Trending Cinemas Now
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

ஜீவாவின் ‘தகப்பன்’ பட சொக்க வச்சாளே 2வது பாடல் வெளியீடு..

ஜீவாவின் ‘தகப்பன்’ படத்திலிருந்து ‘சொக்க வச்சாளே’ இரண்டாவது சிங்கிள் வெளியீடபட்டது.

நடிகர் ஜீவா நடிப்பில், லார்க் ஸ்டூடியோஸ் தயாரிப்பில், இயக்குநர் ரா. வெங்கட் இயக்கத்தில் உருவாகி வரும் ‘தகப்பன்’ திரைப்படத்திலிருந்து ‘சொக்க வச்சாளே’ எனும் இரண்டாவது பாடல் (Second Single) வெளியாகியுள்ளது.

மார்ஷல் ராபின்சன் இசையமைத்துள்ள இப்பாடலுக்கு மோகன் ராஜன் பாடல் வரிகள் எழுதியுள்ளார். ஹரிசரண், சைந்தவி மற்றும் நாராயணன் ரவிசங்கர் ஆகியோர் இணைந்து பாடியுள்ளனர். ஏற்கெனவே வெளியான ‘தங்கபுள்ள’ முதல் பாடல் தந்தை – மகன் உறவின் அன்பையும் ஏக்கத்தையும் வெளிப்படுத்திய நிலையில், தற்போது வெளியாகியுள்ள ‘சொக்க வச்சாளே’ பாடல் கணவன் – மனைவி இடையிலான காதலையும் ரொமான்ஸையும் மையமாகக் கொண்டு உருவாகியுள்ளது.

மென்மையான இசையுடன் அழகான மெலடியாக உருவாகியுள்ள இப்பாடல், புதிதாகத் திருமணமான தம்பதிகளுக்கு இடையிலான காதல், நெருக்கம், ஒருவருக்கொருவர் வெளிப்படுத்தும் அன்பு மற்றும் அவர்களுடைய அழகான இல்லற வாழ்க்கையைப் பேசுகிறது. கணவன் – மனைவி இடையிலான ரொமான்ஸ் மற்றும் அன்பான நெருக்கத்தையும் அழகிய காட்சிகளின் வழியாக வெளிப்படுத்தும் இப்பாடல், எந்தவித விரசமும் இல்லாமல் குடும்பத்துடன் அமர்ந்து ரசிக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, கதையின் முக்கியமான திருப்பங்களையும் கதாபாத்திரங்களின் வாழ்க்கைப் பயணத்தையும் பாடலின் காட்சிகளுக்குள்ளேயே சொல்லியிருப்பது இதன் சிறப்பம்சமாக அமைந்துள்ளது.

கதையின் முக்கியத் திருப்புமுனையாகவும், ஃப்ளாஷ்பேக் காட்சிகளின் தொகுப்பாகவும் இப்பாடல் அமைந்துள்ளது. லாரி ஓட்டுநராக இருக்கும் நாயகனுக்கும், சற்று வசதியான குடும்பத்தைச் சேர்ந்த நாயகிக்கும் இடையே மலரும் காதலும், பெற்றோரின் எதிர்ப்பை மீறி கோயிலில் திருமணம் செய்துகொண்டு, ஊருக்கு ஒதுக்குப்புறத்தில் உள்ள ஒரு சிறிய கிராமத்து வீட்டில் அவர்கள் தொடங்கும் புதிய வாழ்க்கையுமே இப்பாடலின் மையக்கருவாகும்.
புதுமணத் தம்பதிகளின் அன்றாட ரொமான்ஸ், கர்ப்பமடையும் மகிழ்ச்சியான தருணம் என அழகாக நகரும் அவர்களின் வாழ்க்கையில், நாயகியின் அம்மாவிடமிருந்து வரும் தொலைபேசி அழைப்புகள் ஏற்படுத்தும் மெல்லிய மாற்றங்களையும் இப்பாடல் சுவாரசியமாகக் காட்சிப்படுத்தியுள்ளது.

மதுரை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளைப் பின்னணியாகக் கொண்டு, அப்பா – மகன் உறவு, குடும்பப் பாசம் மற்றும் மனித உணர்வுகளை மையமாகக் கொண்டு இப்படம் உருவாகியுள்ளது.

‘தெனாவட்டு’ படத்திற்குப் பிறகு முழுக்க முழுக்க கிராமத்துப் பின்னணியில் ஜீவா நடிக்கும் இப்படத்தில், ரஜிஷா விஜயன் கதாநாயகியாக நடிக்கிறார். K. குமார் தயாரிக்கும் இப்படத்திற்கு M. சுகுமார் ஒளிப்பதிவு செய்கிறார். நாகூரான் ராமச்சந்திரன் படத்தொகுப்புப் பணிகளைக் கவனிக்கிறார்.

இப்படத்தின் இசை வெளியீட்டு உரிமையை திங்க் மியூசிக் பெற்றுள்ளது. மேலும், படம் முடிவடைவதற்கு முன்பே படத்தின் சாட்டிலைட் ஒளிபரப்பு உரிமையை ZEE தமிழ் நிறுவனம் மற்றும் OTT உரிமையை Zee5 நிறுவனம் கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது. டிசம்பர் 24-ம் தேதி வெளியாகவுள்ள இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்து வரும் நிலையில், தற்போது வெளியாகியுள்ள ‘சொக்க வச்சாளே’ இரண்டாவது சிங்கிள் பாடல்  இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

Related posts

Juniors Jeysree Akshayaa and Aryan Sathish set new Record

Jai Chandran

பத்தாவது ஆண்டில் ‘Y NOT STUDIOS’பட நிறுவனம் !

CCCinema

நடிகர் சங்கத்தில் சங்கரதாஸ் சுவாமிகளின் 103வது நினைவு தினம்..

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend