Trending Cinemas Now
சினிமா செய்திகள் விமர்சனம்

ஆழி (பட விமர்சனம்)

படம்: ஆழி

நடிப்பு: சரத்குமார், இந்திரஜித் ஜெகஜித், தேவிகா சதீஷ், வையாபுரி, ஸ்ரீஜித் ரவி, பிர்லா போஸ், தாமரைச்செல்வி சர்ஜின், மைதிலி சத்யராஜ், பினிஸ் பாபு, பிஜு மவுன்கல் வர்கீஸ், தீனா பாட்டியா

தயாரிப்பு: சஜித் கிருஷ்ணன்

இசை: வில்லியம் பிரான்சிஸ்

ஒளிப்பதிவு :ஆனந்த் என் ராய்

இயக்கம்: மாதவ் ராமதாசன்

பிஆர்ஓ: நிகில் முருகன்

கதை :கடற் பகுதியில் சட்டவிரோத செயல்களில் ஈடுபடுபவர் முரட்டு தாதா மூர்த்தி (சரத்குமார்). இவரது மகள் முகிலா (தீபிகா சதீஷ்) கல்லூரியில் படிக்கும் சக மாணவர் அருள் (இந்திரஜித் ஜெகஜித்) மீது காதல் கொள்கிறார். இந்த விஷயம் முகிலா தந்தைக்கு தெரிய வர அவர் கோபமடைந்து அருளை தனியாக படகில் நடுக்கடலுக்கு கடத்திச் சென்று கொல்ல திட்டமிடுகிறார். அருளை அடித்து துவைத்து தொம்சம் செய்கிறார். எதிர்பாராத நிலையில் மூர்த்தி சிக்கலுக்குள்ளாகிறார். இருவருமே உயிருக்கு போராடும் நிலையில் என்ன நடக்கிறது என்பதுதான் கிளைமாக்ஸ்.

சரத்குமாரை இதுவரை பல்வேறு கதாபாத்திரங்களில் பார்த்திருந்தாலும் இந்த படத்தில் அவர் ஏற்றிருக்கும் பாத்திரம் மட்டுமல்ல அவரது நடிப்பும் முற்றிலும் மாறுபட்ட வகையில் அமைந்திருக்கிறது.
நடுக்கடலில் மகளின் காதலன் இந்திரஜித் ஜெகஜித்தை கடத்தி வந்து அவரை ரத்தம் பிரீட அடித்து நொறுக்கும்போது சரத்குமாரா இவ்வளவு முரட்டுத்தனமாக நடித்திருக்கிறார் என அதிர்ச்சியில் ஆழ்த்துகிறார்.

நடுக்கடலில் சரத்குமாரும், இந்திரஜித் ஜெகஜித் என இருவர் மட்டுமே கொந்தளிக்கும் கடலில் சிக்கி தவிக்கும் படகில் நடித்திருப்பது அரங்கே ஏதோ நடுக்கடலில் சிக்கி தத்தளிப்பது போன்ற ஒரு உணர்வை ரசிகர்களுக்கு ஏற்படுத்துகிறது.

ஹாலிவுட் அல்லது மலையாள படங்களில் தான் இது போன்ற கதை அம்சங்களை பார்க்க முடியும். அந்த வாய்ப்பு ஆழி படம் மூலம் தமிழ் ரசிகர்களுக்கும் கிடைத்திருப்பது மிஸ் செய்ய கூடாத ஒரு வாய்ப்பு.

கோபம் கொண்டு தாக்கும் ஆஜானபாகு உருவம் கொண்ட சரத்குமாரிடம் இந்திரஜித் ஜெகஜித்
எதிர் தாக்குதல் நடத்தி மோதுவது அந்த இளைஞனின் மன உறுதியை காட்டுகிறது.
சரத்குமார் மகளாக வரும் தேவிகா சதீஷ் அழகு பதுமை

படத்தை சஜித் கிருஷ்ணன் தயாரித்திருக்கிறார்.

நடுக் கடலில் அலைகளின் சீற்றத்துக்கிடையே ஆனந்த் என் ராய் கேமரா காட்சிகளை அலை கடலின் ஆட்டத்தோடு படமாக்கியிருக்கிறது

வில்லியம் பிரான்சிஸ் இசை யாரும் இல்லாத அந்த நடுக்கடல் படகில் நம்மையும் அமர்த்தி பயம் காட்டியிருக்கிறது.

காதலும், மனிதாபிமானமும் ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் இருக்கிறது என்பதை உணர்வுபூர்வமாக இயக்குனர் மாதவ் ராமதாசன் சொல்லி இருக்கிறார்.

ஆழி – நெஞ்சை அழுத்தும் பொல்லாத காதல்.

Review By

K. Jayachandhiran
trending cinemas now com

 

Related posts

’கமல்ஹாசன் 232’ படத்தை இயக்கும் ’மாஸ்டர்’ இயக்க்குனர் லோகேஷ் கனகராஜ்,.. ராஜ்கமல் நிறுவனம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு..

Jai Chandran

உண்மை சம்பவத்தை பேசும் ‘கம்பெனி’! – புதிய சர்ச்சை வெடிக்குமா?

Jai Chandran

பொன்னியின் செல்வன்போல் படம் எடுக்க இன்னொருவர் பிறந்துவரணும் – கார்த்தி பேச்சு

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend