Trending Cinemas Now
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

‘பொலிமேரா 3’ படத்தில் அர்ஜுனின் வீராவி தோற்றம்..

PRESS NOTE – TAMIL and ENGLISH*

*‘பொலிமேரா 3’ படத்தில் ஆக்‌ஷன் கிங் அர்ஜுன் நடிக்கும் ‘வீராவி’ கதாபாத்திரத்தின் அதிரடியான ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

ரசிகர்களின் உற்சாக வரவேற்போடு கடந்த இரு பாகங்களாக பெரும் வெற்றி பெற்ற ‘பொலிமேரா’ திரைப்பட வரிசையின் மூன்றாம் பாகமான ‘பொலிமேரா 3’ விரைவில் திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில், இப்படத்தில் வீராவி எனும் முக்கிய பாத்திரத்தில் நடிக்கும் ஆக்ஷன் கிங் அர்ஜுனின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டுள்ளது.

வம்சி நந்திபாடி என்டர்டெயின்மென்ட்ஸ் சார்பில் வெற்றிப்பட தயாரிப்பாளர் வம்சி நந்திபாடி, ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் எல்.எல்.பி. நிறுவனத்தின் (ஏசியன் குழுமம்) பரத் நரங்குடன் இணைந்து இப்படத்தைத் தயாரிக்கிறார்.

டாக்டர் அனில் விஸ்வநாத் இயக்கத்தில் உருவாகும் இப்படம், ‘பொலிமேரா’ திரை அனுபவத்தை இன்னும் பிரம்மாண்டமாக விரிவுபடுத்தி தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய நான்கு மொழிகளில் ரசிகர்களுக்கு வழங்க உள்ளது.

தீபாவளியை முன்னிட்டு வெளியாகி உள்ள ஆக்ஷன் கிங் அர்ஜுனின் அதிரடியான ஃபர்ஸ்ட் லுக், ரசிகர்களின் பாராட்டுகளை குவித்து படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. இதுவரை நடித்திராத வேடத்தில் ‘பொலிமேரா 3’ திரைப்படத்தில் அர்ஜுன் நடிப்பது குறிப்பிடத்தக்கது.

முதல் பார்வை க்ளிம்ப்ஸ் தொடங்கும் விதமே பார்வையாளர்களை மர்ம உலகிற்குள் அழைத்துச் செல்கிறது. இருள் சூழ்ந்த கோயிலின் பின்னணியில் தொடங்கும் காட்சிகள், படிப்படியாக அமாவாசையின் மர்மமான சூழலை வெளிப்படுத்துகின்றன. மகாவிஷ்ணு, சிவபெருமான்,  அனந்த பத்மநாப சுவாமி என்று ஆன்மிக தரிசனங்களும் கிடைக்கின்றன. இவ்வாறு ஆன்மிகம், மர்மம் மற்றும் அமானுஷ்யம் உள்ளிட்ட அம்சங்கள் ஒன்றிணைந்த தனித்துவமான உலகத்தை இந்தக் காட்சிகள் அழுத்தமாக நிறுவுகின்றன.

சத்யம் ராஜேஷ், கொமரையாவாக மாந்திரீகச் சடங்குகளில் ஈடுபடும் காட்சிகள், படத்தின் மர்மத்தையும் பதற்றத்தையும் மேலும் அதிகரிக்கின்றன. பரபரப்பான காட்சியமைப்பும், பின்னணி சூழலும் அடுத்து என்ன நடக்கப்போகிறது என்ற ஆவலைத் தூண்டுகின்றன.

இத்தகைய விறுவிறுப்பான தருணங்களுக்குப் பிறகு, அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்த அந்த பிரம்மாண்டமான அறிமுகம் நிகழ்கிறது. ஆக்‌ஷன் கிங் அர்ஜுன் சர்ஜா, ‘வீராவி’ என்ற கதாபாத்திரத்தில் கம்பீரமாகத் தோன்றுகிறார். கையில் வாளேந்திய மிடுக்கான அவரது அனல் பார்வை மற்றும் கம்பீரமான உடல்மொழி என ஒவ்வொன்றும் ரசிகர்களுக்கு திரை விருந்தாக அமைந்துள்ளன. இந்தக் கதாபாத்திர அறிமுகம் க்ளிம்ப்ஸின் மிகப்பெரிய சிறப்பம்சமாகத் திகழ்கிறது.

காமாட்சி பாஸ்கர்லா, பாலாதித்யா, கெட்டப் ஸ்ரீனு, ராகேந்து மௌலி உள்ளிட்ட பல திறமையான நடிகர்கள் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

வம்சி நந்திபாடி என்டர்டெயின்மென்ட்ஸ் மற்றும் ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் எல்.எல்.பி. (ஏசியன் குழுமம்) நிறுவனங்கள் சார்பில் வம்சி நந்திபாடி மற்றும் பரத் நரங் தயாரிக்கும் ‘பொலிமேரா 3’ திரைப்படத்தை டாக்டர் அனில் விஸ்வநாத் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார். சித்தார்த் ஒளிப்பதிவு செய்ய கிருஷ்ண பிரசாத் இசையமைக்கிறார்.

Related posts

அமீரின் உயிர் தமிழுக்கு படம் வெளியிடும் சுரேஷ் காமாட்சி

Jai Chandran

SS Rajamouli’s RRR Now Streaming on Disney+ Hotstar

Jai Chandran

என் ரசிகர்கள் விஜய் படம் பாருங்கள், விஜய் ரசிகர்கள் என் படம் பாருங்கள்.. நடிகர் சிம்பு அறிக்கை..

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend