அரண்மனை 3 திரைப்படத்தை பார்க்க வாய்ப்பு கிடைத்த சிலர் படத்தின் Climax காட்சிகள் இதுவரை தமிழ் சினிமாவில் இல்லாத அளவுக்கு மிகப்பிரம்மாண்டமாக படமாக்கப்பட்டடுள்ளதாகவும், படத்தின் VFX, CG காட்சிகள் மிக தத்ரூபமாக அமைந்துள்ளதாகவும் சிலாகிக்கின்றனர்.
அரண்மனை 3 படத்தில் யோகிபாபு மற்றும் விவேக் காம்பினேஷனில் நகைச்சுவை காட்சிகள் பட்டையை கிளப்பியுள்ளதாக படம் பார்த்த சிலர் சொல்கின்றனர். தியேட்டரில் ரசிகர்கள் வயிறு குலுங்க சிரித்து சிதரப்போவது உறுதியாகியுள்ளது.
அரண்மனை சீரீஸ் படங்களில் ஃப்ளாஷ் பேக் காட்சிகள் மனதை உருக்கும் வகையில் இடம்பெற்றிருக்கும். அரண்மனை 3 படத்தில் இடம்பெற்றிருக்கும் ஃப்ளாஷ் பேக் காட்சிகள் முந்தைய இரண்டு படங்களை விட மிகவும் உருக்கமாகவும் தாய்மார்கள் கண்ணீர் சிந்துவது போலவும் அமைந்துள்ளதாம். பொதுவாகவே அரண்மனை படங்களுக்கு தாய்மார்கள் ஆதரவு அதிகம். அரண்மனை 3 திரைப்படத்திற்கு தாய்மார்களின் அதீத ஆதரவு கிடைக்கும் என்று கூறப்படுகிறது.
அரண்மனை 1 மற்றும் 2 படங்களில் வரும் கதாநாயகர்கள் கதாபாத்திரத்தை விட அரண்மனை 3 படத்தில் கதாநாயகனாக நடித்துள்ள ஆர்யாவின் கதாபாத்திரத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வடிவமைக்கப்பட்டுள்ளதாம்..ஆர்யாவில் சினிமா கேரியரில் அரண்மனை 3 ஒரு முக்கியமான படமாக இருக்கும் என்று கூறப்படுகிறது.
பொதுவாக அரண்மனை சீரிஸ் படங்களில் இயக்குனர் சுந்தர் C ஏற்று நடிக்கும் கதாபாத்திரம் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும் . அதே போல் அரண்மனை 3 படத்தில் பல மர்ம முடிச்சுக்களை அவிழ்த்து பல திருப்பங்களை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளதாம்.
இயக்குனர் சுந்தர் C படங்களில் கதா நாயகிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு இருக்கும். அதுவும் குறிப்பாக அரண்மனை சீரீஸ் படங்களில் மிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது .