Trending Cinemas Now
சினிமா செய்திகள் விமர்சனம்

பேட்டில் (பட விமர்சனம் )

படம்: பேட்டில்

நடிப்பு: அர்ஜுன் பிரபாகரன், ஆராதயா, முனீஸ்காந்த் மற்றும் பலர்

தயாரிப்பு: எலைட் டாக்கீஸ்

இசை: ஜீவா

ஒளிப்பதிவு : யுவராஜ்

இயக்கம்: நாராயணன்

பிஆர்ஓ : நிகில் முருகன்

பள்ளியில் டீச்சராக இருப்பவர் மதி (ஆராதயா ). ராப் பாடல்கள் பாடும் இளைஞர் மணி (அர்ஜுன் பிரபாகரன்). மதி, மணி இருவரும் காதலிக்கின்றனர். இதில் மணி பிரபல ராப் பாடகராக வளர்கிறார். அதே சமயம் தனது பள்ளியில் படிக்கும் மாணவிகளுக்கு கொடுமை நடப்பதை அறிந்து அதை தடுத்து நிறுத்த மதி முயற்சிக்கிறாள். ஒரு கட்டத்தில் மதியை பள்ளி நிர்வாகத்தினர் கொல்ல முயல்கின்றனர். அவரை மணியால் காப்பாற்ற முடிந்ததா என்பதற்கு கிளைமாக்ஸ் பதில் அளிக்கிறது.

படம் எளிமையாக தொடங்குகிறது. ராப் பாடகராக வரும் அர்ஜுன் பிரபாகரன் தொடக்க காட்சிகளில் குடிசை பகுதி இளைஞர் போல் வருவதும் நண்பர்களுடன் சேர்ந்து ராப் பாடல் பாடி ஏதார்த்தமாக பேசி பழகும்போது வட சென்னை இளைஞர் போல் மனதில் பதிகிறார்   ஆல்பம் பாடுவதற்கான வாய்ப்பு பெற்று வேறொரு டீமுடன் இணைந்த பிறகு அர்ஜுனின் நடை உடை பாவனை  எல்லாமே மாறிவிடுகிறது. என்னதான் புதிய நண்பர்கள் கிடைத்தாலும் தனது காதலியை மறக்க முடியாமல் அவரை நினைத்து ஏங்குவதும்  ஒரு கட்டத்தில் காதல் தோல்வி ஆகிவிடுமோ என்று மனம் வெறுத்து புலம்புவதுமாக மாறுபட்ட நடிப்பை வழங்கி இருக்கிறார்.

ஆராதியாவும் மரத்தை சுற்றி காதல் டூயட் பாடும் சராசரி ஹீரோயினாக இல்லாமல் தனது பள்ளியில் நடக்கும் அநியாயங்களை தட்டி கேட்பது, ஆசிரியைகளுக்கு பள்ளி நிர்வாகம் செய்யும் கொடுமை போன்றவற்றை தட்டி கேட்டுp போராளி பெண்ணாக மனதில் பதிகிறார்.

முனிஷ்காந்த் ஓரிரு
காட்சிகள் வந்தாலும் அமைச்சர் தோரணையில் பேசி நடித்திருக்கிறார்.

எலைட் டாக்கீஸ் படத்தை தயாரிக்க ஜீவா இசை அமைத்திருக்கிறார். ராப் பாடல்களுக்கு ஏற்ப மாடர்ன் இசைக்கு முக்கியத்துவம் தந்திருக்கிறார்.

யுவராஜ் ஒளிப்பதிவு ஓகே.

தனியார் பள்ளியில் ஆசிரியைகளுக்கு தரப்படும் பணிச்சுமை, லட்சங்களில் கட்டணம் வாங்கினாலும் தரமான கல்வி தராத நிர்வாகத்தின் அராஜகத்தையும் இயக்குனர் நாராயணன் வெட்ட வெளிச்சமாக்கி இருக்கிறார்.

பேட்டில் – கல்வி தருவதாக ஏமாற்றும் தனியார் கல்வி நிறுவனங்களுக்கு சாட்டையடி படம்

Review By

K. Jayachandhiran

Trending cinemas mow.com

Related posts

Fastest50MForPushpaRajIntro

Jai Chandran

ஷாம் நடிக்கும் ‘அஸ்திரம்’ பட பர்ஸ்ட் லுக்

Jai Chandran

41M+ views with 1.5M+ Likes for the #PushpaFirstSingle

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend