சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த பாட்ஷா, பாபா படங்களை இயக்கியதுடன் கமல்ஹாசன் நடித்த சத்யா மற்றும் ஆஹா உள்ளிட்ட பல்வேறு வெற்றிப்படங்களை இயக்கியவர் சுரேஷ் கிருஷ்ணா.
நீண்ட இடைவெளிக்கு பிறகு சுரேஷ் கிருஷ்ணா அனந்தா பக்தி படம் இயக்குகிறார்.
உலகம் முழுவதும் கோடிக்கணக்கான பக்தர்களை கொண்டிருக்கும்
புட்டபர்த்தி சத்ய சாய்பாவின் 100வது பிறந்த நாளை முன்னிட்டு அவரது அற்புதங்களை சொல்லும் ஆன்மிக பக்தி படமாக அனந்தா உருவாகிறது.
இப்படத்தை கிரிஷ் கிருஷ்ணமூர்த்தி தயாரிக்கிறார். பா. விஜய் வசனம் மற்றும் பாடல்களை எழுத, தேனிசை தென்றல் தேவா இசையமைத்துள்ளார்.
இதில் ஜெகபதி பாபு, சுஹாசினி மணிரத்னம், ஒய். ஜி. மகேந்திரன், நிழல்கள் ரவி, தலைவாசல் விஜய், ஸ்ரீ ரஞ்சனி, அபிராமி வெங்கடாசலம் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.
இப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் உள்ள மியூசிக் அகாடமி அரங்கில் நடந்தது.
இவ்விழாவில் பட தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணு, இயக்குனர் லிங்குசாமி, நடிகர்கள் ஒய் ஜி மகேந்திரன், நிழல்கள் ரவி, தலை வாசல்விஜய், சித்ரா லட்சுமண், பேச்சாளர் பாரதி பாஸ்கர், இசை அமைப்பாளர் தேவா, பாடகர் மனோ, நடிகை சுகாசினி , கலந்து கொண்டு ட்ரெய்லரை வெளியிட்.டு பின்னர் வாழ்த்தி பேசினார்கள்
மேலும் அனந்தா படத்தை அனைவரும் காண வேண்டும் என்று கேட்டுக்கொண்டதுடன் சத்ய சாய் பாபாவின் ஆசி வேண்டி பிரார்தித்தார்கள்.

இப்படம் பற்றி இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணா கூறியது:
அனந்தா திரைப்படம் மன வலியை போக்கி சாந்தமாகவும் சந்தோஷமாகவும் மற்றும் நம்பிக்கையையாகவும் மாற்றும் ஆழமான, மனதை நெகிழ வைக்கும் 5 கதைகளை இப்படம் வழங்குகிறது.
ஒவ்வொரு மனித வாழ்விலும் வழிகாட்டும் கண்ணுக்கு தெரியாத அருளை படம்பிடித்து காட்டும் படமாக இது இருக்கும்.
தெய்வீகம் என்பது கோவில்களிலோ அல்லது அற்புதங்களிலோ மட்டும் அடங்கிவிடுவதில்லை.. அது நம்பிக்கை, இரக்கம் மற்றும் சரணாகதியின் ஒவ்வொரு செயலிலும் அமைதியாக வாழ்கிறது என்பதை அனந்தா படம் வெளிப்படுத்துகிறது. விழாவில் டிரெய்லர் வெளியிடப்பட்டு வரவேற்பு பெற்றது. மேலும் விழாவில்
பங்கேற்ற அனைவருக்கும் பாபாவின் பிரசாதம், ஆன்மிக புத்தகங்கள் வழங்கப்பட்டன.
