Trending Cinemas Now
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

ஆதித்யா பாஸ்கர்- கௌரி கிஷன் ஷூட்டிங் நிறைவு..

ஆர்ஜின் ஸ்டுடியோஸ் – ஆதித்யா பாஸ்கர்- கௌரி கிஷன் – கூட்டணியில் உருவாகும் ‘புரொடக்ஷன் நம்பர் 1′ படத்தின் படப்பிடிப்பு நிறைவு.

தேசிய விருது பெற்ற நடிகர் எம். எஸ். பாஸ்கரின் வாரிசும், ’96’ படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமாகி, பிரபலமான இளம் நட்சத்திரங்கள் ஆதித்யா பாஸ்கர் – கௌரி கிஷன் ஆகியோர் மீண்டும் இணைந்து நடித்திருக்கும் ‘புரொடக்ஷன் நம்பர் 1’ எனும் படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது என படக் குழுவினர் உற்சாகத்துடன் தெரிவித்துள்ளனர்.

அறிமுக இயக்குநர் ராஜ்குமார் ரங்கசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள பெயரிடப்படாத திரைப்படத்தில் ஆதித்யா பாஸ்கர், கௌரி கிஷன், சரஸ்வதி மேனன், கே. பாக்யராஜ், ரெடின் கிங்ஸ்லி, டிஎஸ்ஆர் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். எல். ராமச்சந்திரன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு எம். எஸ். ஜோன்ஸ் ரூபர்ட் இசையமைத்திருக்கிறார். பரத் விக்ரமன் படத்தொகுப்பு பணிகளை மேற்கொண்டிருக்கிறார். ஃபேமிலி என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை ஆர்ஜின் ஸ்டுடியோஸ் ( Origin Studios) நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் கண்ணதாசன் தயாரித்திருக்கிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்து தற்போது படப்பிடிப்புக்கு பிந்தைய தொழில்நுட்ப பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்றும் , விரைவில் இந்த படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்படும் என்றும் படக் குழுவினர் மகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொண்டுள்ளனர்.

படத்தைப் பற்றி இயக்குநர் பேசுகையில், ” உண்மை சம்பவத்தை தழுவி தற்போதைய ஜென் ஜீ தலைமுறையினர் ரசிக்கும் வகையில் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. ஃபேமிலி என்டர்டெய்னராக தயாராகும் இதில் ’96’ படத்திற்கு பிறகு மீண்டும் ஆதித்யா பாஸ்கர்- கௌரி கிஷன் ஜோடி திரையில் மேஜிக் செய்திருக்கிறார்கள். இது அனைத்து ரசிகர்களையும் கவரும்” என்றார்.

Related posts

Jenma Natchathiram receives positive reaction before Release

Jai Chandran

கடைசி விவசாயி படத்துக்கு விவசாய சங்கம் பாராட்டு

Jai Chandran

Hukum World Tour Grand Finale

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend