Trending Cinemas Now
சினிமா செய்திகள் விமர்சனம்

சாத்தான் தி டார்க் (பட விமர்சனம் )

படம்: சாத்தான் தி டார்க

நடிப்பு : எஃப் ஜே, அயிரா மோனா பெட்ரி, சாந்தினி தமிழரசன்

தயாரிப்பு: எட்வர்ட்

இசை :அஸ்வின் கிருஷ்ணா

ஒளிப்பதிவு : பாலா ஜி ராமசாமி

இயக்கம்: மணிகண்டன் ராமலிங்கம்

பி ஆர் ஓ : ஸ்ரீ வெங்கடேஷ்

கடவுள் நம்பிக்கை உள்ளவர்களுக்கும் சாத்தான் நம்பிக்கை உள்ளவர் களுக்கும் இடையே நடக்கும் ஒரு அமானுஷ்ய மோதல் தான் சாத்தான் தி டார்க்.

மலைப்பகுதியில் உள்ள அஸ்தினாபுரம் பகுதியைச் சேர்ந்த மக்கள் சாத்தான் வழிபாடு மேற்கொள்கின்றனர். சாத்தானுக்கு உயிர்பலி கொடுத்தால்தான் ஊரில் மக்கள் நலமாக வாழ முடியும் என்ற நம்பிக்கை கொண்டவர்கள். அதே ஊரில் கிறிஸ்து இயேசுவின் நம்பிக்கை கொண்டவராக இருக்கிறார் சாந்தினி. ஒரு கட்டத்தில் தன் கணவர் இறந்து விட அவரும் கடவுள் மீது நம்பிக்கையை கைவிட்டு சாத்தானை பின்பற்றுகிறார். இதற்கிடையில் அந்த ஊரில் பல்வேறு அமானுஷ்ய திகில் சம்பவங்கள் நடக்கின்றன. அதற்கு காரணம் யார்? இந்த ஆபத்திலிருந்து அந்த ஊர் மக்கள் மீண்டார்களா? என்பதற்கு கிளைமாக்ஸ் பதில் சொல்கிறது.

பட கதையை தொடக்கத்தில் சொல்லப்படும் முன்னுரையில் இருந்து பார்த்தால்தான் கதையை ஓரளவுக்கு புரிந்து கொள்ள முடியும் என்பதால் தொடக்க காட்சிகளை மிஸ் செய்யாமல் பார்ப்பது அவசியம்.

அயிரா, மோனா பெட்ரி மற்றும் ஒரு சிறுமி ஆகிய மூன்று பேர்தான் பிரதான கதாபாத்திரங்களாக நடித்திருக்கிறார்கள்.
தொடக்கத்தில் அயிரா மற்றும் ஹீரோ எப்ஜே ஆகியோரின் காதல் காட்சிகளை பார்க்கும்போது இது ஏதோ சாதி மாறி திருமணச் சிக்கலாக இருக்குமோ என்று என்ன தோன்றுகிறது ஆனால் போகப் போக இது ஒரு திகில் கதையாக மாறுவது ரசிகர்களை கொஞ்சம் கொஞ்சமாக பதற்றத்தில் தள்ளிவிடுகிறது.

பேய் பிடித்தவர்போல் மோனா பெட்ரி தன் மகள்களிடமே மிரட்டல் காட்டி பயமுறுத்தி கொல்ல துணியும் காட்சிகள் எல்லாம் திகிலோ திகில்.

காதலி அயிராவுக்கு உதவுவதற்காக வரும் காதலன் எப் ஜெ திடீர் சிக்கலில் மாட்டிக் கொள்வதும் அதற்காக பயந்து வெளியேறி விடாமல் கடைசிவரை போராடி சாத்தான் அடாவடிகளை எதிர்ப்பதெல்லாம் கதா பத்திரத்தை துணிச்சல் மிக்கதாக்குகிறது.

எதிர்பாராத கதாபாத்திரத்தில் சாந்தினி தமிழரசன தன்னை தாக்க வரும் ஊர் மக்களை ஒற்றையாளாக நின்று எதிர்த்து சண்டை போட்டு ஆக்சன் அதிரடி காட்டுவது சாந்தினியிடம் காணப்படும் புதுமை.

படத்தை எட்வர்ட் தயாரித்திருக்கிறார்.
அஸ்வின் கிருஷ்ணா இசை படத்திற்கு திகில் கிளப்பும் அதிரடி யை காட்டி இருக்கிறது

பாலா ஜி ராமசாமி ஒளிப்பதிவு மேக்கப் மேனின் ஒத்துழைப்புடன் பயமுறுத்திருக்கிறது

மத மோதலாக மாற்றாமல் சாத்தான் நடத்தும் அராஜக அமானுஷ்யத்தை இயக்குனர் மணிகண்டன் ராமலிங்கம் சொல்லியிருக்கிறார்.

சாத்தான் தி டார்க் – திகில் பட பிரியர்களுக்கு தீனி போடும்.

 

Review by

K.Jayachandhiran

Trending cinemas now.com

 

Related posts

கதையோடு உருவாகியிருக்கும் நகராதே பாடல்.

Jai Chandran

மின் கட்டண கோரிக்கை குறித்து தங்கர் பச்சான் விளக்கம்..

Jai Chandran

A grand tribute event To Chief Minister Vijay

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend