஆரம்பித்தாலும் போகப்போக போதைபொருள் கடத்தல், அரசியல் பழிவாங்கல் என்று படம் வேறு ரூட்டில் திசை திரும்புகிறது.

அறிமுக காட்சியில் பபூன் போல் மேக்கப் அணிந்து வந்தனம் பாடும் வைபவ் உடல் மொழியும், பாட்டு மாக பாடி அசல் பபூனாக மாறியிருக்கிறார். இன்னமும் சில சேட்டைகளையும், சில அரசியல் தோலுரிப்புகளையும் செய்திருந் தால் ரசித்திருக்கலாம்.

நாடகத்தில் வைபவ் பேசும் டபுள் மீனிங் வசனங்கள் நமட்டு சிரிப்பை வரவழைக்கிறது.

லாரி டிரைவராக வேலைக்கு சேரும் வைபவ் வண்டியை ஓட்டிவர அவரை போலீஸ் துரத்துவதும் போலீஸிடம் சிக்கிய பின் அப்பாவித்தனமாக போலீஸ் அதிகாரி தமிழரசன் முன்னிலை யில் நாடக வசனம் பேசி நடிக்கும் வைபவும் அவரது நண்பர் அந்தக்குடி இளைய ராஜாவும் வெகுளித் தனத்தை வெளிப்படுத்துகின்றனர்.

ஓட ஓட அரிவாளுடன் விரட்டும் ரவுடிக் கூட்டத்தை ஒரு கட்டத்தில் எதிர்த்து நின்று வைபவ் திருப்பி தாக்கும்போது கதையில் சூடு பிடிகிறது.

போலீஸ் அதிகாரியாக வரும் ஜெய்பீம் தமிழரசன் அலட்டல் இல்லாமல் அழுத்தமான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.

ஹீரோயின் அனகா இலங்கை தமிழ் பெண்ணாக போல்டான வேடத்தில் நடித்து கவர்கிறார்.

தனபால் என்ற கதாபாத்திரத்தில் வரும் ஜோஜூ ஜார்ஜ் தோற்றத்தி லேயே பயமுறுத்துகிறார்.

இப்படத்தை கார்த்திகேயன் சந்தானம், சுதன் சுந்தரம், ஜெயராமன் கார்த்திக் சுப்பராஜ் தயாரித்திருக்கின்றனர்.

கார்த்திக் சுப்பராஜிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய அசோக் வீரப்பன் டைட்டில் ஒன்றாகவும் கதை வேறொன் றாகவும் அமைத்து படத்தை இயக்கியிருந்தாலும் கமர்ஷியல் அம்சங்களுடன் இயக்கியிருப் பதால் போரடிக்காமல் பொழுது போகிறது.

சந்தோஷ் நாரயணன் நாடக தாளங்களை ஒரிஜினாலிட்டி குறையாமல் பார்த்துக் கொண்டின ருக்கிறார்.

தினேஷ் புருஷோத்துமன் கேமிரா தரை மீதும் கடல் மீதும் ரசிகர்களை கைகோர்த்து அழகாக அழைத்துச் சென்றிருக்கிறது.

பபூன்- பழசும் புதுசும் கலந்த த்ரில்லர்.

 

Related posts

Malayalam filmmaker, actor come together for Tamil movie on Jallikattu

Jai Chandran

Sakshi Agarwal plays the female lead in Guest: Chapter-2..

Jai Chandran

VARIED ROLES AND UPCOMING INDIAN ANTHOLOGY ‘NAVARASA’

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend