மனித உரிமை காக்கும் கட்சியின் நிறுவனரும், நடிகருமான எம்.கார்த்திக் நேற்று இரவு மூச்சு திணறல் ஏற்பட்டு அவதிப்பட்டார் உடனடியாக அவர் சென்னை அடையாறில் உள்ள மலர் ஃபோர்ட்டிஸ் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட் டார்.
வரும் சட்டமன்ற தேர்தலில் பாஜ, அதிமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து நடிகர் கார்த்திக் பிரசாரம் மேற்கொள்ளவிருந்தார். அதற்கான தேர்தல் பணிகளில் ஈடுபட்டுக்கொண்டிருந்தார். அப்போது திடீரென்று அவருக்கு மூச்சுத் திண்றல் ஏற்பட்டது. உடனடியாக அவர் ஆம்புலன்ஸ் மூலம் சென்னை அடையாறில் உள்ள மலர் ஃபோர்ட்டிஸ் மருத்துவ மனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அவருக்கு அங்கு தீவிரசிகிச்சை வருகி றது. பல்வேறு சோதனைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகி றது. இதனிடையில் அவருக்கு கொரோனா தொற்று நோய் நெகடிவ் என முடிவு வந்துள்ள தாக கூறப்படுகிறது. தொடர் சிகிச்சையிலிருந்து வருகிறார் கார்த்திக்.