Trending Cinemas Now
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

சிவகார்த்திகேயன் நற்பணி இயக்க நிர்வாகிகள் சந்திப்பு…

நடிகர் சிவகார்த்திகேயன் நற்பணி இயக்கம் சார்பாக இரண்டு வருடங்களுக்கு ஒரு முறை நடக்கும் நிர்வாகிகள் சந்திப்பு இந்த வருடம் சென்னை போரூர் அருகில் நடைபெற்றது. இதில் அனைத்து மாநில,மாவட்ட, நகர,ஒன்றிய, பகுதி நிர்வாகிகள் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

இதில் நடிகர் சிவகார்த்திகேயன் பேசியதாவது:
இந்த அமைப்பு என்பது நம்மால் முடிந்த உதவிகள் அனைவருக்கும் செய்வதுதான் நோக்கமே தவிர யாருக்கும் போட்டியாகவோ அல்லது யாரையும் எதிர்க்கவோ இந்த அமைப்பு இல்லை என்பதில் அனைவரும் தெளிவாக இருக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

உடல் ஆரோக்கியம் தான் மிகப்பெரிய விஷயம் என்பதை உணர்த்தி அனைவரும் ஆரோக்கியத்துடன் இருக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார் பிறகு நன்றாக சம்பாதிக்க வேண்டும் சம்பாதித்து முதலில் உங்களது குடும்பத்தை பார்த்துக்கொள்ள வேண்டும் என்று கூறினார். நற்பணி என்ற பெயரில் ஓரிரு நாள் மட்டும் செய்து முடித்து விடாமல் *நாள்தோறும் நற்பணி செய்வோம்* என்ற பெயரில் வருடம் 365 நாளும் குறைந்தபட்சம் 10 நபர்களுக்கு நற்பணி செய்து வருவதை நான் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறேன் அது எனக்கு மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது அதற்கு என் மனமார்ந்த பாராட்டுக்கள்.

முக்கியமாக ஒரு நாளில் குறைந்தபட்சம் பத்து நிமிடம் ஆவது புத்தகம் படியுங்கள் என்று கூறினார் பிறகு அந்நிகழ்ச்சியில் புத்தக கண்காட்சி ஒன்று அமைக்கப்பட்டு இருந்தது அங்கிருந்து முதல் புத்தகத்தை நடிகர் சிவகார்த்திகேயன் பெற்றுக் கொண்டார்.

தற்போது சிவக்குமார் முருகேசன் இயக்கத்தில் சேயோன் என்ற படமும் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் ஒரு படமும் நடித்து கொண்டிருக்கிறேன்.இரண்டு படங்களும் ஜனராஞ்சகமான பொழுதுபோக்கு திரைப்படமாக படமாக

இருக்கும்.கலந்துரையாடலை முடித்துவிட்டு அங்கு இருந்த நிர்வாகிகள் அனைவருடனும் தனித்தனியாக புகைப்படம் எடுத்துக்கொண்டார் மதிய உணவு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அனைவரும் உணவு அருந்திவிட்டு மகிழ்ச்சியாக சென்றனர்.

Related posts

அகடு (பட விமர்சனம்)

Jai Chandran

அசோக் செல்வனின் வேழம்’ பட இசை வெளியீடு

Jai Chandran

அமீர்கான் படத்தை தமிழில் வெளியிடும் உதயநிதி

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend