Trending Cinemas Now
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

விஜய்யை நேரில் சந்தித்த விஷால்

நடிகர் விஷால்  நடிப்பில் உருவாகி வரும் “மார்க் ஆண்டனி” திரைப் படத்தின் டீஸர் இன்று மாலை 06:30 மணிக்கு வெளிவருவதை தொடர்ந்து நடிகர் ”தளபதி” விஜய்யை சமீபத்தில் “மார்க் ஆண்டனி” திரைப்படத்தின் டீஸர் காண்பிக்க படக் குழுவினர் அனுமதி கேட்டு தொடர்புக் கொண்டபோது உடனே அழைப்பு விடுத்தார்.

புரட்சி தளபதி விஷால் – தளபதி விஜய் சந்திப்பின் போது “மார்க் ஆண்டனி” திரைப்படத்தின் டீஸர் கண்டு மகிழ்ந்து படக்குழுவினரை வெகுவாக பாராட்டினார் அதற்காக நன்றி தெரிவித்த நடிகர் விஷால்  “நண்பனுக்காக இதை செய்ய மாட்டேனா” என்று விஜய் கூறியது படக்குழுவினரை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது.

தளபதி விஜய்க்கு படக்குழு  வினர்கள் பூங்கொத்து வழங்கி னார்கள், புரட்சி தளபதி விஷால் அவர்கள் வழக்கம் போல் பூங்கொத்தை தவிர்த்து தளபதி விஜய்யின் பெயரில் அன்னை தெரசா முதியோர் இல்லத்தில் உணவு வழக்கியதற்கான ரசீதையும் அவரிடம் வழங்கினார்.

அதன் பின் தனது நீண்ட நாள் விருப்பமான திரைப்படம் இயக்கும் ஆசை “துப்பறிவாளன் 2” மூலம் தொடங்கியுள்ளதாக நடிகர் விஜயிடம் கூறிய விஷால் அதன் பின் தொடர்ந்து திரைப்படங்களை கதைகளை இயக்க உள்ளதாகவும் தங்களுக்கும் இரண்டு கதை தயார் செய்துள்ளதாக நடிகர் விஜயிடம் நடிகர் விஷால் கூறிய போது “நீ வா நண்பா நான் இருக்கிறேன் சேர்த்து பயணிப்போம்” என்று விஜய் கூறி மேலும் உற்சாக படுத்தினர்.

இச்சந்திப்பின் போது “மார்க் ஆண்டனி” திரைப்படத்தின் தயாரிப்பாளர் “மினி ஸ்டூடியோஸ் ” வினோத் குமார், இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன், ஒளிப்பதிவாளர் அபிநந்தன், நிர்வாக தயாரிப்பாளர் ஹரிகிருஷ்ணன் ஆகியோர்கள் உடன் இருந்தனர்.

Related posts

அரண்மனை 4 (பட விமர்சனம்)

Jai Chandran

Rio Raj Ramya Starrer Plan Panni from 24th sep

Jai Chandran

டெல்லி கணேஷ் மறைவுக்கு நடிகர் சங்கம் இரங்கல்

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend