படம்: ஆட்டோகிராப்
நடிப்பு: சேரன், சினேகா, கோபிகா, கனிகா, மல்லிகா, கிருஷ்ணா, பெஞ்சமின், ராஜேஷ்
தயாரிப்பு: சேரன்
இசை: பரத்வாஜ் (
பாடல்கள்)
பின்னணி இசை: சபேஷ் முரளி
ஒளிப்பதிவு: ரவி வர்மன், விஜய் மில்டன், துவாரக நாத்
இயக்கம்: சேரன்
பிஆர்ஓ: நிகில் முருகன் (ரீ ரிலீஸ்)
2004 ஆம் ஆண்டு திரைக்கு வந்து வெற்றி பெற்ற ஆட்டோகிராப் 21 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது ரீ ரிலீஸ். ஆகியிருக்கிறது.
கதை:
செந்தில் (சேரன்) பள்ளியில் படிக்கும் போது உடன்படிக்கும் கமலாவை காதலிக்கிறார். அந்த காதல் பாதிலேயே முறிந்து போக, கேரளா சென்று கல்லூரியில் படிக்கும் செந்திலுக்கு உடன்படிக்கும் மாணவி லத்திகா (கோபிகா) மீது காதல் வருகிறது. ஒரு கட்டத்தில் அந்த காதலும் முறிந்து போகிறது. காதல் தோல்வியில் வாழ்க்கையை வெறுத்துத் திரியும் செந்திலுக்கு திவ்யா என்ற இளம் பெண்ணின் நட்பு கிடைக்கிறது. அதன் பிறகு செந்தில் வாழ்க்கையில் என்ன மாற்றமெல்லாம் நடக்கிறது, அவர் யாரை மணக்கிறார் என்பதெல்லாம் பிளாஷ்பேக் கதைகளாக கிளைமாக்ஸ் வரை தொடர்கிறது.
80ஸ் கிட்ஸ், 90ஸ் கிட்ஸ் , 2k கிட்ஸ், ஏன்? zen zee கிட்ஸ் வரை தொடர்புபடுத்திக் கொள்ளும் எல்லோருக்குமான ஒரு கதையைத்தான் அப்போதே படைத்திருக்கிறார் இயக்குனர் சேரன்.
21 ஆண்டுகளுக்குப் பிறகு ஆட்டோகிராப் படத்தை பார்க்கும் ரசிகர்களுக்கு அந்த படத்தில் இடம்பெறும் ஞாபகம் வருதே ஞாபகம் வருதே.. என்ற பாடலைப் போல் தங்கள் வாழ்வில் நடந்த காதல், பிரேக் அப், பள்ளி கல்லூரி நாட்கள், நண்பர்கள் தோழிகள் கதை எல்லாமே மனதிற்குள் வந்து ஆட்கொண்டு
நெஞ்சத்தை கனமாக்கி விடும் என்பது மட்டும் உறுதி..
செந்திலாக நடிக்கும் சேரன் தொடங்கி கமலாவாக நடிக்கும் மல்லிகா, லத்திகாவாக நடிக்கும், கோபிகா, திவ்யாவாக நடிக்கும் சினேகா ஆகிய நான்கு பேரும் மனதிற்குள் காதல், சோகம், அழுகை, நட்பு என எல்லா உணர்வுகளையும் தட்டி எழுப்பி விடுகிறார்கள்.
குறிப்பாக சினேகா நடித்திருக்கும் திவ்யா கதாபாத்திரம் ஒவ்வொரு இளைஞரையும் இப்படி ஒரு தோழி நமக்கு இல்லையே என்று ஏங்க வைத்து விடும், இருந்தால் அவர்களுக்கு நன்றி சொல்ல வைக்கும்..

ஒவ்வொரு பூக்களுமே சொல்கிறதே…
வாழ்வென்றால் போராடும்
போா்க்களமே… பாடல் வாழ்வில் நம்பிக்கை இழந்தவர்களுக்கு மீண்டும் தன்னம்பிக்கையை கொடுத்து நிமிர வைக்கும்..
ஆட்டோகிராப் படத்தை இதற்கு மேல் விமர்சிப்பதை விட படத்தைப் பார்த்து அந்த அனுபவத்தை நீங்கள் உணர வேண்டும் என்று சொல்வது தான் சரியாக இருக்கும்.. அந்த அனுபவத்தை ரசிகர்களாகிய நீங்களும் பெறவேண்டும் என்பதே இதன் நோக்கம்..
பரத்வாஜ் இசையும், சபேஷ் முரளி பின்னணி இசையும் அன்றைக்கும் சரி, இன்றைக்கும் சரி படத்திற்கு பக்க பலம்.
கேரளாவில் படமாக்கப்பட்டிருக்கும் கோபிகா ,சேரன் காதல் காட்சி ஒளிப்பதிவை அதிஅற்புதமாக படமாக்கி மதிமயங்கச் செய்கிறார் விஜய் மில்டன்.
காலத்தால் அழிக்க முடியாத படங்கள் என்று தமிழில் சில படங்களை கூறலாம். அந்த வரிசையில் ஆட்டோகிராப் படத்தையும் இணைக்கலாம்.
சிறந்த இயக்குனர்கள் வரிசையில் இப்படம் மூலம் சேரனும் தனது பெயரை பொன்னெழுத்தில் பொறித்திருக்கிறார் .
ஆட்டோகிராப் – பெரிய திரையில் பார்க்க மீண்டும் ஒரு பொன்னான வாய்ப்பு.

Review By
K Jayachandhiran
www.trendingcinemasnow.com
