Trending Cinemas Now
அரசியல் சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

நடிகை சரோஜாதேவி திடீர் மரணம்: முதல்வர் மு க ஸ்டாலின், ரஜினி இரங்கல்

மறைந்த எம் ஜி ஆர், சிவாஜி, ஜெமினி கணேசன் போன்ற பிரபல ஹீரோக்களுடன் நடித்து புகழ் பெற்றவர் நடிகை சரோஜா தேவி. சினிமா உலகில் கன்னடத்து பைங்கிளி என்ற பட்டமும் இவருக்கு உண்டு.

87 வயதான இவர் கடந்த சில மாதங்களாகவே உடல்நலக் குறைவால் சிகிச்சை பெற்று வந்தார். மூச்சுத்திணறல் காரணமாக பெங்களூரு கொலம்பியா ஏசியா மருத்துவமனையில் சரோஜா தேவி அனுமதிக்கப்பட்டிருந்தார் . இந்நிலையில் இன்று (ஜூலை 24 2025) காலை சிகிச்சை பலனில்லாமல்  திடீர் மரணமடைந்தார்

சரோஜாதேவி திடீர் மரணம் தகவல் வெளியானவுடன் தமிழ் திரையுலகம் அதிர்ச்சியில் ஆழ்ந்தது. அவரது ரசிகர்களும் துயரத்தில் ஆழ்ந்தனர்.
சரோஜாதேவி மறைவுக்கு திரையுலக பிரமுகர்களும், அரசியல் பிரமுகர்களும் தங்களது இரங்கலை தெரிவித்துள்ளனர்.

தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி:
தென்னிந்தியத் திரையுலகின் பழம்பெரும் நடிகையான திருமதி சரோஜாதேவி , மறைந்த செய்தியறிந்து மிகவும் வேதனையடைந்தேன். அன்னாரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கல் என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி:
பழம்பெரும் திரைப்பட நடிகை அபிநய சரஸ்வதி என ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படும் திருமதி. சரோஜா தேவி காலமானார் என்ற செய்தி கேட்டு மிகுந்த துயருற்றேன். தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி என பன்மொழிகளில் 200-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் தனது தனித்துவமிக்க நடிப்பாற்றலால் ரசிகர்களைக் கவர்ந்தவர் சரோஜா தேவி. எம்ஜிஆர் உடன் சரோஜா தேவி இணைந்து நடித்த திரைப்படங்கள் யாவும் காலத்தால் அழியாப் புகழ் பெற்றவை. சரோஜா தேவி எனும் பெயர் அப்படங்கள் வாயிலாக என்றென்றைக்கும் உச்சரிக்கப் பட்டுக்கொண்டே இருக்கும்.

அம்மா அவர்களின் பேரன்பைப் பெற்ற சரோஜா தேவியை இழந்து வாடும் அவர்தம் குடும்பத்தாருக்கும், திரைத்துறையைச் சார்ந்தோருக்கும், ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். மறைந்த அவர்தம் ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.


ரஜினிகாந்த இரங்கல்:
பல கோடி ரசிகர்களின் மனம் கவர்ந்த மாபெரும் நடிகை சரோஜாதேவி இப்போது நம்முடன் இல்லை. அவருடைய ஆத்மா சாந்தியடையட்டும்.

சரோஜாதேவிக்கு தமிழ்நாடு திரைப்பட
தயாரிப்பாளர் சங்கம் தலைவர் டி.ராஜேந்தர் எம்.ஏ
வெளியிட்டுள்ள இரங்கல்!

பாரம்பரியமிக்க பண்பட்ட நடிகை, கன்னி தமிழ்நாட்டிலே கன்னடத்துப் பைங்கிளி என பட்டப் பெயர் எடுத்து, பட்டை தீட்டப்பட்ட வைரமாக ஜொலித்தவர் பழம்பெரும் நடிகை பி.சரோஜாதேவி. இவர் சரித்திரத்தில் இடம் பிடித்த சாதனை தேவி ஆவார். மறைந்து விட்ட மக்கள் திலகம் எம்ஜிஆர், நடிகர் திலகம் சிவாஜி கணேசன், ‘காதல் மன்னன்’ ஜெமினி கணேசன் போன்ற நாயகர்களோடு நடித்தவர். பல்வேறு மொழிகளில் வேறு பண்பட்ட நாயகர்களுடன் நடித்து, ‘நவரச நாயகி’ என்ற முத்திரை பதித்தவர். இவருடைய மறைவு செய்தி திரை உலகிற்கே ஒரு அதிர்ச்சி அளிக்கிறது. அவரை இழந்து வாடும் ரசிகப் பெருமக்களுக்கும், அவருடைய இல்லத்தார்களுக்கும் என்னுடைய ஆறுதலையும், இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறேன். அவரது கலைத்தொண்டிற்கு என்றும் இருக்கிறது ஒரு தனி மரியாதை. அதனால் தான் கர்நாடக அரசு அவரது உடலை அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்படும் என்று அறிவித்திருக்கிறது. கர்நாடக அரசுக்கு தமிழ் திரை உலகின் சார்பாக, எனது மனமார்ந்த நன்றிகள். அவர் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்தனை செய்கிறேன்.

 

நடிகை குஷ்பு:
ஒரு பொற்கால திரையுலக யுகம் முடிவுக்கு வந்தது. சரோஜாதேவி அம்மா எல்லா காலத்திலும் மிகப்பெரிய நடிகையாக இருந்தவர். தென்னிந்தியாவில் வேறு எந்த பெண் நடிகையும் அவரைப் போல் புகழையும் பெயரையும் பெறவில்லை. அவர் மிகவும் அன்பான, அழகான ஆன்மா. அவருடன் மிக நல்ல உறவு இருந்தது. பெங்களூரு பயணித்தால் அவரைச் சந்திக்காமல் முழுமையடையாது. சென்னையில் இருக்கும்போது, அவர் அழைப்பார். அவரை மிஸ் செய்கிறேன். அம்மா, அமைதியாக ஓய்வெடுங்கள்.

நடிகை சிம்ரன்:
புகழ்பெற்ற சரோஜா தேவி அம்மா இனி இல்லை. ஆனால் இந்திய திரையுலகில் அவரது மரபு என்றென்றும் நிலைத்திருக்கும். ஒன்ஸ் மோர் படத்தில் அவருடன் திரையைப் பகிர்ந்து கொண்டது எனக்கு கிடைத்த பாக்கியம். இன்று அது மேலும் விலைமதிப்பற்றதாக உணர்கிறேன். அம்மாவிற்கு எனது ஆழ்ந்த மரியாதையும், பிரார்த்தனைகளும். அவரது ஆன்மா அமைதியடையட்டும். ஓம் சாந்தி.

நடிகை கவுதமி:
இன்று நாம் ஒரு ஜாம்பவானையும், உண்மையான சினிமா ஐகானையும் இழந்துவிட்டோம். சரோஜா தேவி அம்மா, தனது நளினம், நடிப்பு மற்றும் அழகால் பல தலைமுறை நடிகைகளால் வணங்கப்பட்டு, பின்பற்றப்பட்டவர். அவரது அழகிய தோற்றம், அற்புதமான ஆளுமை மற்றும் மின்னும் புன்னகை பார்வையாளர்களை மயக்கியது. அவர் ஒரு நீடித்த பாரம்பரியத்தை உருவாக்கியுள்ளார். ஒரு முன்னோடி நடிகையாக அவரது அற்புதமான சாதனைகளுக்கு முன்னால் நான் தலைவணங்குகிறேன். அவரது மறைவை இதயத்தை கனக்க செய்கிறது. அவரது ஆன்மா அமைதியாக ஓய்வெடுக்கட்டும். ஓம் சாந்தி

நடிகர் விக்ரம்.பிரபு:
திரைப்படங்களில் மட்டுமல்ல, வாழ்க்கையிலும் நளினம், அழகு மற்றும் நல்ல மனதுடன் விளங்கியவர் சரோஜா தேவி. தனித்துவமான நடிகையாக, தனது அற்புதமான திரைப்படப் படைப்புகள் மற்றும் தனிப்பட்ட முறையில் மனங்களைத் தொட்டவர்களால் நினைவுகூறப்படுவார். பல சந்தர்ப்பங்களில் அவருடன் பழகியதை பாக்கியமாக கருதுகிறேன். ஓய்வெடுங்கள் நடிகை சரோஜாதேவி!

 

Related posts

LOVVULOVVU Visuals from ANBULLA GHILLI

Jai Chandran

ஹோம்பாலே பிலிம்ஸ் படம் இயக்குகிறார் சுதா கொங்கரா

Jai Chandran

மாமன்னன் (பட விமர்சனம்)

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend