Trending Cinemas Now
சினிமா செய்திகள் விமர்சனம்

சத்தியவான் சாவித்திரி (பட விமர்சனம் )

படம்: சத்தியவான் சாவித்திரி

நடிப்பு: கீர்த்தி சுரேஷ், மிஷ்கின், சாருகேஷ், பால சரவணன், சில்பா மஞ்சுநாத், பிரிகிடா சாகா

தயாரிப்பு: வெடிக்காரன் பட்டி எஸ் சக்திவேல்

இசை: சாம் சி எஸ்

ஒளிப்பதிவு: அருள் வின்சென்ட்

இயக்கம்: பிரவீன் எஸ் விஜய்

பிஆர்ஓ : AIM சதீஷ்

கதை: சட்டம் படித்த சாவித்திரி ( கீர்த்தி சுரேஷ்) வழக்கறிஞராக எண்ணுகிறார். இந்நிலையில் அவரை பெண் பார்க்க வரும் தீபக் ( சாருகேஷ் ) திருமணத்துக்கு சம்மதம் தெரிவிக்க உடனடியாக திருமண ஏற்பாடு நடக்கிறது. சாவித்திரி விருப்பப்படி அவரை வழக்கறிஞராக பணிபுரிய தீபக் அனுமதிக்கிறார். ஒரு கட்டத்தில் தீபக் மீது கொலைப் பழி விழ கணவனை காப்பாற்றுவதற்காக சாவித்திரி கோர்ட்டில் அவருக்கு ஆதரவாக வாதாட பலம் வாய்ந்த வக்கீலுக்கு எதிராக களம் இறங்குகிறார். இதில் ஜெயிப்பது யார் என்பதற்கு அதிர்ச்சியான பதில் அளிக்கிறது கிளைமாக்ஸ்.

புராண சத்தியவான் சாவித்திரி எமனிடமிருந்து கணவனை மீட்டு, மரணித்த கணவனுக்கு மீண்டும் உயிர் வரம் பெற்றார். கணவனுக்காக அந்த சாவித்திரி எப்படி வாதாடினாரோ அதே பாணியில் வக்கீல் சாவித்திரியாக வரும் கீர்த்தி சுரேஷ் கோர்ட்டில் நீதிபதியிடம் வாதங்களை அடுக்கடுக்காக எடுத்து வைக்கிறார்.

படம் தொடங்கிய 10 நிமிடங்களில் கோர்ட் காட்சிகளுக்குள் கதை நுழைந்து விடுகிறது. பிரபல வழக்கறிஞர் மிஷ்கினிடம் அசிஸ்டென்ட்டாக பணியாற்றிய கீர்த்தி சுரேஷ் திடீரென்று மிஷினுக்கு எதிராகவே வழக்கில் வாதாட முனைவதும் அதை நீட்டி முழக்காமல் சட்டென காட்சிகளை முடிப்பது புத்திசாலித்தனம்.

கீர்த்தி சுரேஷிடம் தோற்ற மிஷ்கின் கோபமாக பார்க்கும் பார்வையிலேயே ஏதோ பெரிதாக கீர்த்திக்கு வேட்டு வைக்கப் போகிறார் என்பது புரிகிறது. என்ன செய்யப் போகிறார் என்று எண்ணி முடிப்பதற்குள் கொலை வழக்கில் கீர்த்தியின் கணவர் சாருகேசை சிக்க வைப்பது அதிர்ச்சி.

சாட்சிகள் எல்லாமே சாருகேசுக்கு எதிராக இருக்கும் நிலையில் கீர்த்தி சுரேஷ் எப்படி அவரை காப்பாற்ற போகிறார் என்ற கேள்வி பெரிதாக எழுகிறது ஒரு சில சம்பவங்களை யோசிக்க முடிந்தாலும் கிளைமாக்ஸ் இப்படித்தான் மாறப்போகிறது என்பதை கணிக்க முடியவில்லை.

கர்வம் மிக்க வழக்கறிஞராக வரும் மிஷ்கின் கோப பார்வை வீசுவது அரங்கை அனலாக்குகிறது.

சாருகேஷ் புதுமுக ஹீரோவாக அறிமுகமாகியிருக்கிறார். இயக்குனர் சொன்ன வேலையை செய்து முடித்திருக்கிறார். கொஞ்சம் நெகட்டிவ் ஷேட் உள்ள கதாபாத்திரமாக இருந்தாலும் தயங்காமல் ஏற்று நடித்திருப்பது அவருக்கு அடுத்தடுத்த வாய்ப்புகளை பெற்றுத் தரும்.

சில்பா மஞ்சுநாத் சஸ்பென்ஸ் பாத்திரத்தில் நடித்திருக்கிறார். பிரிகிடா சாகா நாடக பாத்திரத்தில் சாவித்திரியாக நடித்திருக்கிறார்.

வெடிக்காரன் பட்டி எஸ் சக்திவேல் படத்தை தயாரித்திருக்கிறார்.

பின்னணி இசையில் எப்போதும் கலக்கும் சாம் சி எஸ் இந்த படத்தில் பின்னணி இசையுடன் பாடலிலும் தனது தரமான செய்கையை செய்திருக்கிறார்

அருள் வின்சென்ட் ஒளிப்பதிவில் காட்சிகள் ஓவியமாக பதிகிறது.

இயக்குனர் பிரவீன் எஸ் விஜய் அழுத்தமான கதையை குடும்பம் க்ரைம் என்று கலந்து அதிரடி கோர்ட் டிராமாவாக மாற்றி இறுதி வரை யாரையும் இருக்கையை விட்டு அசைய விடாமல் செய்து விடுகிறார். கிளைமாக்ஸ் முடிந்த பிறகு வரும் அந்த நாடக சத்தியவான் சாவித்திரி ஒரு குட்டி கதையை சொல்கிறது.

சத்தியவான் சாவித்திரி – உயிரையும் தருவாள், உயிரையும் எடுப்பாள்.


Review by K Jayachandhiran www.trendingcinemasnow.com

Related posts

36 நிமிடம் குறைக்கப்பட்டு அஞ்சான் ரீ ரிலீஸ் : லிங்குசாமி தகவல்

Jai Chandran

MAMMOOTTY starring #CIRCLE Trailer

Jai Chandran

இயக்குனர் ஷங்கருக்கு பிடிவாரண்ட்டா? விளக்க அறிக்கை..

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend