Trending Cinemas Now
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

யோகி பாபு-சத்யா இணையும் புதிய படம்..

யோகி பாபு-சத்யா இணையும், பவன் பாசம்செட்டி (Pawan Basamsetti) இயக்கும்,நாகார்ஜுனா ரெட்டி (Nagarjuna Reddy) , ட்ரீம் மூவீ மேக்கர்ஸ், (Dream Movie Makers) நயவாயு சித்ராலு  (Nayavayu Chitralu’s)  தயாரிப்பில் ‘தெலுமிழ்’ (தெலுங்கு + தமிழ் ) திரைப்படம் ‘கோல்டன் பாக்கியம்’  (Golden Bhagyam)  டைட்டில் கிளிம்ப்ஸ் வெளியீடு*

நகைச்சுவை நட்சத்திரங்கள் யோகி பாபு – சத்யா,ஆகியோர் ‘ரங்கபலி’ (Rangabali) புகழ் பவன் பாசம்செட்டி இயக்கும் காமெடி சரவெடியில் இணைகின்றனர்..

நாகார்ஜுனா ரெட்டி மற்றும் பவன் பாசம்செட்டி இருவரும் இணைந்து ட்ரீம் மூவி மேக்கர்ஸ் மற்றும் நயவாயு சித்ராலு ஆகிய பேனர்களின் கீழ் இந்தப் படத்தைத் தயாரிக்கிறார்கள். இரண்டு பேனர்களின் முதல் தயாரிப்பு முயற்சியாக இந்தப் படம் அமைகிறது என்பது குறிப்பிடத்தக்கது. படக்குழு இன்று டைட்டில் வெளியீட்டு கிளிம்ப்ஸை வெளியிட்டது. இந்தப் படம் முற்றிலும் தனித்துவமான கருத்துருவை தாங்கி வருகிறது.

இது வழக்கமான தெலுங்கு அல்லது தமிழ்ப் படம் அல்ல, மாறாக தெலுங்கு மற்றும் தமிழ் மொழிகளையும், இரண்டு திரையுலகைச் சேர்ந்த பிரபல நடிகர்களையும் ஒன்றிணைக்கும் ‘ Telumil ’ படைப்பு.

கிளிம்ப்ஸ் ஒரு நகைச்சுவையான குறிப்புடன் தொடங்குகிறது, அதில் ஒரு தெலுங்கரும், ஒரு தமிழரும் தங்களுக்குப் பிடித்தமான உணவுகளை ரசித்து சாப்பிட்டுக்கொண்டே, தங்கள் உணவுதான் சிறந்தது என்று பெருமையாகக் கூறிக்கொள்கிறார்கள். தெலுங்கு கதாபாத்திரம் கூல் ட்ரிங்குடன் பிரியாணியை ரசிக்கிறது, அதே நேரத்தில் தமிழ் கதாபாத்திரம் சாம்பாருடன் இட்லியை ரசிக்கிறது.

எந்த உணவு சிறந்தது என இரண்டு கதாபாத்திரங்களும் வாக்குவாதத்துக்குள் செல்ல, இன்னொரு நபர் குறுக்கிட்டு இருவர் ருசிப்பதைக் காட்டிலும், அதிசுவை  காம்பினேஷன் ஒன்று காத்திருப்பதாகச் சுட்டிக்காட்டும் போது காட்சியும், கொண்டாட்டமும் வேறு நிலைக்குச் செல்கிறது.

யோகி பாபு மற்றும் சத்யாவின் அறிமுகம் அதைத் தொடர்ந்து வருகிறது. இருவரும்  வெள்ளை நிற உடையில் தோன்றுகின்றனர். பின்னர் இயக்குநர் அவர்களின் கதையைப் பற்றி ஒரு சுவாரஸ்யமான விளக்கத்தை அளிக்கிறார். அது காதலுடன் க்ரைம் மற்றும் ஆக்ஷன் கலந்த கதை என்று வெளிப்படுத்துகிறார். அத்துடன், ‘கோல்டன் பாக்கியம்’ கிளிம்ப்ஸ் டைட்டில் வெளியீடு நிறைவடைகிறது .

இந்தப் படத்தின் மூலம் தெலுங்கு மற்றும் தமிழ் சினிமாவின் மிகவும் பிரபலமான இரண்டு காமெடி நடிகர்களை ஒரு பைலிங்குவல் கிராஸ்ஓவர் என்டர்டெய்னருக்காக ஒன்றிணைத்து இயக்குநர் பவன் பாசம்செட்டி தனித்துவமான ஒன்றை முயற்சித்துள்ளார். கூடுதல் சுவாரஸ்யமாக, தெலுங்கு நடிகர் சத்யா தமிழ் பேசுவதையும், தமிழ் நட்சத்திரம் யோகி பாபு தெலுங்கு பேசுவதையும் காண முடிகிறது. கிளிம்ப்ஸில், காட்சிகளின் பின்னணியில் பிரம்மாண்டமான மல்டி-ஸ்டாரர் கட்அவுட்களுடன், அவர்களை ஒரு மிகப்பெரிய தெலுங்கு – தமிழ் காம்பினேஷனாக முன்னிறுத்துகிறது.

கிளிம்ப்ஸைப் பார்க்கும்போது, படம் முன்னணி நடிகர்களின் தனித்துவமான கெமிஸ்ட்ரியை மையமாகக் கொண்ட ஒரு முழுமையான என்டர்டெய்னராக இருக்கும் என்று புரிந்துகொள்ள முடிகிறது.

யோகி பாபு  மற்றும்  சத்யா  இருவரும் படத்தின் மிகப்பெரிய நகைச்சுவை பலமாக இருப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவர்களின் தனித்துவமான காமெடி ஸ்டைல் மற்றும் அபாரமான டைமிங் முதல் முறையாக இந்த படத்தில் ஒன்றிணைகிறது.

ஜெயஸ்ரீ (Jayashree) மற்றும் அதிராஜ் (Athiraj) கதாநாயகிகளாக நடிக்க, வென்னேல கிஷோர் (Vennela Kishore), சுதர்சன் (Sudharshan), கிஷோர் திருமலா(Kishore Tirumala), ரோகிணி(Rohini), தனிகெள்ளா பரணி (Tanikella Bharani) மற்றும் சுனில் ரெட்டி (Sunil Reddy)  ஆகியோர் முக்கிய துணை கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். படத்தில் திறமையான தொழில்நுட்பக் குழுவும் இடம் பெற்றுள்ளது. மலையாள சினிமா ஒளிப்பதிவாளர் பப்லு அஜு (Bablu Aju)  ஒளிப்பதிவை கையாள, பவன் CH (Pawan CH) இசையமைக்கிறார். தயாரிப்பு வடிவமைப்பை சிவா காமேஷ் D (Siva Kamesh D) கவனிக்க, எடிட்டிங்கை ரவி தேஜா கிரிஜாலா (Ravi Teja Girijala) மேற்பார்வையிடுகிறார்.

அறிவிப்புக்கு மற்றொரு நகைச்சுவைத் தொடுதலைச் சேர்க்கும் வகையில், தயாரிப்பாளர்கள் ஆரம்பத்தில் படத்தை சங்கராந்தி வெளியீடாக அறிவித்து, பின்னர் சங்கராந்தியை அடித்துவிட்டு, இந்த ஆண்டுக்குள் வெளியாகும் என்று அறிவித்துள்ளனர்.

படத்தின் நடிகர்கள்: யோகி பாபு,சத்யா,ஜெயஸ்ரீ, அதிராஜ், வென்னேல கிஷோர், சுதர்சன், கிஷோர் திருமலா, ரோகிணி, தனிகெள்ளா பரணி மற்றும் சுனில் ரெட்டி

தொழில்நுட்பக் குழு:

எழுத்து, இயக்கம்: பவன் பாசம்செட்டி
தயாரிப்பாளர்கள்: நாகார்ஜுனா ரெட்டி & பவன் பாசம்செட்டி
பேனர்கள்: ட்ரீம் மூவி மேக்கர்ஸ், நயவாயு சித்ராலு
இசை: பவன் CH,நிதிஷ் ஜான்
ஒளிப்பதிவு: பப்லு அஜு
எடிட்டர்: ரவிதேஜா கிரிஜாலா
தயாரிப்பு வடிவமைப்பு : சிவா காமேஷ் D
மக்கள் தொடர்பு: யுவராஜ்

Related posts

PAN India ‘Celebrity Cricket League

Jai Chandran

ஐ நோபடி ( I Nobody ) (பட விமர்சனம் )

Jai Chandran

LIGER says Hello from Los Angeles

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend