Trending Cinemas Now
சினிமா செய்திகள் விமர்சனம்

ஆர் யூ ஒ கே பேபி (பட விமர்சனம்)

படம்: : ஆர் யூ ஒ கே பேபி

நடிப்பு:  சமுத்திரக்கனி, அபிராமி, லட்சுமி ராமகிருஷ்ணன், மிஷ்கின், ஆடுகளம் நரேன், பாவல் நவநீதன், முல்லையரசி, ரோபோ சங்கர், அபிஷேக்

தயாரிப்பு:; மங்கி கிரியேட்டிவ் லேப்ஸ் ஆர்.ராமகிருஷ்ணன்

இசை:இளையராஜா

ஒளிப்பதிவு: கிருஷ்ண சேகர்

இயக்கம்: லட்சுமி ராமகிருஷ்ணன்

பி ஆர் ஓ:  சதீஷ் ( AIM) சிவா

பாலன் ( சமுத்திரக்கனி) , வித்யா (அபிராமி)  குழந்தையில்லாமல் தவிக்கும் நிலையில் திருமணமே ஆகாமல் கர்ப்பமாகும். ஷோபா விடம் (முல்லையரசி) நர்ஸ் ஒருவர் நைசாக பேசி அவர் பிரசவிக்கும் குழந்தையை பாலன் தம்பதிக்கு வாங்கி தருகிறார். ஒரு வருடம் ஆன நிலையில் தனது குழந்தை யை திரும்ப தரும்படி  கேட்கிறார் முல்லையரசி. பாலன் தர மறுப்ப தால் விவகாரம் போலீஸ் வரை சென்று கோர்ட்டுக்கு செல்கிறது. பெற்றவருக்கு குழந்தை சொந்தமா, வளர்த்தவருக்கு குழந்தை சொந்தமா? என்ற வழக்கு நடக்கிறது. இறுதியில்.குழந்தை யாருக்கு கிடைக்கிறது என்பது எதிர்பாராத திருப்பம்.

அவ்வப்போது குட்டிக்கதையாக இந்த கதையை கேட்டிருப்போம். அதுதான் கரு ஆனால் இதில் விவகாரம் வேறு விதமாக அலசப் படுகிறது. ஏற்கனவே டி வி ஷோவில் சொல்வதெல்லாம் உண்மை என்ற நிகழ்ச்சி மூலம் பாப்புலரான லட்சுமி ராமகிருஷ் ணன் இந்த படத்தில்  சொல்லா ததும் உண்மை என்ற நிகழ்ச்சியை நடத்தி அதன் மூலம் இந்த கதையை தொடங்கி வைக்கிறார்.

தான் டி வியில் நடத்திய  நிகழ்ச்சியை பலரும் மீம்ஸ் போட்டு கலாய்க்கும் நிலையில் லட்சுமியே  தன் நிகழ்ச்சியின் அவலங்களை அக்குவேறு ஆணிவேறாக பிரித்து மேய்ந்திருக்கிறார். டிவியில் எபிசோட் படப்பிடிப்பு நடக்கும் போது அதற்கு பின்னால் என்னென்ன அவமானங்களை சந்திக்கிறார், ஒரு  நிகழ்ச்சிக்கு எப்படி ஆட்களை பிடிக்கிறார்கள் பின்னர் சீன் பரபரப்பாக  வருவ தற்கு இயக்குனர் தரும் டார்ச்சர் எல்லாமே அவர் நிஜத்தில் அனுபவித்த சம்பவங்கள் என்றே தோன்றுகிறது.

குழந்தையை தத்தெடுக்கும் பாலனாக வரும் சமுத்திரக்கனிக்கு நடிப்பை வெளிப்படுத்த பெரிய வாய்ப்பில்லை என்றாலும் அந்த வேடத்துக்கு ஒரு வெயிட்டை ஏற்படுத்தி தருகிறார்.  அபிராமி வளர்ப்பு பிள்ளைக்காக தாய்ப்பால் சுரக்க வைக்கும் காட்சி நெகிழ்ச்சி.

திருமணம் செய்யாமல் வாழும் முல்லையரசி  அசோக் மூலமாக பிறக்கும் குழந்தையை தத்து கொடுத்துவிட்டு பின்னர் குழந்தை யைத் திரும்பக் கேட்டு போலீஸ் வரை செல்வது பெற்ற தாயின் உரிமை என்றாலும் அவர் குழந்தைக்காக பெற்றதை தவிர வேறு எதுவுமே செய்யவில்லை என்பது அவர் தரப்பில் மைனஸ் என்பது கிளியராக தெரிகிறது.

பொறுப்பற்ற காதலனாக அசோக் எதார்த்தம் காட்டுகிறார்.

குழந்தை யாருக்கு சொந்தம் என்ற வழக்கு கோர்ட்டுக்கு சென்ற பிறகு நடக்கும் வாத பிரதி வாதங்கள் நிஜ கோர்ட்டை கண்முன் நிறுத்து கிறது. நீதிபதியாக வரும் ஆடுகளம் நரேன் பொறுமையை கையாண்டிருப்பது கதாபாத்திரத் துக்கு பொருத்தம். கோர்ட்டில் முல்லையரசி பேசும் சில வசனங்கள்  அடல்ட் ரகமாக இருந் தாலும் அந்த வழக்கிற்கு தேவை என்பதை உணர முடிகிறது

மிஷ்கின், மற்ற கதாபாத்திரங் களும் ஜாடிக்கேத்த மூடிகள்.

:மங்கி கிரியேட்டிவ் லேப்ஸ் சார்பில் ஆர்.ராமகிருஷ்ணன்  தயாரிக்க இயக்குனர் விஜய் படத்தை வழங்கியிருக்கிறார்.

இளையராஜா இசை,  தென்றலின் தாலாட்டு.

கிருஷ்ண சேகர் ஒளிப்பதிவு ஒ கே.

இயக்குனர் லட்சுமி ராமகிருஷ் ணன் தன் சொந்த அனுபவங் களை பின்னணியாக வைத்து இக்கதையை இயக்கியிருப்பதால் அவர் சந்தித்த அவமானங்களும் ஆங்காங்கே வெளிப்படுகிறது. சட்ட ரீதியாக இல்லாமல் இயற்கை நீதியாக கிளைமாக்ஸ் இருப்பதால் அது சர்ச்சையை உண்டாக்கும்

ஆர் யூ ஓ கே பேபி – குழந்தையை தத்தெடுப்பவர்கள் நிச்சயம் பார்க்க வேண்டிய படம்.

 

 

 

 

 

 

Related posts

பிரபாசின் ‘ஃபௌஜி‘ பட புதிய போஸ்டர் அர்ப்பணிப்பு..

Jai Chandran

Director Kiruthiga Udhayanidhi’s next directorial venture

Jai Chandran

Engaging and Interesting Vaazhl trailer

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend