Trending Cinemas Now
அரசியல் சினிமா செய்திகள் செய்திகள்

டிவி ஷூட்டிங் நடத்தலாம்.. கட்டுப்பாடுகளுடன் அரசு அனுமதி.

டிவி ஷூட்டிங் நடத்தலாம்..

கட்டுப்பாடுகளுடன் அரசு அனுமதி.

இந்தியா முழுவதும் கொரோனா ஊரடங்கு காரணமாக சினிமா மற்றும் மற்றும் டிவி ஷூட்டிங் நிறுத்தப்பட்டன. இதனால் தொழில் முடங்கியது. தொழிலாளர்கள் வேலை இழந்து வருமானம் இன்றி கஷ்டப்பட்டனர்.
ஊரடங்கு விதிகள் தளர்த்தப்பட்டதால் ஷூட்டிங் நடத்த அனுமதி கேட்டு அரசுக்கு திரையுலகினர் கோரிக்கை வைத்தனர். இந்நிலையில் டிவி ஷூட்டிங் நடத்த கட்டுப்பாடுகளுடன் அரசு அனுமதி வழங்கியது. இதுபற்றி தமிழக அரசு செய்தி மக்கள் தொடர்பு துறை அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது
முதல்வர் எடப்பாடி கே பழனிச்சாமி இடம் தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் (பெப்சி) மற்றும் தென்னிந்திய சின்னத்திரை தயாரிப்பா ளர்கள் சங்கம்( STEPS) சார்பில் தங்களின் வாழ்வா தாரம் பாதிக்கப்பட்டுள்ளது என்றும் சின்னத்துரை படப்பிடிப்பை மீண்டும் துவங்குவதற்கு அனுமதி அளிக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்திருந் தனர். சின்னத் துறையினரின் கோரிக்கை யை முதல்வர் கனிவுடன் பரிசீலித்து கீழ்காணும் நிபந்தனைகளுடன் படப்பிடிப்புகளை நடத்தலாம் என்று அனுமதி அளித்துள் ளார்கள்
*சுற்றுச்சுவர் உள்ள வீடுகளுக்கு உள்ளே அல்லது அரங்கிற்குள் மட்டும் (இண் டோர் ஷூட்டிங் ) படப்பிடிப்பு நடத்த வேண்டும். தடை செய்யப்பட்ட பகுதிகளுக்கு (கண்டெய்ன்மென்ட் ஜோன்) இதுபோன்ற பொருந்தாது.
* பொது இடங்களில் படப் பிடிப்பு நடத்தக்கூடாது எனினும் ஊரகப் பகுதி களில் தடை செய்யப்பட்ட பகுதிகளை தவிர பொது இடங்களில் படப்பிடிப்பு நடத்த தடை ஏதுமில்லை.

* பார்வையாளர்களை கண்டிப்பாக அனுமதிக்கக் கூடாது
* படப்பிடிப்பு நடத்தப்படும் அரங்கம் அல்லது வீட்டினை படப்பிடிப்பிற்கு முன்பும் பின்பும் கண்டிப்பாக கிருமி நாசினிகள் கொண்டு சுத்தம் செய்யவேண்டும்

*படப்பிடிப்பில் கலந்து கொள்ளும் நடிகர்கள் தவிர மற்ற தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவரும் கண்டிப்பாக முக கவசம் அணிய வேண்டும். சமூக இடைவெளியை கடைப் பிடிக்க வேண்டும். நடிகர், நடிகைகளும் படப்பிடிப்பு
இடைவேளையின்போது தவறாமல் முககவசம் அணிய வேண்டும்.

* படப்பிடிப்பு குழுவினர் அனைவரும் அவ்வப்போது சோப்பு அல்லது கிருமி நாசினி கொண்டு கைகளை சுத்தம் செய்து கொள்ள வேண்டும்.
* படப்பிடிப்பு நடத்தப்படும் வளாகத்திற்குள் வரும் வாகனங்கள் மற்றும் போக்கு வரத்துக்கு பயன் படுத்தப்படும் வாகனங்கள் கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்யப்பட வேண்டும் அதேபோன்று படப்பிடிப்பிற்கு உபயோகப் படுத்தப்படும் கேமரா கிரேன் உட்பட அனைத்து சாதனங் களையும் கிருமிநாசினி கொண்டு அவ்வப்போது சுத்தம் செய்ய வேண்டும்.

* சளி, இருமல் காய்ச்சல் மூச்சுத்திணறல் போன்ற அறிகுறிகள் இருக்கும் கலைஞர்களையும் அல்லது தொழில்நுட்ப பணியாளர் களையோ படப்பிடிப்பு வளாகத்துக்குள் அனுமதிக் கக்கூடாது. இத்தகைய அறிகுறிகள் உள்வர்களை உடனடியாக மருத்துவ
பரிசோதனைக்கு அனுப்பவேண்டும்.

* அதிகபட்சமாக நடிகர், நடிகை, தொழில்நுட்ப பணியாளர்கள் உள்பட 20 எண்ணிக்கைகளுக்கு மிகாமல் படப்பிடிப்பு நடத்த லாம்.

* சென்னையில் படப்பிடிப்பு நடத்துவதற்கு மாநகராட்சி ஆணையர் இடமும் பிற மாவட்டங்களில் படப்பிடிப்பு நடத்துவதற்கு சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சித் தலைவரிடம் முன் அனுமதி பெற வேண்டும்.

* மத்திய, மாநில அரசுகள் அவ்வப்போது விதிக்கும் அனைத்து கட்டுப்பாடுகளை தவறாமல் பின்பற்ற வேண்டும்

படப்பிடிப்புக்கு வருகைதரும் அனைவரும் மேற்கண்ட நிபந்தனைகளை தவறாமல் கடைப்பிடிப்பதை சின்னத் திரை தயாரிப்பாளர்கள் உறுதி செய்து கொண்டு, படப்பிடிப்பு நடத்திட அனுமதி வழங்கப்படுகிறது.

இவ்வாறு செய்தி மக்கள் தொடர்பு துறை அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

#Taminadu Govr Grant Permision To Start TV Shooting

#டிவி படப்பிடிப்புக்கு அனுமதி

Related posts

62 years of Kamalism! PRO Diamond Babu Felicitate

Jai Chandran

திமுக தேர்தல் அறிக்கை: இந்து கோயில்கள் புனரமைக்க ரூ 1000 கோடி.. ஸ்டாலின் தந்த 500 வாக்குறுதிகள்..

Jai Chandran

Pushpa Trailer mAAnia all over 15M+ views

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend