Trending Cinemas Now
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

அரண்மனை  3’ ஜீ 5 தளத்தில் 12 நாளில் 7 கோடி நிமிடங்கள் பார்வை: புதிய சாதனை

அரண்மனை  3’ திரைப்படம், ZEE5 தளத்தில் 7 கோடி நிமிடங்கள் பார்வை நேரத்தை, 12 நாட்களில் கடந்து, சாதனை படைத்தது

இயக்குநர் சுந்தர் சி இயக்கத்தில், ஆர்யா, ராஷிக்கண்ணா, விவேக் மற்றும் யோகிபாபு நடிப்பில் வெளியான ‘அரண்மனை 3’ திரைப்படம், சமீபத்தில் ZEE5 ஓடிடி தளத்தில் வெளியானது. திரையரங்குகளில் மிகப்பெரும் வெற்றியை பெற்ற ‘அரண்மனை 3’  திரைப்படம் ஜீ5 தளத்தில் வெளியான 12 நாட்களில், 7 கோடி நிமிடங்கள் பார்வை நேரத்தை கடந்துள்ளது. ரசிகர்களின் பெரும் வரவேற்பில் படக்குழுவினரும், ZEE5 குழுவினரும் பெரும் உற்சாகத்தில் உள்ளனர்.

ZEE5 நிறுவனம் அடுத்தடுத்து அட்டகாசமான கதைகளுடன், வெற்றிகரமான திரைப்படங்களை தந்து, ரசிகர்களை அசத்தி வருகிறது. இந்த வெற்றி வரிசையில் மலேஷியா டூ அம்னீஷியா, டிக்கிலோனா மற்றும் விநோதய சித்தம்’ திரைப்படங்களை  தொடர்ந்து, தற்போது ‘அரண்மனை 3’ திரைப்படமும் இந்த வரிசையில் இணைந்துள்ளது.

ZEE5  நிறுவனத்தின் அடுத்த திரைப்படம் “சித்திரை செவ்வானம்”, இயக்குநர் விஜய் எழுத்தில், ஸ்டண்ட் சில்வா இயக்குனராக அறிமுகமாகும் இப்படம் பிரத்யேக வெளியீடாக ZEE5 தளத்தில் 3 டிசம்பர் அன்று வெளியாகிறது.

மேலும் பல சிறப்பு மிக்க பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்த,  பல்வேறு படைப்புகளுடன் அடுத்தடுத்த மாதங்களில் ZEE5 தனது சந்தாதாரர்களை  மகிழ்விக்க உள்ளது.

Related posts

Dhoni Met Actor Vijay

Jai Chandran

நோக்க நோக்க (பட விமர்சனம்)

Jai Chandran

Santhanam-starrer ‘DD Returns’ Press Meet Event

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend