Trending Cinemas Now
சினிமா செய்திகள் விமர்சனம்

பிளாக் கோல்ட் (பட விமர்சனம் )

படம்: பிளாக் கோல்ட்

நடிப்பு: வெற்றி, பிரியாலயா, லிவிங்ஸ்டன், அபிராமி வெங்கடாசலம், ஏ வெங்கடேஷ், ராமர், அரோல் டி சங்கர், சபிதா ராய்

தயாரிப்பு: எம் மூர்த்தி

இசை: கவாஸ்கர் அவினாஷ்

ஒளிப்பதிவு: சந்தோஷ்குமார் வீராசாமி

இயக்கம்: தீரன் அருண்குமார்

பி ஆர் ஓ: AIM சதீஷ்

கதை : வேன் டிரைவர் லிவிங்ஸ்டன். அவரது மகன் வெற்றி, கார் ஒர்க் ஷாப்பில் தலைமை எஞ்ஜீனிராக இருக்கிறார். லிவிங்ஸ்டன் வேனில் லோடு ஏற்றி வருவதற்காக வெளியூர்  செல்ல அங்கு திடீரென்று காணாமல் போகிறார்.   லோடுடன் வேனும் காணாமல் போகிறது. இதுகுறித்து போலீஸ் தீவிரமாக விசாரிக்கிறது. அதேசமயம் காணாமல் போன தனது தந்தையை தேடி வெற்றி பல்வேறு இடங்களில் அலைகிறார். அவராலும் போலீசாலும் காணாமல் போன லிவிங்ஸ்டனையும், வேனையும் கண்டுபிடிக்க முடிந்ததா? என்பதற்கு ஷாக்கான பதில் அளிக்கிறது பிளாக் கோல்ட் கிளைமாக்ஸ்.

மாறுபட்ட கதைக்களங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார் வெற்றி. அந்த வரிசையில் பிளாக் கோல்ட் கதையும் மாறுபட்ட கதை என்பதில் சந்தேகமமில்லை. இப்படியொரு கதையை இயக்குனர் தீரன் அருண்குமார் யோசித்ததும் அந்தக் கதையை ஹீரோ ஒப்புக் கொண்டு நடிப்பதும் கோலிவுட்டில் அரிதாக நடக்கும் ஆனால் மலையாளத்தில் இது போன்ற மாறுபட்ட கதைகள் வரிசை கட்டி வந்து வெற்றியும் பெறுகிறது.

மாறுபட்ட கதை என்றால் அப்படி என்ன வித்தியாசம்? பிளாக் கோல்ட் என்பது தங்கத்தையோ, நிலக்கரியையோ குறிப்பதல்ல தலை முடியை குறிப்பது.

திருப்பதிக்கு சென்று மொட்டைபோட்டுக்கொள்ளும் பக்தர்கள் முடியை காணிக்கையாக தருகின்றனர் அந்த முடி எங்கே போய் சேர்கிறது என்பது பலருக்கு புரியாத புதிராக இருந்த விஷயம் ஆனால் அந்த காணிக்கை முடிக்கு பின்னால் சர்வதேச அளவில் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள வியாபாரம் இருக்கிறது என்பதை பட்டவர்த்தனமாக போட்டுடைத்திருக்கிறார் இயக்குனர் தீரன் அருண்குமார். இந்த கதையை இப்படி கூட எடுக்க முடியுமா என்று பலரும் ஆச்சரியப்படும் வகையில் காதல், குடும்ப செண்டிமெண்ட், ஆக்சன், சஸ்பென்ஸ் கலந்து திரைக்கதை அமைத்திருப்பது இயக்குனரின் திறமை.

ஹீரோ வெற்றி வழக்கமான தனது அடக்கமான நடிப்பையும் வசன உச்சரிப்பையும் வெளிப்படுத்தி இருக்கிறார். அதேசமயம் ஆக்ஷன் காட்சியில் அந்தர் செய்திருக்கிறார்.

லிவிங்ஸ்டன் செட்டிமெண்ட்டில் மனதை நெருடுகிறார். வெற்றி காதலியாக பிரியாலயா நடித்திருக்கிறார். வில்லன்களாக ஏ வெங்கடேஷ், அரோல் டி சங்கர் போட்டி போட்டு நடித்திருக்கின்றனர். பெண் போலீஸ் அதிகாரியாக வரும் அபிராமி ஆஜானபாகு தோற்றத்தில் இருந்தாலும் உருட்டல் மிரட்டல்களை ரொம்பவும் ஷட்லாக செய்துள்ளார். கண்களில் ஏனோ ஒரு ஏக்கத்தை வெளிப்படுத்திய வண்ணம் இருக்கிறார்.

எம் மூர்த்தி படத்தை தயாரித்திருப்பத்துடன் இன்ஸ்பெக்டர் வேடத்திலும் நடித்திருக்கிறார். நடிப்பிலும் தயாரிப்பிலும் பாசாகியிருக்கிறார்

கவாஸ்கர் அவினாஷ் இசையமைத்திருக்கிறார்.

சந்தோஷ்குமார் வீராசாமி ஒளிப்பதிவு கச்சிதம்.

இயக்குனர் தீரன் அருண்குமார் கோலிவுட்டில் பேசப்படும் இயக்குனராக விரைவில் வலம் வருவார்.

பிளாக் கோல்ட் – மயிர் கூச்செரியும் சஸ்பென்ஸ் திரில்லர்.

Review By
K Jayachandhiran www.trendingcinemasnow.com

Related posts

கமலி ஃப்ரம் நடுக்காவேரி (பட விமர்சனம்)

Jai Chandran

சி.வி.குமார் தயாரிப்பில் கலையரசன் ஆனந்தி நடிக்கும் டைட்டானிக்

Jai Chandran

கே ஜி எஃப் 2 பட பாடல் : இணையத்தில் வைரலாகும் ‘தூஃபான்

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend