Trending Cinemas Now
Uncategorized

மூக்குத்தி அம்மன் 2 மஹாசக்தி  ( பட விமர்சனம்)

படம்: மூக்குத்தி அம்மன் 2 மஹாசக்தி

நடிப்பு : நயன்தாரா, ஊர்வசி, குஷ்பூ, சினேகா, ரெஜினா,  யோகி பாபு, அபிநயா, துனியா விஜய், ராமச்சந்திரா ராஜூ,  சிங்கம் புலி, விச்சு  விஸ்வநாத் மைனா நந்தினி, இனியா நித்தின் சத்யா,

தயாரிப்பு: வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல்   ஐசரி கணேஷ், குஷிமிதா கணேஷ்,   அவனி பிக்சர்ஸ் குஷ்பூ சுந்தர், ரவுடி பிக்சர்ஸ் விக்னேஷ் சிவன்

இசை: ஹிப் ஹாப்  தமிழா

ஒளிப்பதிவு : கோபி அமர்நாத்

இயக்கம்: சுந்தர் சி

ரிலீஸ்: ரெட் ஜெயன்ட் இன்பன் உதயநிதி

பிஆர்ஓ : சதீஷ் (AIM)

கதை: போலீஸ் கான்ஸ்டபிள் நயன்தாரா கனவில் அடிக்கடி சில அமானுஷ்ய சம்பவங்கள் வந்து செல்கின்றன. அவரை மயிலாஞ்சி ஊருக்கு செல்லும்படி அசரீரி கேட்டுக்கொண்டே இருக்கிறது. ஒரு கட்டத்தில் அவரே வலுக்கட்டாயமாக மயிலாஞ்சி ஊருக்கு பணி மாற்றம் வாங்கிக் கொண்டு செல்கிறார். இந்நிலையில் அவரை அழிக்க சில சாத்தான் சக்திகள் முயல்கின்றன. சாதாரண கான்ஸ்டபிள் நயன்தாரா உண்மையில் மூக்குத்தி அம்மன் வடிவானவர். அவரை படித்திருக்கவே 2000 ஆண்டுகளாக காத்துக் கொண்டிருக்கும் சாத்தான் சக்தியை கொண்ட ரெஜினா மற்றும் அவரது காதலன் தீர்வாக முயல்கின்றனர். அம்மன் உருவான நயன்தாராவும் சாத்தான் சக்தி பெற்ற ரெஜினாவும் நேருக்கு நேர் மோதும் சூழல் உருவாகிறது அப்போது ஒரு பிரளயம் வெடிக்கிறது.

ஏற்கனவே நயன்தாரா நடிப்பில் மூக்குத்தி அம்மன் படம் சில வருடங்களுக்கு முன்பு திரைக்கு வந்தது. ஆனால் அந்த கதைக்கும் இந்த கதைக்கும் எந்த சம்பந்தமும் இல்லாமல் புதியதோர் களமாக மூக்குத்தி அம்மன் 2  மகாசக்தி  படம் உருவாகி இருக்கிறது. முதன்முறையாக சுந்தர் சி அம்மன் படத்தை இயக்குகிறார் என்றதும் ஒரு இன்ப அதிர்ச்சி இருந்தது  அந்த இன்ப அதிர்ச்சி தொடக்கம் முதல் கிளைமாக்ஸ் வரை எதிர்ப்பார்க்காத திருப்பங்களுடன் நிகழ்ந்து கொண்டே இருப்பதால் படம் படு விறுவிறுப்பாக  செல்கிறது.

அந்தக் காலத்தில் அம்மன் வேடம் என்றால் அதற்கு கே ஆர் விஜயா தான் மிகப் பொருத்தமாக இருப்பார் அதேபோல் இந்த காலத்தில் அம்மன் வேடமென்றால் நயன்தாராக்குதான் மிக பொருத்தமாக இருக்கிறது என்று சொல்லும் அளவுக்கு அவரது மலர்ச்சியான அருள் பொங்கும் முகம் மட்டுமில்லாமல் கையில் திரிசூலத்தை ஏந்தி நிற்கும்  தோற்றமும் பெண்களை கையெடுத்து கும்பிட வைக்கிறது.

திரிசூலம் ஏந்திய படி  நயன்தாரா மோதும் ஒவ்வொரு காட்சியும் மின்னலடித்தார்போல்  கண்ணைப் பறிக்கிறது  குழந்தையை காக்க ரெஜினா மற்றும்  முரட்டு தோற்றம் கொண்ட துனியா விஜய் ஆகியவுடன் நடத்தும் பிரம்மாண்ட போர் காட்சி  எல்லாமே அபாரம்.

இதுவரை கதாநாயகியாக திரையில் பார்த்த ரெஜினா இந்த படத்தில் சாத்தானின் அம்சமாக வருகிறார். சாத்தானின் அம்சம் என்றாலும் அழகு தேவதையாக படு கவர்ச்சியுடன் வந்து மிரள வைக்கிறார்.

யோகி பாபு மின்னல் போல் வந்து கிச்சுகிச்சு மூட்டி விட்டு செல்கிறார். குஷ்பூவும் சினேகாவும் அம்மன் தோற்றத்தில் நயன்தாராவுடன் சேர்ந்து ஆடும் சக்தி ஆட்டம் பெண்களை அரங்கில் சாமியாட வைக்கும்.

நயன்தாராவின் அம்மாவாக ஊர்வசி தன் பங்குக்கு காமெடி வெடிகளை வெடிக்கிறார். இவர்களுடன்  அபிநயா, ராமச்சந்திரா ராஜூ,  சிங்கம் புலி, விச்சு  விஸ்வநாத் மைனா நந்தினி, இனியா நித்தின் சத்யா ஆகியோரும் நடித்திருக்கிறார்கள்.

வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல்   ஐசரி கணேஷ், குஷ்மிதா கணேஷ், அவனி பிக்சர்ஸ் குஷ்பூ சுந்தர், ரவுடி பிக்சர்ஸ் விக்னேஷ் சிவன் இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.

படத்திற்கு பெரும் பலமாக ஹிப்ஹாப் தமிழா  இசை காட்சிகளை தூக்கிப் பிடிக்கிறது. கிளைமாக்ஸ் சண்டைக்காட்சியில் அரங்கை விட்டு வெளியில் வரும் வரை இசை பிரவாகம் இடியாக முழங்குகிறது.

சுந்தர் சி வெங்கட்ராமன் இணைந்து கதை எழுதியுள்ளனர்.

காமெடி களத்தில் கவனம் செலுத்திக் கொண்டிருந்த சுந்தர் சி மூக்குத்தி அம்மன் 2 மகா சக்தி  படத்தை பாகுபலி ரேஞ்சிக்கு பிரம்மாண்ட அரங்குகள் கிராபிக்ஸ் வி எஃப் எக்ஸ் காட்சிகளுடன்  இயக்கியிருக்கிறார். அவருக்கு குஷ்பூ சுந்தர் பூசணிக்காய் சுற்றி உடைக்க வேண்டியது அவசியம்.

மூக்குத்தி அம்மன் 2 மஹா சக்தி  –  தீபாவளிக்கு அதிரடி வேட்டாக களம் இறங்கி இருக்கிறாள்.

 

 

 

 

 

 

 

 

 

Related posts

விஜய் சேதுபதியின் முன்னெடுப்பில் தீபாவளி விழா : மருத்துவ உதவி புத்தாடை வழங்கல்

Jai Chandran

சூப்பர் குட் பிலிம்ஸின் 99வது படம் – படப்பிடிப்பில் விஷால் 35

Jai Chandran

Amazon Prime Video Announces Series Modern Love

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend