Trending Cinemas Now
சினிமா செய்திகள் விமர்சனம்

நீளிரா (பட விமர்சனம் )

படம்: நீளிரா

நடிப்பு: நவீன் சந்திரா, சனத், கபிலா வேணு, ரூபா கொடுவாயூர், சித்து குமரேசன், விது, நவ யுகா, சுவாதி கிருஷ்ணன், நமச்சிவாயம் தம்பி பிள்ளை, கயல் வின்சென்ட், ரோஹித்

தயாரிப்பு: கார்த்திகேயன் எஸ், கார்த்திக் சுப்புராஜ்

இசை: கே

ஒளிப்பதிவு: செல்வரத்தினம் பார்த்திபன்

இயக்கம்: சோமீதரன்

பிஆர்ஓ : நிகில் முருகன்

1988 காலகட்டத்தில் இலங்கை ராணுவத்திற்கும்,
தமிழ் போராளிகளுக்கும் யுத்தம் நடந்து வந்தது. அப்போது  இந்தியாவிலிருந்து அமைதிப்படை என்ற பெயரில் இலங்கைக்கு இந்திய துணை ராணுவம் சென்றது. போர் சூழலில்  இலங்கை கிராமப்புற பகுதியில் ஒரு வீட்டில் திருமண விழா நடந்து கொண்டிருக்க அங்கு அமைதிப்படையினர் நுழைகின்றனர். வீட்டுக்குள் தமிழ் போராளிகள் இருக்கிறார்களா என்று சல்லடை போட்டு தேடுகிறார்கள். துப்பாக்கி முனையில் திருமண வீட்டாரை மிரட்டுகிறார்கள். எந்த நேரத்திலும் துப்பாக்கிக் குண்டு சீறிபாயும்   என்ற நிலையில் அந்த குடும்பத்தில் திருமணம் நடந்ததா? இல்லையா? என்பதற்கு கிளைமாக்ஸ் பதில் கூறுகிறது.

இலங்கை போர் குறித்து இதுவரை பல்வேறு படங்கள் வந்திருக்கின்றன. அந்த படம் எல்லாமே தமிழ் போராளிகளுக்கும் , சிங்கள ராணுவத்தனருக்கும் இடையே நடந்த மோதல்கள் பற்றி பேசப்பட்டு வந்தது ஆனால் நீளிரா படத்தை பொறுத்தவரை போர்ச் சூழலில் ஒரு இலங்கை குடும்பத்தில் திருமணம் எப்படி நடைபெறுகிறது என்பதை ஒரு இரவில் சொல்லி முடிக்கும் கதையாக உருவாகி இருக்கிறது. இந்த சூழல் எப்படி இருக்கும் என்பதை இங்கு வார்த்தைகளால் விளக்குவது துல்லியமாக இருக்காது அதை தியேட்டரில் சென்று படமாக பார்த்தால்தான் காட்சியில் நடித்தவர்கள் எப்படி நடித்திருக்கிறார்கள், கல்யாண குடும்பத்தில் திடீரென்று ராணுவத்தினர் நுழைந்து துப்பாக்கி முனையில் மிரட்டினால் அந்த குடும்பம் உயிர் பயதில் எப்படி தவிக்கும், வயது பெண்கள் மானத்திற்காக எப்படி பதுங்குவார்கள் என்பதை எல்லாம் கண்முன் நிகழும் காட்சிகளாக காண முடியும்.

திருமணம் நடத்தும் குடும்பத்தினராக வேணு, ரூபா கொடுவாயூர், சித்து குமரேசன், விது, நவ யுகா, சுவாதி கிருஷ்ணன், நமச்சிவாயம் தம்பி பிள்ளை, கயல் வின்சென்ட், ரோஹித் போன்றவர்கள் ஒரு குடும்பமாகவே வாழ்ந்திருக்கிறார்கள். அவர்கள் நடிக்கவில்லை நிஜமாகவே ராணுவத்தினரை கண்டு நடுங்கி இருக்கிறார்கள்.

நவீன் சந்திரா அமைதிப்படை கேப்டனாகவும், சனத் தமிழ் போராளியாகவும் நடித்திருக்கிறார்கள். குறிப்பாக நவீன் சந்திரா ஹீரோவாக படங்களில் நடிப்பவர் என்றாலும் இந்த படத்தைப் பொறுத்தவரை கொஞ்சம் எதிர்மறை கதாபாத்திரம் ஏற்றிருக்கிறார் ஆனாலும் அவர் காட்டும் நடிப்பில் முரட்டுத்தனம் இருந்தாலும் அவரை வெறுக்க முடியவில்லை.

நீளிரா என்றால் நீண்ட இரவு என்று பொருள். இலங்கை மக்களின் வாழ்வியலை சொல்லும் இப்படத்தை கார்த்திகேயன் எஸ், கார்த்திக் சுப்புராஜ் தயாரித்திருக்கிறார்கள்.

சிறுவயதில் இலங்கையில் தான் கண்டு பயந்த போர் சூழலில் நடந்த உண்மை நிகழ்வை மையமாக வைத்து இப்படத்தை இயக்கி இருக்கிறார் இயக்குனர் சோமீதரன். திருமணம் பற்றி சொல்லப் போகிறேன் என்று தொடங்கி அதில் ஒரு போர்ச்சூழல் திரில்லரை இணைத்திருப்பது எதிர்பாராத திரைக்கதை. சோமீதரண் மறைந்த இயக்குனர் பாலு மகேந்திராவின் சீடர் என்பது குறிப்பிடத்தக்கது.

பீரங்கி இல்லை, பெரிய துப்பாக்கிகள் இல்லை, ராக்கெட் லான்சர்கள் இல்லை ஆனால் இசை மூலமே ஒரு போரை நகழ்த்தி காட்டியிருக்கிறார் இசையமைப்பாளர் கே.

ஒளிப்பதிவாளர் செல்வரத்தினம் பார்த்திபன் காட்சிகளுக்கு உயிரூட்டியிருக்கிறார்.

நீளிரா – போருக்குள் முளைக்கும் பெண்ணின் வாழ்க்கை.

Review By
K. Jayachandhiran
www.trendingcinemasnow.com

Related posts

கல்யாணராமன் பட இயக்குனர் ஜி.என்.ரங்கராஜன் காலமானார்..

Jai Chandran

14வயது கடலூர் சிறுமி பலாத்கார வழக்கு தீர்ப்பு: ம நீ ம ஶ்ரீப்ரியா வரவேற்பு

Jai Chandran

மதிமாறன் பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு !

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend