படம்: கான் சிட்டி
நடிப்பு: அர்ஜுன் தாஸ், யோகி பாபு, வி டிவி கணேஷ், அருள்தாஸ், வடிவுக்கரசி, பொன்வண்ணன், தம்பி ராமையா, அகிலன் அன்னா பென், ராதாரவி, இமான் அண்ணாச்சி, மொய்தீன் குமார், ரமேஷ் திலக், நந்த கோபால்
தயாரிப்பு: ஹாரிஷ் துரைராஜ்
இசை: ஷான் ரோல்டன்
ஒளிப்பதிவு : அரவிந்த் விஸ்வநாதன்
இயக்கம்: ஹாரிஷ் துரைராஜ
பிஆர்ஓ : யுவராஜ்
கதை: மின்வாரியத்தில் வேலை செய்யும் அர்ஜுன் தாஸ் ஊரெல்லாம் கடன் வாங்கி வைத்திருக்கிறார். கடன் காரர்கள் தொல்லை தாங்க முடியாமல் அந்த கடனை அடைக்க மோசடி வேலையில் ஈடுபடுகிறார். அதில் பிரபலமாகும் அர்ஜுன் தாசிடம் கதாநாயகிஅன்னா பென் வடிவுக்கரசி உள்ளிட்ட ஏராளமான மக்கள் முதலீடு செய்கின்றனர் அந்த முதலீடுகளை திரட்டி தனது நண்பன் செய்யும் தொழிலுக்கு உதவியாக இருக்கும் என்று தருகிறார். திடீரென்று அந்த நண்பன் கொல்லப்படுகிறான் மொத்த பணத்தையும் இருந்த அர்ஜுன் தாஸ் அதிர்ச்சியில் உறைய அர்ஜுன் தாசிடம் பணம் கொடுத்தவர்கள் அவரை சுற்றி வளைக்கிறார்கள். அடுத்து நடப்பது என்ன என்பதை எதிர்பாராத திருப்பங்களுடன் விளக்குகிறது கிளைமாக்ஸ்.
வில்லனாக நடித்துக் கொண்டிருந்த அர்ஜுன் தாஸ் சமீபமாக ஹீரோவாக நடிக்க தொடங்கி இருக்கிறார் அதில் ஓரளவுக்கு வெற்றியும் பெற்றிருக்கிறார்.
மின்வாரியத்தில் வேலை செய்யும் ஊழியராக நடித்திருக்கும் அர்ஜுன் தாஸ் கடன்காரரின் தொல்லை தாங்க முடியாமல் மின்வாரிய அலுவலகத்தில் கம்ப்யூட்டரில் பில் போடாமல் செய்யும் மோசடி பெரிய ஸ்கேமாக தெரிகிறது. இப்படி கூட ஸ்கேம் செய்ய முடியும் என்பதை வெட்ட வெளிச்சமாக்கி இருக்கிறார் இயக்குனர்.
தொடக்க காட்சியில் வடிவுக்கரசி யோகி பாபு அன்னா பென் எல்லோருமே அர்ஜுன் தாசின் உறவுகள்போல் சித்தரிக்கும் போது அதற்கு பின்னால் ஒரு பெரிய மோசடி ஒளிந்திருக்கிறது என்பதை யூகிக்க முடியவில்லை. எல்லோருமே மோசடி பேர்வழிகள் என்று ஒரு கட்டத்தில் ஒரே நேர்கோட்டில் எல்லோரையும் நிறுத்தும்போது அதிர்ச்சியில் தலை சுற்றுகிறது.
வடிவுக்கரசி வழக்கமாக மருமகளை திட்டித் தீர்க்கும் பாத்திரத்தில் நடித்து பழக்கப்பட்டவர் இந்த படத்தில் அவர் மோசடிக்காரராக சித்தரிக்கப்பட்டிருப்பது வித்தியாசமான அனுபவமாக அவருக்கும் இருந்திருக்கும் நமக்கும் அப்படித்தான். யோகி பாபு ரொம்பவும் ஷட்டிலாக நடித்து சிரிக்க வைக்கிறார்.
போலீஸ் அதிகாரியாக வரும் நந்தகோபால் பார்ப்பதற்கு புதுமுகம் போல் தெரிந்தாலும் வில்லத்தனத்துக்கு ஏற்ற முகம்.
அன்னா பென் சஸ்பென்ஸ் பாத்திரம். அவர் யார் என்ற கேள்விக்குறியை கிளைமாக்ஸ்வரை எழுப்பி கொண்டேயிருக்கிறது.
ராதாரவி, அருவி, பொன்வண்ணன், தம்பி ராமையா போன்றவர்களும் தங்களது பாத்திரத்தை கச்சிதமாக செய்திருக்கிறார்கள்.
ஹ
ஹாரிஸ் துரைராஜ் படத்தை தயாரித்து இயக்கி இருக்கிறார். படம் முழுக்கவே மோசடிகளால் நிரம்பிய ஸ்கிரிப்ட்டை உருவாக்க நிறைய புத்திசாலித்தனம் தேவைப்படும் அதை சரியாக பயன்படுத்தி எப்படி எல்லாம் மோசடி செய்யலாம் என்பதை பட்டவர்த்தனமாக்கி இருக்கிறார் இயக்குனர்.
ஷான் ரோல்டன் இசையில் காட்சிகள் கவனத்தை ஈர்க்கின்றன ஏமாற்றாதே ஏமாற்றாதே பாடல் ஒரு படிப்பினை.
பிளாக் காமெடி படத்தை மாறுபட்ட கோணத்தில் இயக்குனர் இயக்க அதை அதே ஃபார்முலாக்குள் அடக்கி காட்சிகளாக ஒளிப்பதிவு செய்து தந்திருக்கிறார் அரவிந்த் விஸ்வநாதன்.
கான்சிட்டி – உஷாரை ஏற்படுத்தும் மோசடி காமெடி கதை.

Review by.
K. Jayachandhiran
Trending cinemas now.com
