Trending Cinemas Now
Uncategorized சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

எம் ஜி ஆர் ஜோடி நடிகை மேட்டா தற்கொலை : ரசிகர்கள் அதிர்ச்சி

1973ம் ஆண்டு புரட்சி தலைவர் எம்ஜிஆர் இயக்கி நடித்த படம் “உலகம் சுற்றும் வாலிபன்”. இப்படத்தில், எம்ஜிஆருக்கு ஜோடியாக மஞ்சுளா, லதா, சந்திரகலா நடித்தனர்   சிறப்பு ஜோடியாக மேட்டா ரூங்ராத்  நடித்திருந்தார்.  படத்தில் இடம்பெற்ற “பச்சைக்கிளி முத்துச்சரம் முல்லைக்கொடி யாரோ ”  என்ற பாடலில் எம்ஜிஆர் உடன் இணைந்து நடனமாடி நடித்திருந்தார்.
இந்த ஒரே பாடல் மூலம் ரசிகர்களிடம் பிரபலமாக பேசப்பட்டார். தாய்லாந்து நாட்டைச் சேர்ந்த நடிகை மேட்டா ரூங்ராத். அங்குள்ள மின்புரி நகரத்தில் வசித்து வந்தார்.
83 வயதான பழம்பெரும் நடிகை மேட்டா ரூங்ராத்  கடந்த நவம்பர் 3ம் தேதி தனது வீட்டின் படுக்கையறையில் துப்பாக்கியால் சுட்டுத் தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படுகிறது.

தகவல் அறிந்த தாய்லாந்து போலீஸ் அதிகாரிகள் மேட்டாவின் உடலைக் கைப்பற்றி இதுகுறித்து விசாரித்து வருகின்றனர்.

அல்செய்மர்ஸ் எனப்படும் மறதி நோயால் மேட்டா பாதிக்கப்பட்டிருந்ததாகவும், அவர் தற்கொலை செய்துகொண்ட அறைக்குள் வெளியார் யாரும் வந்த அடையாளம் இல்லை எனவும் தாய்லாந்து அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Related posts

மும்பையில் விஜய் தேவரகொண்டா, பூரி ஜெகன்நாத் லைகர் பட. பாடல் காட்சி

Jai Chandran

இளம் திறமைகளுக்கான புதிய தளம் வேல்ஸ் சினேச்சர்

Jai Chandran

Methagu Director kittu Next Movioe TITLE will be revealed on 14th Jan

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend