Trending Cinemas Now
சினிமா செய்திகள் விமர்சனம்

மண்டாடி (பட விமர்சனம்)

படம்: மண்டாடி

நடிப்பு: சூரி, சத்யராஜ், சுகாஸ், மகிமா நம்பியார், கிரிஸ் ஆசன், மிதுன் ஜெய்சங்கர், ரவீந்திர விஜய், பால சரவணன், ஸ்டண்ட் சிவா, கார்த்திகா ஐயர், ராமச்சந்திரன் துரைராஜ் ஆடுகளம் முருகதாஸ்,

தயாரிப்பு: ஆர் எஸ் இன்ஃபோ டைன்மண்ட்

இசை :ஜிவி பிரகாஷ் குமார்

ஒளிப்பதிவு : ஆர் எஸ் கதிர்

இயக்கம்: மதிமாறன் புகழேந்தி

பி ஆர் ஓ : ரேகா

கதை: கடற்கரையை யொட்டியுள்ள உள்ள மீனவர்  குடியிருப்பில் வசிக்கும் முத்துக்காளி ( சூரி ), சாட்டை புலி (சுகாஸ் ) இரண்டு பிரிவாக  உள்ளனர். இவர்களுக்குள் கடலில் நடக்கும் பாய்மர கப்பல் போட்டியில் யார் ஜெயிப்பது என்ற கௌரவ பிரச்சனை எழுகிறது. ஜெய்ப்பவர்கள் மட்டுமே அங்கு ஆள முடியும் என்ற நிலையில் இரு அணிக்கும் கடுமையான போட்டி நிகழ்கிறது இதில் ஜெயிப்பது யார் என்பதுதான் கிளைமாக்ஸ்.

படத்தின் கதையை ஓரிரு வரியில் எளிதாக சொல்லிவிட்டாலும் இந்த படத்தை எடுத்து முடிப்பத அவ்வளவு எளிதல்ல.  ஓயாத அலை அடித்துக் கொண்டிருக்கும் கடல் மீது சூரி முதற்கொண்டு துணை நடிகர்கள் வரை சுட்டெரிக்கும் வெயிலில் உப்பு காற்றில் எப்படித் தான் நடித்தார்களோ என்று எண்ணும்போது உடலில் ஒருவித தகிப்பு ஏற்படுகிறது.  நினைத்த மாத்திரத்திலேயே தகிப்பை ஏற்படுத்தும் இந்த காட்சிகளில் ஒவ்வொரு நடிகர்களும்  உயிரை பணயம் வைத்து  நடித்திருக்கிறார்கள்  அதற்காக ஒரு அப்ளாஸ்.

விடுதலை, மாமன் படத்திற்குப் பிறகு  சூரி சோலோ ஹீரோவாக நடித்திருக்கும் படமாக மண்டாடி.  உருவாகியிருக்கிறது  சுறா படத்தில் விஜய் ஒரு ஆக்சன் ஹீரோவாக நடித்தார் அதை மிஞ்சும் அளவுக்கு சூரி தனது கடுமையான உழைப்பை  கொட்டி நடித்திருக்கிறார்.

திக்கு திசை இல்லாமல் அடிக்கும் கடல் காற்றில் பாய் மரத்தை காற்று போக்கிற்கு ஏற்ப இழுத்து நீட்டி  கடுமையான போட்டியில் நடக்கும் படகு சவாரி பந்தயம் ஒவ்வொருவரின் உழைப்பையும் நூறு சதவீதம் வாங்கி இருக்கிறது. அதேசமயம் இந்த போட்டிகளை ஏனோ தானோ என்றில்லாமல் இன்னும் கூட முறையாக பல கோணங்களில் கேமராக்களை வைத்து படமாக்கி இருந்தால் பெரிய ஹைலைட்டாக அமைந்திருக்கும்.

சூரியின் வில்லனாக சுகாஸ் முறைப்பு காட்டி நடித்திருக்கிறார். படகு பந்தய பயிற்சியாளர் மண்டாடியாக சத்யராஜ் சிறப்பு தோற்றத்தில் மாறுபட்ட நடிப்பை வெளிப்படுத்தி இருப்பது சிறப்பு.

மகிமா நம்பியாரை இதுவரை இப்படி ஒரு கதாபாத்திரத்தில் பார்த்ததில்லை,  அழுத்தமான பாத்திரத்தில் முத்திரை பதித்திருக்கிறார். மாஜி காதலன் சூரியை பார்க்கும் போதெல்லாம் மகிமா கண்களில் ஒரு கோபக்கனல் வீசுவது அரங்கை அனலாக்குகிறது.

படத்தை ஆர் எஸ் இன்ஃபோ டெய்ன்மண்ட் நிறுவனம் தயாரித்திருக்கிறது.

ஜிவி பிரகாஷ் குமார்  இசை பெரிதாக எடுபடவில்லை. ஆர் எஸ் கதிர்  கேமரா ஆக்ரோஷமான கடலை காட்டுகிறதே தவிர அதை ஒரு அழகோவியமாக  படமாக்கி இருந்தால் படத்திற்கு  பிளஸ் ஆக இருந்திருக்கும்.

 

இயக்குனர் மதிமாறன் புகழேந்தி பாரம்பரிய  பாய்மர படகு பந்தயத்தை மீண்டும் மக்கள் பார்வைக்கு கொண்டு வந்திருப்பது ஒரு சமுதாயத்தின் கடினமான வாழ்க்கையை கண்முன் நிறுத்தியிருக்கிறது.  ஒரு ஆக்சன் ஹீரோவை பயன்படுத்தும் அளவுக்கு மிக அற்புதமாக சூரியை பயன்படுத்தி இருக்கிறார் இயக்குனர்.  சென்டிமென்ட் காட்சிகளிலும்  அவரை காமெடி நடிகராக காட்டி விடக்கூடாது என்பதில் கவனமாக இருந்திருப்பது சூரிக்கு பெரிய பலம்  இப்படியே இரண்டு, மூன்று படங்களில் சூரி நடித்தால் அவரும் முதல்வர் பதவிக்கு ஆசைப்படலாம் என்று தோன்றுகிறது.

அரசியலில் குதித்து போராட்டங்களை சந்தித்து விழுப்புண்களை ஏற்று ஆட்சிக்கு வருவதெல்லாம் அந்தக் காலம் இது சினிமாவில் ஆக்சன்  ஸ்டண்ட் அடித்து  பெண்களை காப்பாற்றுவது போல் பாவ்ளா செய்து இளைஞர்களை கவரும் விதத்தில் நடித்தாலே தற்போது முதல்வர் பதவி வேட்பாளருக்கு தகுதி வந்து விடுகிறது..

மண்டாடி  – சூரியை ஆக்சன் ஹீரோவாக உயர்த்தி இருக்கிறது

Review by

K. Jayachandhiran

www.trendingcinemasnow.com

 

 

 

 

Related posts

தொடர்ந்து கிராமத்து படங்களில் நடிப்பேன்: சசிகுமார் திட்டவட்டம்

Jai Chandran

உலக இசைத் தினத்தில் ஆரி அர்ஜுனன் வெளியிட்ட “தாய்நிலம்” பாடல்

Jai Chandran

ஆர்.ஜே. பாலாஜியின் ‘சிங்கப்பூர் சலூன்’*

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend