Trending Cinemas Now
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

அல்லு அர்ஜுன் ரசிகர் மன்றம் தொடங்கிய HPV தடுப்பூசி முகாம்..

பெண்களின் உடல்நலனை மேம்படுத்தும் விழிப்புணர்வை ஊக்குவிக்கும் வகையில் அல்லு அர்ஜுன் ரசிகர் மன்றம் (AAFA) HPV தடுப்பூசி முகாமை தொடங்கியுள்ளது!.

ஐகான் ஸ்டார் அல்லு அர்ஜுனின் ‘ஒவ்வொரு ஆண்டும் ஒரு நல்ல செயல்’ என்ற நோக்கத்தை முன்னெடுத்து செல்லும் வகையில், அல்லு அர்ஜுன் ரசிகர் மன்றம் (AAFA) செயல்பட்டு வருகிறது. அந்த வகையில், சமூக பொறுப்புணர்வை வெளிப்படுத்தும் விதமாக பெண்கள் நலன் மற்றும் பொதுச் சுகாதார விழிப்புணர்வை மையமாகக் கொண்டு HPV தடுப்பூசி இயக்கத்தை தொடங்கியுள்ளது.

வருகிற ஏப்ரல் 8ஆம் தேதி நடிகர் அல்லு அர்ஜுனின் பிறந்தநாளை முன்னிட்டு வாரம் முழுக்க கொண்டாட்டங்களை ரசிகர்கள் முன்னெடுத்து வருகின்றனர். சமூகசேவைக்கான அர்த்தமுள்ள முயற்சியாக இந்த கொண்டாட்ட வாரத்தை மாற்றும் நோக்கில் HPV தடுப்பூசி இயக்கம் முன்னெடுக்கப்படுகிறது.

பெண்களை அதிகமாக பாதிக்கும் புற்றுநோய்களில் ஒன்றான கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோயை தடுப்பதில் முக்கிய பங்கு வகிக்கும் ஹியூமன் பாப்பிலோமா வைரஸ் (HPV) தடுப்பூசியின் அவசியத்தை பொதுமக்களிடம் கொண்டு சேர்ப்பதே இந்த முயற்சியின் முக்கிய நோக்கம். மேலும், சுகாதார பழக்கங்களை ஊக்குவித்து ஆரோக்கியமான சமூகத்தை உருவாக்க அல்லு அர்ஜுன் ரசிகர் மன்றம் முனைப்புடன் செயல்படுகிறது.

’நாளை நம் மகள்களை கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோயிலிருந்து காப்பாற்றவே இன்று ஒரு தடுப்பூசி’ என்ற கேப்ஷனுடன் குடும்பங்களிலும் சமூகத்திலும் இந்த தடுப்பூசி மற்றும் சுகாதார விழிப்புணர்வின் முக்கியத்துவம் வலியுறுத்தப்படும்.

இந்த திட்டத்தின் ஒரு பகுதியாக, பொதுமக்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், தடுப்பூசி நடவடிக்கைகள் மற்றும் பெண்களின் ஆரோக்கிய பாதுகாப்பை மேம்படுத்தும் செயல்களும் நடைபெறும்.

நேர்மறையான சமூக மாற்றத்திற்காக செல்வாக்கையும் கூட்டு பலத்தையும் பயன்படுத்த வேண்டும் என்ற நடிகர் அல்லு அர்ஜுனின் எண்ணத்துடன் ஒத்துப்போகும் வகையில், சமூக சேவைக்கான அல்லு அர்ஜூன் ரசிகர் மன்றத்தின் தொடர்ச்சியான அர்ப்பணிப்பை இந்த முன்னெடுப்பு பிரதிபலிக்கிறது.

Related posts

Nanbiye video song from #Teddy.

Jai Chandran

ராம் சரணின் “பெத்தி” பட பத்திரிகையாளர் சந்திப்பு..

Jai Chandran

Studio9 Productions Next Production Announcement on Jan 14t

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend